"சென்னை - திரௌபதி படத்தை வெளியிட தடை கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் புகார் மனு"
எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல.. எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல-னு எதுக்கு இப்படி இராமகிருஷ்ணன் துள்ளி குதிச்சு ஓடுறாருனு தெரியல... ஒரு வேளை கௌசி 3 இலட்ச ரூபாய் with 3 EMI மேட்டரும் இப்படி பட்ட ஒரு சம்பவத்தோட தொடர்புடையதா இருக்குமோ.!!! ஒரு சின்ன கணக்கீடு போடுவோம்:
Named Love + Marriage + Money = நாடக காதல்
Multiple Love of Shakthi (Named) + Kowsi Marriage + 3 Lakhs with EMI facility.
OMG.!!! It matches perfectly.!!!!
பாருங்களேன், நம்ம சின்ன மூளைக்கு எப்படி தப்பு தப்பா தோணினாலும் எவ்வளவு சரியா பொருந்துதுனு!!! ஆக இவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார் போல. ஆக, நாடக காதலில் உடந்தையாக இருக்கும் அனைவரையும் துகிலுறிக்கிறாள் திரௌபதி.
சரி, நாம திரௌபதி திரை முன்னோட்டத்தை தொடருவோம்.!
வீட்டைவிட்டு ஓடிப்போன ஒரு பொண்ணோட வீடு எந்த மாதிரியான மனநிலையில் இருக்கும், அவர்களிடத்தில் ஒருவன் பெண்ணை விட்டு விடுவதற்கான பேரம் பேசினால், பாதிக்கப்பட்டவனுக்கு எவ்வளவு கோவம் வரும். அந்த காட்சிதான் பின்வரும் வசனமாக இருக்கிறது என யூகிக்கிறேன்.
“ஏய், மண்ட காய்ஞ்சு போயிருக்கன், ஒவ்வொருத்தரையும் துண்டு துண்டா வெட்டி போட்டுருவன்”
“வெட்டு, அப்படி நீ எது பன்னாலும் அது எங்கலுக்கு சாதகமாதான் மாறும்; அதையும் பன்னு!”
அப்படி கடுங்கோவத்தில் இருப்பவர்களிடம், அவர்களால் மேன்மேலும் ஏதும் செய்ய முடியாது என அவர்களுக்கு இயலாமையை ஏற்படுத்தினால், அவர்களின் உள்ளத்தில் அழுத்தி வைக்கப்படும் கோவத்தின் வெளிப்பாடு எவ்வளவு உக்கிரமாக இருக்கும். அத்தகைய நிலையைதான் மேலேயுள்ள அந்த இரண்டாவது வசனம் ஏற்படுத்துகிறது.
தன்னால் ஏதும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கிறோமே என உள்ளத்தில் புழுங்கி பொங்கி வரும் இயலாமையின் வெளிப்பாட்டை எவர் ஒருவராலாவது தாங்க இயலுமா.!? சாது மிரண்டால் காடு கொள்ளுமா.!!??
அடுத்த காட்சி:
"இந்த கிராமத்துக்குள்ள யார் வரனும், யார் கால் வைக்கனுங்கறத நாங்கதான்டா முடிவு பண்ணுவோம். இதுக்கு அப்புறம் இவனையும் இவனுங்க ஆளுங்களையும் நம்ம கிராமத்துல எங்க பாத்தாலும் வகுந்து எடுங்கடா; என்ன ஆனாலும் நான் பாத்துக்கறன்"
ஏதோ ஒரு கிராம பஞ்சாயத்து, குற்றம் செய்தவர்கள் ஒரு குழுவாக எதையோ செய்திருப்பார்கள் போல, நாட்டாமை படத்துல ஊரை விட்டு ஒதுக்கி வைக்கறதபோல, அவங்கள கிராமத்துக்குள்ள வரக்கூடாதுனு சொல்றாங்க. மீறி வந்தா அடிச்சி தொரத்த சொல்றாங்க. இது வழமையான ஒரு சினிமா வசனம் போலதான் எனக்கு படுது.
"கருணா, அவன் ஊரு மண்ணுல நாம கால வைக்கனும்னா, அவன் வூட்டு பொண்ணு மேல நாம கைய வச்சே ஆகனும்!"
இது முந்தைய கட்சியோட தொடர்ச்சி மாதிரி தெரியுது. ஆனா, எனக்கு ஒன்னு வெளங்கல, ஊருக்குள்ள வர்றதுக்கு எதுக்கு பொண்ணுமேல கைய வைக்கனும்.!!??? ஒருவேளை, கலப்பு திருமணம் செஞ்சா ஜாதி ஒழிஞ்சிடும்னு சொல்லி கொடுக்குற முட்டாத்தனமான அறிவு ஜீவிங்க மாதிரியோ..!!! இருக்கலாம்! யார் கண்டா, படம் முழுசா வெளிவந்தாதான் தெரியும்.
இந்த எடத்துல நம்ம திராவிட முற்போக்குகள் வேணும்னா பொங்க வைக்கலாம். ஏன்னா, முக்கிய வில்லனோட அல்லக்கையோட பேரா நம்ம முன்னாள் முதல்வரின் பாதி பெயரை வச்சிருக்காங்க.!
