பாச்சாரபாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாச்சாரபாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 மே, 2013

மறைந்துபோன சுவடுகள் : கீழுர் பாளையக்காரர்களின் அரண்மனை கிணறுகள்.



அரண்மனை கிணறுகள் :

       கீழுர் பாளையக்காரர்களின் அரண்மனையில் எஞ்சியுள்ள மிச்சங்கள் இந்த கிணறுகள்தான். எஞ்சியுள்ள மிச்சமும் மிக விரைவில் அழிந்துப்போகும் நிலத்தில் நீர் இல்லாமல்.

1.       அரண்மனை கிணறு :

அரண்மனையில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டுள்ள கிணறு/கேணி. இக்கிணறு அரண்மனையின் மையப்பகுதியில் இருந்துள்ளது. கீழுர் பாளையக்காரர்களின் வீட்டு பெண்களை வெளி ஆட்கள் யாரும் பார்த்துவிட கூடாது என்பது அவர்களின் எழுதப்படாத விதியாகவே இருந்துள்ளது. அதனாலேயே இக்கிணறு அரண்மனையின் மையத்தில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.




2.       கொட்டடி கிணறு :

இக்கிணறு அரண்மனையின் சமையலுக்கு தேவையான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்க்காக வெட்டப்பட்டுள்ளது. இக்கிணறு அரண்மனையின் தெற்கில் உட்புறமாக இருந்திருக்க வேண்டும்.



 3.       தங்கசாமி கிணறு :

இக்கிணற்றிற்க்கு தற்காலத்தில் மட்டுமே தங்கசாமி கிணறு என பெயர் வந்திருக்க வேண்டும். ஏனெனில் நான் சிறு பிள்ளையாக இருக்கும்போதுதான் இந்த தங்கசாமி பாளையக்காரர் இறந்தார். அவரின் பெயரால் தான் இக்கிணறு வழங்கப்பட்டு வருகிறது. ஆதியில் இது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது எனத் தெரியவில்லை. இக்கிணறு அரண்மனையின் கிழக்கு புறத்தில் இருந்துள்ளது.

இக்கிணறு இருளந்தோட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது. அதாவது இருளர்கள் கீழுர் பாளையக்காரர்களின் பல்லக்கு தூக்கிகள். அதனாலேயே இவர்கள் அரண்மனைக்கு மிக அருகில் கிழக்கு புறமாக குடி அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் இக்கிணறு அவர்களின் குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்டிருக்க வேண்டும்.




4.       துளுக்கன் கிணறு :

இங்கு துளுக்கன் என்பது இசுலாமியர்களை குறிக்கிறது. இவர்கள் வட நாட்டில் பாஞ்சால தேசத்தை ஆட்சி செய்து வந்த காலத்திலிருந்தே இவர்களுக்கும் இசுலாமியர்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்துள்ளது. இவர்களின் திருமண நிகழ்ச்சியின் போது இசுலாமியர்கள்தான் வெண்குடை ஏந்தி முன்செல்வார்களாம். மேலும் இவர்களுக்கு அரண்மனையின் கணக்கு வழக்கு சம்பந்தமான பொருப்புகளும் அளிக்கப்பட்டிருந்திருக்கிறது. அதனாலேயே இவர்களுக்கு அரண்மனையை ஒட்டி மேற்க்கு புறத்தில் இடம் ஒதுக்கி இவர்களை அருகிலேயே வைத்திருந்துள்ளனர். இக்கிணறு அரண்மனையின் மேற்க்கு புறத்தில் இருந்துள்ளது. இது இசுலாமியர்களின் குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்டிருக்க வேண்டும்.




5.       தெரு கிணறு :
இக்கிணறு அரண்மனையின் தெற்க்கில் இருந்துள்ளது. இது ஊர் மக்களின், வழிப்போக்கர்களின் குடிநீர் தேவைக்காக, தாகம் தீர்க்க வெட்டப்பட்டிருக்க வேண்டும். மேலும் இக்கிணறு தற்போது சுவடே இல்லாமல் துந்துபோயுள்ளது.

குறிப்பு : அரண்மனை மற்றும் கொட்டடி கிணற்றைத் தவிர்த்து ஏனைய கிணறுகள் அரண்மனையின் உட்புறத்தில் இருந்தனவா அல்லது அரண்மனைக்கு வெளிப்புறத்தில் இருந்தனவா என்பதும் அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் எனக்கு தெரியாது. ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். ஆனால், இவ்வைந்து கிணறுகளும் அரண்மனையை சார்ந்தவையே.

புதன், 15 மே, 2013

மறைந்துபோன சுவடுகள் : கீழுர் பாளையக்காரர்களின் கொடியும் போர்வாளும்



எந்த ஒரு நாட்டிற்க்கும் இன்றும் அன்றும் அடையாளமாக விளங்கியது/விளங்குவது அவர்களின் கொடிதான். அக்கொடியை வடிவமைப்பதில் மிக கவனமாக இருந்திருப்பார்கள்/இருப்பார்கள். ஒரு நாட்டின் கொடியின் விளக்கத்தை வைத்தே அந்நாட்டின் தன்மையையும் வளமையையும் அளவிடலாம்.

நான் இங்கே தெரிவிக்கப்போவது கீழுர் பாளையக்கார அரசின் கொடியைப்பற்றிதான். அக்காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் தங்கள் நாட்டின் கொடியை பெரும்பாலும் கிடைமட்டமான முக்கோண வடிவத்திலேயே அமைத்திருந்தனர். அதற்க்கான காரணம் எனக்கு தெரியாது. கீழுர் பாளையக்காரர்களின் கொடியும் அத்தகைய கிடைமட்ட முக்கோண வடிவிலான கொடிதான்.

கீழுர் பாளையக்காரர்களின் கொடியானது காவி வண்ணத்தில் கிடைமட்ட முக்கோண வடிவத்தில் நீண்டு காணப்படும். கொடியின் மையத்தில் வெள்ளை நிற பசு ஒன்று முன்னோக்கி நின்றவாறு காட்சி தரும். இதுதான் அக்கொடி. நானே வரைந்தது.



18ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தற்போது பாச்சாரபாளையம் என்று அழக்கப்படும் பகுதிக்கு வந்து பாளையம் அமைத்து வடகுத்து ஜமீனிடமிருந்து 8 கிராமங்களை சூழ்ச்சியால் கைப்பற்றி புகழ்பெற்ற பாளையக்காரராக விளங்கிய “ஆன தாண்டவ ராய பாச்சாள நயினார்” அவர்களின் போர்வாள்தான் இது.



கிட்டதட்ட 400 ஆண்டுகள் பழமையான இப்போர்வாள் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதுதான் வருத்தத்திற்குரிய சேதியாக இருக்கிறது.

இவ்வாளினைப் போலவே அளவில் இதை விட சற்று குறைவான இரண்டு போர்வாளும் ஒரு குத்து வாளும் இருக்கிறது. ஆனால், அது வேறொருவரிடம் இருக்கிறது. அதனால் அதனைப் பெறுவதில் ஒரு சிறு சிக்கல்.

பல பேரின் உயிர் குடித்த போர்வாள், சரியான பராமரிப்பு இல்லையென்றாலும் கூர் மங்காமலேயே இருக்கிறது.

இப்போர்வாளினை ஒத்த வார்த்தெடுக்கப்பட்ட போர்வாளினை கீழுர் பாளையக்காரர்களின் உறவு முறை ஜமீங்களான அரியலூர், வட கால் போன்ற ஜமீங்களிலும் காணலாம்.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

பாச்சாரபாளையம் : வன்னிய சாதி வெறி..!!??

            எல்லோரும் என்னய்யா நெனச்சிகிட்டு இருகீங்க.. தருமபுரி கலவரம் பற்றி அங்க இருந்த உண்மை நிலவரம் எனக்கு சரியா தெரியாது. ஆனால் பாச்சாரபாளையம் என் பக்கத்து ஊரு.

யாராவது பாச்சாரபாளையம் பிரச்சனைய எழுதுவாங்க, அப்புறமா நாம பதில் சொல்ல்லாம்னு நெனச்சன். அதனாலதான் இப்ப எழுதறன். தருமபுரி அளவுக்கு பெருசா பேசப்படலனாலும், எல்லோரும் சொல்லிவச்ச மாதிரி வன்னிய சாதி வெறி தாக்குதல்னே சொல்றீங்க.

இதெல்லாம் பாக்கும்போது தருமபுரியும் இதுமாதிரி திரித்துவிடப்பட்ட செய்தியாக இருக்குமோனு சந்தேகம் வலுக்கிறது.

உங்களுக்கெல்லாம் பாச்சாரப்பாளையத்தைப் பத்தி என்ன தெரியும். பாச்சாரபாளையம் ஒன்னும் சாதி மத பேதமில்லாத காந்திய கிராமம்னு சொல்லல. எல்லா ஊருங்களைப்போலவே சாதீய கட்டுப்பாடுகள் கொண்ட கிராமம்தான். இருந்தாலும் மாற்று சாதிக்காரன் வளர்ச்சியை கண்டு கோவப்படுற அளவுக்கு அங்க யாரும் இல்ல. அங்க மட்டும் இல்ல, எங்க சுற்றுவட்டாரத்துலயே அந்த மாதிரியான ஈனபுத்தி யாருக்கும் கிடையாது. அவன் சம்பாதிக்கிரான் நல்லா இருக்கான் அவ்ளோதானு சொல்லிட்டு போய்டுவாங்க.

பாச்சாரபாளையம் சாதாரணமாகவே கலவர பூமிதான். கீழுர் ஊராட்சியில அதிகமான கலவரம், காவல்துறையினர் குவிப்பு எல்லாம் அங்கதான் நடந்திருக்கு. பொதுவா உள்ளாட்சி தேர்தலின் போதுதான் பதட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பா பாச்சாரபாளையம், கீழுர், ஆயிப்பேட்டை ஆகிய வாக்கு சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக இருக்கும்.

கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி திருமாவளவன் கொடி ஏற்றுவதற்க்கு பாச்சாரபாளையம் வருகிறார் என்ற செய்தியால் ஒரு பெரிய கலவரமே நடந்துச்சு. அதுமாதிரி இப்ப நடந்து, வன்னிய சாதி வெறி-னு சொன்னீங்கனா.. அதுல ஒரு ஞாயம் இருக்கு.

ஆனா இங்க நடந்திருக்கறது அந்த மாதிரியான விடயமா..!!?

ரெண்டு பேருக்குள்ள சண்ட நடந்து அவங்கள்ள ஒருத்தன் வன்னியனாவும், இன்னொருத்தன் தாழ்த்தப்பட்டவனாவும் இருந்தா, அந்த சண்டைக்கு பேரு வன்னிய சாதி வெறி தாக்குதல், என்ன ஏதுனெல்லாம் விசாரிக்க மாட்டீங்க. அப்படிதானே சொல்ல வரீங்க.

அங்க நடந்தது ரெண்டுபேருக்கு இடைப்பட்ட சண்டை இல்ல, ஊருக்கும் காலணிக்கும் இடையேயான சண்டைனு நெனச்சீங்கனா இதையும் தெரிஞ்சிக்குங்க. ஒரு ஊருல ஒரே பட்டம் கொண்ட எல்லா வன்னியனும் பெரும்பாலும் ஒருத்தனுக்கு ஒருத்தன் சொந்தக்காரனாதான் இருப்பான்.

ஒரு பொம்பள புள்ளையோட சடைய புடிச்சி இழுத்து, உன்மையாவே இவ்ளோ நீட்டா இல்ல சௌரி முடியானு பாத்தேனு சொன்னா அவன் எந்த சாதிக்காரனா இருந்தாலும் அடிக்கத்தான் செய்வாங்க. அப்படி அடிச்சதுக்கு பேரு சாதி வெறினா..!!?, தான் வீட்டு புள்ளைய அவமானப்படுத்துனவன தட்டி கேட்ட அந்த சாதிவெறி கண்டிப்பா இருக்கத்தான் செய்யும். இதுக்கு பேரு சாதி வெறி-னா, எல்லா வன்னியனும் சாதி வெறியந்தான். இந்த மாதிரியான சாதி வெறிக்கு அவன் பெருமைப்படதான் செய்வான்.

அடுத்தது, வீட்ட கொளுத்தி அவங்கள பொருளாதாரரீதியில் நசுக்குவது. இந்த விடயத்த கூட இருந்து பாத்தவங்க மாதிரியே சொல்றது. இத பத்தி சொல்றதுக்கு முன்னாடி இன்னொன்ன சொல்லிடறன்.

சில வருடங்களுக்கு முன்னாடி இதே மாதிரி ஊருக்கும், காலனிக்கும் இடையே பிரச்சனை. அந்த சண்டையில் மூன்று “மோட்டார்” கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. அவை மூன்றுமே வன்னியருக்கு சொந்தமானவை.

இப்போது, இவங்க ரெண்டு கூரையை கொளுத்தியிருக்காங்க. மொத்தமா எட்டு குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளதாக சொல்றாங்க. ஆனால், ஊர்காரங்க கொளுத்தனது ரெண்டு மீதி ஆறு எப்படி எரிஞ்சுது..!!? அதுவும் பொருட்கள் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு. இவங்க வீட்ட கொளுத்தினது சரினு சொல்ல வரல. ஆனால், அவங்களுக்கு வேற என்ன செய்யறதுனு தெரியல அவ்ளோ ஆத்திரம், கோவம்..

இந்த கோவம் இந்த ஒரு சம்பவத்துக்காக இல்ல. இது ஏழாவது சம்பவம்.

சரியாக ஓராண்டுக்கு முன்னால், இப்போது நடந்துள்ள சம்பவத்தை போல, பல மடங்கு வன்மையான சம்பவம் நடந்திருக்கும். குடும்ப மானம் போய்விடுமேனு அமைதியாக விட்டுவிட்டனர். அதனாலேயே துளிர்விட்ட கயவர்கள் இப்படி செய்திருக்கின்றனர்.

தோப்புக்கு ஆடு மேய்க்க போன உன் வீட்டுப் புள்ளைய ரெண்டு வெறி புடிச்ச நாய்ங்க பலாத்காரம் செய்ய பாத்து முடியாம, கழுத்த முரிச்சு, மயக்கமானதும், செத்துட்டானு நெனச்சி கிணத்துல தூக்கி வீசிட்டு போய்ட்டா... சேதி தெரிஞ்சா சும்மா இருப்பீங்களா..!!? அவனுங்கள அடிச்சா அதுக்கு பேரு சாதி வெறியா..!!!? இதே பாச்சாரபாளையத்துல நடந்த சம்பவம்தான் இது. இந்த சேதி உங்க யாருக்காவது தெரியுமா..!!? அந்த வெறி புடிச்ச நாய்ங்க பாச்சார பாளையம் காலனியை சேர்ந்தவனுங்கதான். வெளிய தெரிஞ்சா மானம் போய்டுமேனு எந்த பிரச்சனையும் செய்யாம மறைக்கப்பட்ட சம்பவம்தான் இது. இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு..!!?

இப்ப நடக்குற இந்த பிரச்சனையால வீட்ட எரிச்சது மட்டும்தானே உங்களுக்கு தெரியும்.
ஒரு ஏக்கர் பன்னீர் கரும்பு தோட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது தெரியுமா உங்களுக்கு..!!? தெரியாது. ஏன்னா, அது வன்னிய சாதியை சேர்ந்தவனுக்கு சொந்தமானது.

கிட்ட்தட்ட 250 பேரு மேல வழக்கு பதிவு பன்னியிருக்காங்க. இதுல 26 பேரு முக்கிய குற்றவாளிகள். இதுல வேடிக்கை என்னனா, சம்பவம் நடந்தப்ப தன் மனைவியின் பிறசவத்துக்காக பாண்டிச்சேரியில் மருத்துவமனையில் இருந்த எங்க ஊராட்சி மன்ற தலைவர் அருள் முருகன் தலைமையிலதான் எல்லோரும் போயி வீடுகளை எரிச்சதா செய்தி ஊடகங்களிலேயே வந்ததுதான். இதுலிருந்தே தெரிஞ்சுக்குங்க என்ன நடந்திருக்கும்னு..

தாழ்த்தப்பட்டவன் என்கிற ஒரு காரணத்தினாலேயே என்ன ஏது என விசாரிக்காமல் அவர்கள் சார்பாக எவ்வளவு குரல்கள். எதுவா இருந்தாலும் ஞாயம் ஒன்னாதான் இருக்கனும்.

இதுக்கு அப்புறமாவது யாரும் பாச்சாரபாளைய பிரச்சனையை சாதிவெறினு சொல்லாதீங்க.. இந்த பிரச்சனையில் இழப்பு வன்னிய சாதியினருக்குதான் அதிகமாக இருக்கும். இருப்பினும் உதவிகள் அனைத்தும் காலனி மக்களுக்கு மட்டுமே இருக்கும். வழக்கம் போல இளிச்சவாயனுங்க வன்னியந்தான்..

ஆனால் ஒன்னு, இந்த பிரச்சனையால எங்க சுற்று வட்டாரத்துல இருக்குற ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களும் தங்கள் தலையில தாங்களே மண்னை வாரி போட்டுகிட்டதுக்கு சமம் ஆகிடிச்சு. இனி எப்ப வேணும்னாலும் என்ன வேணும்னாலும் நடக்கலாம் எதுக்கும் யாரும் உத்திரவாதம் கொடுக்க முடியாது.

மருத்துவர் இராமதாசே வந்து பேசினாலும் ஒன்னும் நடக்காது. தேவையே இல்லாம மருத்துவரோட மரியாதைதான் கொறைஞ்சு போகும். இது புரியாம நெறைய பேரு இராமதாசை குறை சொல்றாங்க. பாவங்க அவரு, அவரால இங்க ஒன்னும் செய்ய முடியாது.