திங்கள், 6 ஜனவரி, 2020

திரௌபதியும் - திரை மறைவு சாதி ஒழிப்பும் - 1

திரௌபதி - மூனு போஸ்டர், ஒரு டிரெய்லர் அவ்வளவு தான் இன்றைய தமிழ் இணைய உலகத்தை அதகலபடுத்திக்கிட்டு இருக்கு. எந்த பதிவையும் முடிக்க முடியாம இருக்குற என்னையவும் இப்படி ஒரு பதிவு எழுத வச்சிருக்குனா பாத்துக்கங்களேன்!

யாரும் எடுக்கத் துணிந்திடாத ஒரு கருத்தை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து இணையமே பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. வெகு சனத்தின் உள்ளக் குமுரல்களாக ஆதரவு குரல்களும் அடி பட்ட பாம்பென எதிர் குரல்களும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. சரி இந்த கதைய அப்புறமா பாக்கலாம். இப்ப என்ன வெளிவந்திருக்குனு பாக்கலாம்.

முதல் படம்
சாதிகள் உள்ளதடி பாப்பா: - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

இதுதாங்க அந்த முதல் படம்
யதார்த்தத்தில் சமூகத்தில் சாதிகள் இருக்கின்றன எனக் கூறி, ஒரு பெண் (படத்தின் நாயகி) சுதந்திர போராட்ட வீரர் தியாகி ஐயா இராஜரிஷி சேலம் அர்த்த நாரீச வர்மா அவர்களின் படம் தாங்கியபடி இருக்கிறார்

இங்கே பல பேருக்கு ஐயா அர்த்தநாரீச வர்மா யாரென்றே தெரியாது. ஆனாலும் இந்த படத்தில் உள்ள வசனத்தை வைத்தே சர்ச்சையானது. இது வழமையானதுதான். இந்த போஸ்டர் வெளியானதும் எனக்கு வந்தது ஒரே கேள்விதான். ஏன் ஐயா அர்த்தநாரீச வர்மா படத்தை வைத்திருக்கிறார்கள் என்பதுதான். ஆசீர்வாதத்திற்கா அல்லது படத்திலும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது படம் வெளிவந்த பின்புதான் தெரியும்.








இரண்டாவது படம்:
அடிச்சா திருப்பி அடி


இந்த போஸ்டர் வசனம் எனக்கு இரண்டு பேரின் வசனங்களை நினைவு படுத்தியது.

திருமாவளவனின் அடங்க மறுஅத்து மீறு; திமிரி எழு; திருப்பி அடி;”
மாவீரன் குருவின் அடிச்சா திருப்பி அடிக்கிறவன்தான்டா சத்திரியன்

உனக்கு  ஏன்டா இப்படி தோனுச்சினு கேக்கறீங்களா.? அது ஏன்னா, இந்த படத்தோட மையக் கரு. நாடக காதல் எதிர்ப்பு விழிப்புணர்வுதாங்க இந்த படத்தின் மையக் கரு.

நிஜத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே படம் எடுக்கப்பட்டிருப்பதாக இயக்குனர் மோகன் ஒருமுறை தெரிவித்ததாக நியாபகம். ஆக, படத்தில் பல விஷயங்கள் நம் பார்வைக்கு வந்ததாகவே இருக்கும் என நினைக்கிறேன்


மூன்றாவது படம்:
நவீன நாடக காதல்காவியம்


இந்த ஒளிப்படத்தில் இருக்கும் இந்த வாசகம் உண்மையிலேயே ஒரு சர்ச்சைதான். ஏன்னா, நம்ம ஊரு புரட்சி, பகுத்தறிவு, தலித் மற்றும் முற்போக்கு வியாதிகளுக்கு நாடக காதல்அப்படிங்கற ஒரு சேதி கெடையவே கெடையாது!. ஆனால், 3 இலட்சத்துக்கு பஞ்சாயத்து மட்டும் பண்ணிவிடுவாங்க. அவ்ளோ நல்லவங்க. சரி, நாம விஷயத்துக்கு வருவோம். இதுவரைக்கும் வந்த இந்த 3 போஸ்டரும் ஒரு விஷயமே கிடையாது இதுக்கு அப்புறம் வந்த டிரைலரோடு ஒப்பிடும்போது. நாம இனி ட்ரைலர்குள்ள போவோம்.

The Trailer: திரை முன்னோட்டம்

இந்த ட்ரைலெர், இதற்கு முன் வெளிவந்த போஸ்டர்களை விட மிக அதிக அளவிலான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு. வெளிடப்பட்ட 24 மணி நேரத்தில் 10 இலட்சம் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்ப்பையும் பெற்றிருக்கு. வெறும் ட்ரைலரை கண்டே சாதிவெறி படம்னு சொல்றாங்க. எதன் அடிப்படையில் சொல்றாங்கனு எனக்கு விளங்கவேயில்லை

இந்த ட்ரைலரின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் இரண்டு மறைமுக வெளிப்பாடுகளை உங்களுக்கு சுட்டிகாட்றேன். 1. முகநூலில் ஒருவர் திடீரென திருமாவளவன் குறித்து மிகவும் நல்லவர், வல்லவர், ஆகச் சிறந்த புரட்சியாளர் என ஒரே புகழாரம், மேலும் அவரை மக்கள் சரிவர புரிந்துகொள்ளவில்லை பயன்படுத்திக்கொள்ளவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். 2. கீச்சுவில் ஒரு பெண்மணி (புரட்சி பெண்மணி) நிச்சயிக்கப்பட்டு நடக்கும் திருமணங்கள்தான் (arranged marriage) நாடக காதல் திருமணங்கள் எனும் ரீதியில் பதிவிட்டிருந்தார்

இவையிரண்டும் திரௌபதி தாக்கத்தின் மறைமுக வெளிப்பாடுதான்நேரடியாக பலர் இது சாதிவெறி படம் அது இதுவென ஏகத்துக்கும் பொருமித்தள்ளிக் கொண்டிருக்கின்றனர். சரி அப்படியென்னதான் இந்த ட்ரைலரில் இருக்கிறது? வாருங்கள் காணலாம்.

இதுவரையும் நீங்கள் திரௌபதி படத்தின் ட்ரைலெரை காணவில்லையெனில், பின்வரும் இந்த நிரலியை சொடுக்கி YouTube தளத்தில் கண்டிப்பாக காணுங்கள்
அஞ்சு கொலை பண்ண மூஞ்சாடா இது…. ஜாதி வெறி புடிச்ச நாயே

...ரெண்டு புல்லட் உள்ள எறங்கனாதன இன்ட்றஸ்டிங்கா இருக்கும்!” 

இப்படிதாங்க அந்த ட்ரைலர் தொடங்குது. ஒரு மூன்று பேர் கொண்ட குழு துப்பாக்கி முனையில் நாயகனை மிரட்டிக்கொன்டிருக்கின்றனர். இந்த காட்சியில எனக்கு பெரிதாக ஒன்றும் புலப்படவில்லை

அக்கியூஸ்ட்டோட பேரு பிரபாகரன்; ஊரு விழுப்புரம்; அவன் வைஃபோட தங்கச்சி வேற காஸ்ட்ல ஒரு பையன கல்யாணம் பண்ணதால அந்த பொண்ணையும் அவன் வைஃபையும் கொலை பண்ணிட்டு அரெஸ்ட் ஆகியிருக்கான்! ”
அட, இந்த காட்சியில் நிறைய பிடிபடும் போல இருக்கே.! பேரு பிரபாகரன், நம்ம தேசிய தலைவரோட பேரு. ஊரு விழுப்புரம்.. அட நம்ம பக்கத்து ஊரு. ஆக அடுத்த வசனம்தான் படம்.! இது நாம அவ்வப்போது செய்திதாட்களிலும் கண்டு கேட்டு திருந்தாத சாதி வெறி பிடித்தவர்கள் என கடந்துபோகும் செய்திதான். ஆனால் இந்த கட்சி ஏன் என படம் வெளியானபின்புதான் தெரியும். அதுவரை நம் கற்பனைகளை விஸ்தரித்து வைக்கலாம்.

வீடியோல்லாம் வேண்டாணே எங்க அப்பா அதெல்லாம் பாத்தா செத்தே போயிடுவாருணே!”

நீ ஓடி வரும்போதே அங்க உங்க அப்பன் உசுர விட்டிருப்பான்!”

இந்த காட்சி வலி கொடுப்பதாகவும் கோவமூட்டுவதாகவும் இருக்கு மக்களே! வீட்டை விட்டு  ஓடி வந்த ஒரு பெண்ணிடம் ஒருவன் மிரட்டலாக பேசுவதைப் போல தெரிகிறது. அப்பெண் நிர்கதியாய் நிற்கிறாள்; அவன், அப்பெண்ணிடம் ஏளனம் பேசுகிறான்

படிக்காதது உன் தப்பு; உன் மனசாட்சியை தொட்டு சொல்லு நீ பண்றது தப்பு இல்ல?”

தப்பே இல்ல! அடங்குனா அடங்ககூடாதுனு எங்க அண்ணன் சொல்லியிருக்கிறாப்ல. பெரிய வூட்டு பொண்ண கல்யாணம் பண்ணா மட்டும்தான் லைஃப் கெத்தா இருக்கும்னு சொல்லியிருக்கிறாப்ல

இந்த காட்சிதாங்க இணையமே பற்றி எரிந்துகொண்டிருப்பதற்க்கு காரணமாக இருக்கும். யாரும் வெள்ளித்திரையில் பேசாத விஷயமும் இதுதான். அய்யா மருத்துவர் இராமதாசு தொடங்கி, சுகி சிவம், வழக்கறிஞர் சுமதி வரைக்கும் நாடக காதல் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் இதுதான். ஒரு இயக்கமாக இதை செய்கிறார்கள் இதனை மட்டுப்படுத்த வேண்டும் தடுக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் அனைவரது விருப்பமாக இருக்கிறது

அடங்குனா அடங்ககூடாதுனு எங்க அண்ணன் சொல்லியிருக்கிறாப்ல” - இது அத்து மீறு; அடங்க மறு-னு நம்ம திருமாவளவன் சொல்லி கொடுத்த மாதிரியே இல்ல.!

திரௌபதி ட்ரைலர் தக தக தக னு கொழுந்துவிட்டு எரிவதற்கு இதுவும் ஒரு காரணம்

அடுத்த காட்சி,

ஜாக் மாதிரி பசங்க மனசுல வெஷத்தை வச்சுட்டானுங்க; அதை மாத்த நாம ஒரு பெரிய புரட்சி பண்ணியாகனும்!”

இங்க நம்ம நாயகன் தவறான வழிக்கு போகிற அதாவது நாடக காதலுக்கு துணை போகிற இளைஞர்களை திருத்த முயற்ச்சி பண்றாருனு நினைக்கிறேன்.!

இதற்கு அடுத்த காட்சிதான், இந்த தலித்திய முற்போக்கு வியாதிகள் இணையத்தில் பொங்க வைப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும்

நான் இப்படி பண்ணலனா, என்னை கொன்னுட்டு, தண்டவாளத்துல போட்டுட்டு, பழிய இவர் மேல போட்டுடுவேன்னு சொன்னாங்க.!”

இந்த காட்சி எனக்கு, அந்த 19 வயசு பையன் தருமபுரி இளவரசன் மரணத்தையும் விழுப்புரம் நவீனா கொலை பாதகன் செந்தில் கை கால் இழந்த சம்பவத்தையும்தான் நினைவூட்டியது

ஆம், மக்களே, இரண்டு மூன்று முறை உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அது தற்கொலைதான் என கூறிய பிறகும் இன்றுவரை அதை கொலை என்றே பொங்க வைத்து பிழப்பு பார்க்கும் அந்த தலித்திய வியாதியர்களை அப்படியே நினைவு படுத்துகிறது.

அடுத்து, சிறுமி நவீனாவை கொலை செய்த அந்த அயோக்கிய நாய் செந்தில். இந்த கொலைகாரனுக்கு ஆதரவாக விசிக கட்சியினர் சுவரொட்டிகளெல்லாம் ஒட்டியிருந்தனர். அன்றைய புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அநீதி நெறியாளராக குணசேகரன் செயல்பட்டு செந்திலை பேட்டி கண்டு விவாதம் நடத்தினர். ஆனால், உண்மையில் குடித்துவிட்டு தண்டவாளத்தில் விழுந்து கை, கால்களை இழந்திருந்தான். இது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது

அம்மனம், பொண்ணுங்களுக்கு மட்டும்தான் அவமானமா! ஏன் உனக்கு இல்ல!”

ப்பாஎன்ன மாதிரியான வசனங்க இதுஅப்படியே சும்மா செவுள்ல அறைஞ்ச மாதிரிசெம ஷார்ப். நம்ம அஜித் படம், “நேர்கொண்ட பார்வை”-ல வருமே ஒரு வசனம், “NO MEANS NO”. அந்த மாதிரி. என்னஅந்த படத்துல கொஞ்சம் திரும்ப திரும்ப சொல்ல வேண்டி இருந்துச்சு. ஆனால், இங்க அதுக்கு அவசியம் இல்ல. பெண்மை போற்றுதும்

இந்த மாதிரி கீழ்த்தரமானவங்கள இப்படிதான் கொடூரமா கொல்லனும்; நீங்க எதை பத்தியும் கவலை படாதீங்க.! உங்களுக்காக நான் அப்பியர் ஆவறேன்!”

இந்த வசனம் நம்ம பொது சனத்தோட பொது வாசகம். அதனால இது ஒன்னும் அவ்வளவா கவனிக்க வேண்டியதில்லை. சமீபத்துல இந்த ஆந்திர மருத்துவர் கொலைக்கு நடந்த என்கவுன்டர்-க்கு ஆதரவு வந்துச்சே; அந்த மாதிரி.

வெவசாய தற்கொலை, கடன் தற்கொலைனு செத்தவன் பாதிபேரு பொண்ணை பெத்தவன்தான்டா

இந்த வசனம் ரொம்ப ஆழமான தகவலை தருகிறது. உட்பொதிந்திருக்கும் செய்தி மனசை உலுக்குது! ஏன் பெண் பிள்ளையை பெற்றவன் மட்டும்.? அப்படினு ஒரு கேள்வியை உங்க மனசுகிட்ட நீங்களே கேட்டு பாருங்க. உங்களுக்கும் இந்த வசனம் சுடும்.

உன் வூட்டு பொண்ண கல்யாணம் பண்ணியிருக்குற பையன்; உங்களுக்கு பயந்துகிட்டு இப்ப யான் பாதுகாப்புலதான் இருக்கான், நான் என்ன சொல்ரனோ அதைதான் அவன் கேட்பான்.”

இந்த காட்சி வசனம் என்ன சொல்லுதுனு புரியுதா மக்களே! இதுதான் நாடக காதலுக்கு முடிவுரையின் முந்தைய கட்டம். பெண் வீட்டுகாரர்களை மிரட்டி பணம் பறிப்பதற்காகவோ அல்லது அவர்களுக்கு தேவையான ஏதோவொன்றை செய்துகொள்ளவோ முயற்ச்சிக்கும் கட்டம். அப்படிதான் யூகிக்கிறேன்

இப்படியான ஒரு சூழலை சந்திக்கும் ஒரு குடும்பத்தாரின் மனநிலை எப்படி இருக்கும், அவர்கள் எந்த மாதிரியான உளவியல் சிக்கலை சந்திப்பார்கள், அவர்களுக்கு ஏற்படும் அவமானம் எத்தகையது, அது சமுகத்தில் எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் என சிந்திக்க, அது குறித்து பேச கூட இங்கு யாரும் இல்லை. அதன் வெளிப்பாடுதான் இன்று துரௌபதிக்கு கிடைத்திருக்கும் ஆதரவு.

ஏய், மண்ட காய்ஞ்சு போயிருக்கன், ஒவ்வொருத்தரையும் துண்டு துண்டா வெட்டி போட்டுருவன்

வெட்டு, அப்படி நீ எது பன்னாலும் அது எங்கலுக்கு சாதகமாதான் மாறும் அதையும் பன்னு!”



மீதமுள்ளவற்றை நாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்... ஒரு சமீபத்திய சேதி, திங்களன்று (07-01-2019) கோவை இராமகிருஷ்ணன் திரௌபதி படத்தை தடை செய்ய சொல்லி புகார் அளிக்க போகிறாராம். 

இதன் தொடர்ச்சியை முடிந்தால் இவருடன் சேர்த்தே காணலாம்...
(எழுத்துப் பிழைகள் சொற்ப்பிழைகள் ஏதெனுமிருப்பின் பொருத்தருளவும்... இது அவசர வெளியீடு...)

6 கருத்துகள்:

  1. தடை மீரி படம் வெளிவர நாம் அனைவரும் ஒன்று படவேண்டும்

    பதிலளிநீக்கு
  2. படம் கண்டிப்பாக வெள்ளித்திரைக்கு வந்தே தீரும் மருத்துவர் அய்யா ஆசியுடன்

    பதிலளிநீக்கு