அடுத்ததா வர்ற காட்சி வசனம், ஏகத்துக்கும் செம்ம மாஸா இருக்கு. இணையத்துல நடக்குற களேபரங்களுக்கு இந்த காட்சியும் ஒரு முக்கிய காரணம்.
"எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டுமே முக்கியம். அதுல யாரு கைய வச்சாலும் கைய வெட்டுவோம். என்னனு நெனச்ச..."
இந்த வசனத்தை காட்டிதான், பாருங்க இவனுங்களுக்கு எவ்ளோ சாதி வெறி... அது இது-னு பொலம்பிக்கிட்டு இருக்கானுங்க..!! கலப்பு திருமணம் செஞ்சா வெட்டுவோம்னு சொல்றாங்கனு இந்த வசனத்தை வச்சி தான் பேசுறாங்க... அதை எப்படிதான் கண்டுபுடிக்கிறாங்களோ.!
"பெண்கள் மீது கை வைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல; தலையை!!!" எனும் பாகுபலி பட வசனம் எப்படியோ அப்படிதாங்க இந்த வசனமும். உண்மையா சொல்லனும்னா அதைவிட இது சற்று வன்மம் குறைவுதான். பாகுபலி வசனத்தை ஏற்றுக்கொண்டுவிட்டு திரௌபதி வசனத்தை ஏற்க மறுத்தால், நிச்சயம் நீங்கள் நல்ல மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.
இதுலேர்ந்து ஒன்னு மட்டும் தெரியுது, திரௌபதி வசனத்தை எதிர்க்கிறவங்களுக்கு பாகுபலி வசனம் புடிக்கவேயில்லைனு.!
சரி முடிவுக்கு வருவோம்:
ஆக, இந்த முன்னோட்டத்தில்,
- எந்த சாதியையும் தரக்குறைவாக பேசவில்லை. அப்படி இருப்பதை போலவும் காட்சிப்படுத்தப் படவில்லை.
- எந்த சாதியையும் உயர்த்திப் பேசவும் இல்லை.
- சாதி கலப்பு திருமணங்களை எதிர்ப்பதை போலவும் ஏதும் காட்சிப்படுத்தப் பட்டதாகவும் தெரியவில்லை.
- சாதி வெறியை தூண்டும் விதமாகவும் ஏதும் காட்சிகள் இருப்பதாகவும் தெரியவில்லை
குறியீடுகள்:
- நாயகன் கொலை செய்யும் காட்சியில், தலையில் கருப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான துணியை கொண்டு முகத்தை மூடிக்கொண்டிருக்கிறார். (விஜயகாந்த் கட்சிக்காரரா இருக்கலாம் - தருமபுரி சம்பவத்தில் இறந்துபோன நாகராஜ் (பெண்ணின் தந்தை) விஜயகாந்த் கட்சிக்காரர் : இப்படியும் யோசிச்சு பாருங்க )
- ஒரு காட்சியில், பின்னால் இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் தோழர் கௌசல்யா போல காட்சி தருகிறார். ஆனால், உடனிருக்கும் பெரியவர்தான் யாரென தெரியவில்லை.! (கொளத்தூர் மணி, தோழர் தியாகு, எவிடன்சு கதிர் அல்லது தோழர் இராமகிருஷ்ணன்: சும்மா நாமலா நெனச்சிப்போம்)
- காதல் ஜோடி - தருமபுரி சம்பவம் இளவரசன்
- கைபேசி காணொளி - அபலைப் பெண்ணின் கதறல் - பொள்ளாச்சி சம்பவத்தை நினைவூட்டுகிறது.
- அடங்குனா அடங்ககூடாதுனு அண்ணன் சொல்லியிருக்கிறப்ல - அடங்க மறு; அத்து மீறு;
- வில்லனாக சித்தரிக்கப்பட்டுள்ளவர் - ஒரு சாயலில் லைட்டா தோழர் திருமாவளவன் போல் காட்சியளிக்கிறார்.
பேசு பொருட்கள்:
பெருசா பரிச்சையமில்லாத நாயகன், யாரென்றே தெரியாத இயக்குநர் - ஆனாலும் 25 இலட்சம் பார்வைகளை கடந்துள்ளது திரௌபதி முன்னோட்டம். அது ஏன்னு கொஞ்சம் மனசாட்சியோட யோசிங்க, இந்த படத்தோட அவசியம் புரியும்.
இந்த படத்தின் இயக்குநர்தான் "ஜல்லிக்கட்டு - மெரினா புரட்சி"-யை தொடங்கியவர்.
குடும்பத்தோட போய் பாருங்க. அம்மாவும் பையனும் பாக்கனும்னாலும் பரவாயில்லை; அப்பாவும் பொண்ணும் கண்டிப்பா பாருங்க. திரையரங்கம் செல்ல முடியாவிட்டாலும் தரவிறக்கம் செய்தாவது பாருங்கள் - எனும் இயக்குநரின் அறிக்கை
Crowd Funding
நாடக காதல் ஆதரவாளர்களின் வயிற்றில் புளியை கரைத்திருப்பது மற்றும் மெட்ராஸ், கபாலி, காலா, பரியேறும் பெருமாள் மற்றும் அசுரன் போன்ற படங்களுக்கு எதிர் வினையாகவும் பார்க்கப்படுவது.
ஆக மொத்தத்தில்... ஆக I AM WAITING....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக