வெள்ளி, 14 டிசம்பர், 2012

பாச்சாரபாளையம் : வன்னிய சாதி வெறி..!!??

            எல்லோரும் என்னய்யா நெனச்சிகிட்டு இருகீங்க.. தருமபுரி கலவரம் பற்றி அங்க இருந்த உண்மை நிலவரம் எனக்கு சரியா தெரியாது. ஆனால் பாச்சாரபாளையம் என் பக்கத்து ஊரு.

யாராவது பாச்சாரபாளையம் பிரச்சனைய எழுதுவாங்க, அப்புறமா நாம பதில் சொல்ல்லாம்னு நெனச்சன். அதனாலதான் இப்ப எழுதறன். தருமபுரி அளவுக்கு பெருசா பேசப்படலனாலும், எல்லோரும் சொல்லிவச்ச மாதிரி வன்னிய சாதி வெறி தாக்குதல்னே சொல்றீங்க.

இதெல்லாம் பாக்கும்போது தருமபுரியும் இதுமாதிரி திரித்துவிடப்பட்ட செய்தியாக இருக்குமோனு சந்தேகம் வலுக்கிறது.

உங்களுக்கெல்லாம் பாச்சாரப்பாளையத்தைப் பத்தி என்ன தெரியும். பாச்சாரபாளையம் ஒன்னும் சாதி மத பேதமில்லாத காந்திய கிராமம்னு சொல்லல. எல்லா ஊருங்களைப்போலவே சாதீய கட்டுப்பாடுகள் கொண்ட கிராமம்தான். இருந்தாலும் மாற்று சாதிக்காரன் வளர்ச்சியை கண்டு கோவப்படுற அளவுக்கு அங்க யாரும் இல்ல. அங்க மட்டும் இல்ல, எங்க சுற்றுவட்டாரத்துலயே அந்த மாதிரியான ஈனபுத்தி யாருக்கும் கிடையாது. அவன் சம்பாதிக்கிரான் நல்லா இருக்கான் அவ்ளோதானு சொல்லிட்டு போய்டுவாங்க.

பாச்சாரபாளையம் சாதாரணமாகவே கலவர பூமிதான். கீழுர் ஊராட்சியில அதிகமான கலவரம், காவல்துறையினர் குவிப்பு எல்லாம் அங்கதான் நடந்திருக்கு. பொதுவா உள்ளாட்சி தேர்தலின் போதுதான் பதட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பா பாச்சாரபாளையம், கீழுர், ஆயிப்பேட்டை ஆகிய வாக்கு சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக இருக்கும்.

கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி திருமாவளவன் கொடி ஏற்றுவதற்க்கு பாச்சாரபாளையம் வருகிறார் என்ற செய்தியால் ஒரு பெரிய கலவரமே நடந்துச்சு. அதுமாதிரி இப்ப நடந்து, வன்னிய சாதி வெறி-னு சொன்னீங்கனா.. அதுல ஒரு ஞாயம் இருக்கு.

ஆனா இங்க நடந்திருக்கறது அந்த மாதிரியான விடயமா..!!?

ரெண்டு பேருக்குள்ள சண்ட நடந்து அவங்கள்ள ஒருத்தன் வன்னியனாவும், இன்னொருத்தன் தாழ்த்தப்பட்டவனாவும் இருந்தா, அந்த சண்டைக்கு பேரு வன்னிய சாதி வெறி தாக்குதல், என்ன ஏதுனெல்லாம் விசாரிக்க மாட்டீங்க. அப்படிதானே சொல்ல வரீங்க.

அங்க நடந்தது ரெண்டுபேருக்கு இடைப்பட்ட சண்டை இல்ல, ஊருக்கும் காலணிக்கும் இடையேயான சண்டைனு நெனச்சீங்கனா இதையும் தெரிஞ்சிக்குங்க. ஒரு ஊருல ஒரே பட்டம் கொண்ட எல்லா வன்னியனும் பெரும்பாலும் ஒருத்தனுக்கு ஒருத்தன் சொந்தக்காரனாதான் இருப்பான்.

ஒரு பொம்பள புள்ளையோட சடைய புடிச்சி இழுத்து, உன்மையாவே இவ்ளோ நீட்டா இல்ல சௌரி முடியானு பாத்தேனு சொன்னா அவன் எந்த சாதிக்காரனா இருந்தாலும் அடிக்கத்தான் செய்வாங்க. அப்படி அடிச்சதுக்கு பேரு சாதி வெறினா..!!?, தான் வீட்டு புள்ளைய அவமானப்படுத்துனவன தட்டி கேட்ட அந்த சாதிவெறி கண்டிப்பா இருக்கத்தான் செய்யும். இதுக்கு பேரு சாதி வெறி-னா, எல்லா வன்னியனும் சாதி வெறியந்தான். இந்த மாதிரியான சாதி வெறிக்கு அவன் பெருமைப்படதான் செய்வான்.

அடுத்தது, வீட்ட கொளுத்தி அவங்கள பொருளாதாரரீதியில் நசுக்குவது. இந்த விடயத்த கூட இருந்து பாத்தவங்க மாதிரியே சொல்றது. இத பத்தி சொல்றதுக்கு முன்னாடி இன்னொன்ன சொல்லிடறன்.

சில வருடங்களுக்கு முன்னாடி இதே மாதிரி ஊருக்கும், காலனிக்கும் இடையே பிரச்சனை. அந்த சண்டையில் மூன்று “மோட்டார்” கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. அவை மூன்றுமே வன்னியருக்கு சொந்தமானவை.

இப்போது, இவங்க ரெண்டு கூரையை கொளுத்தியிருக்காங்க. மொத்தமா எட்டு குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளதாக சொல்றாங்க. ஆனால், ஊர்காரங்க கொளுத்தனது ரெண்டு மீதி ஆறு எப்படி எரிஞ்சுது..!!? அதுவும் பொருட்கள் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு. இவங்க வீட்ட கொளுத்தினது சரினு சொல்ல வரல. ஆனால், அவங்களுக்கு வேற என்ன செய்யறதுனு தெரியல அவ்ளோ ஆத்திரம், கோவம்..

இந்த கோவம் இந்த ஒரு சம்பவத்துக்காக இல்ல. இது ஏழாவது சம்பவம்.

சரியாக ஓராண்டுக்கு முன்னால், இப்போது நடந்துள்ள சம்பவத்தை போல, பல மடங்கு வன்மையான சம்பவம் நடந்திருக்கும். குடும்ப மானம் போய்விடுமேனு அமைதியாக விட்டுவிட்டனர். அதனாலேயே துளிர்விட்ட கயவர்கள் இப்படி செய்திருக்கின்றனர்.

தோப்புக்கு ஆடு மேய்க்க போன உன் வீட்டுப் புள்ளைய ரெண்டு வெறி புடிச்ச நாய்ங்க பலாத்காரம் செய்ய பாத்து முடியாம, கழுத்த முரிச்சு, மயக்கமானதும், செத்துட்டானு நெனச்சி கிணத்துல தூக்கி வீசிட்டு போய்ட்டா... சேதி தெரிஞ்சா சும்மா இருப்பீங்களா..!!? அவனுங்கள அடிச்சா அதுக்கு பேரு சாதி வெறியா..!!!? இதே பாச்சாரபாளையத்துல நடந்த சம்பவம்தான் இது. இந்த சேதி உங்க யாருக்காவது தெரியுமா..!!? அந்த வெறி புடிச்ச நாய்ங்க பாச்சார பாளையம் காலனியை சேர்ந்தவனுங்கதான். வெளிய தெரிஞ்சா மானம் போய்டுமேனு எந்த பிரச்சனையும் செய்யாம மறைக்கப்பட்ட சம்பவம்தான் இது. இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு..!!?

இப்ப நடக்குற இந்த பிரச்சனையால வீட்ட எரிச்சது மட்டும்தானே உங்களுக்கு தெரியும்.
ஒரு ஏக்கர் பன்னீர் கரும்பு தோட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது தெரியுமா உங்களுக்கு..!!? தெரியாது. ஏன்னா, அது வன்னிய சாதியை சேர்ந்தவனுக்கு சொந்தமானது.

கிட்ட்தட்ட 250 பேரு மேல வழக்கு பதிவு பன்னியிருக்காங்க. இதுல 26 பேரு முக்கிய குற்றவாளிகள். இதுல வேடிக்கை என்னனா, சம்பவம் நடந்தப்ப தன் மனைவியின் பிறசவத்துக்காக பாண்டிச்சேரியில் மருத்துவமனையில் இருந்த எங்க ஊராட்சி மன்ற தலைவர் அருள் முருகன் தலைமையிலதான் எல்லோரும் போயி வீடுகளை எரிச்சதா செய்தி ஊடகங்களிலேயே வந்ததுதான். இதுலிருந்தே தெரிஞ்சுக்குங்க என்ன நடந்திருக்கும்னு..

தாழ்த்தப்பட்டவன் என்கிற ஒரு காரணத்தினாலேயே என்ன ஏது என விசாரிக்காமல் அவர்கள் சார்பாக எவ்வளவு குரல்கள். எதுவா இருந்தாலும் ஞாயம் ஒன்னாதான் இருக்கனும்.

இதுக்கு அப்புறமாவது யாரும் பாச்சாரபாளைய பிரச்சனையை சாதிவெறினு சொல்லாதீங்க.. இந்த பிரச்சனையில் இழப்பு வன்னிய சாதியினருக்குதான் அதிகமாக இருக்கும். இருப்பினும் உதவிகள் அனைத்தும் காலனி மக்களுக்கு மட்டுமே இருக்கும். வழக்கம் போல இளிச்சவாயனுங்க வன்னியந்தான்..

ஆனால் ஒன்னு, இந்த பிரச்சனையால எங்க சுற்று வட்டாரத்துல இருக்குற ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களும் தங்கள் தலையில தாங்களே மண்னை வாரி போட்டுகிட்டதுக்கு சமம் ஆகிடிச்சு. இனி எப்ப வேணும்னாலும் என்ன வேணும்னாலும் நடக்கலாம் எதுக்கும் யாரும் உத்திரவாதம் கொடுக்க முடியாது.

மருத்துவர் இராமதாசே வந்து பேசினாலும் ஒன்னும் நடக்காது. தேவையே இல்லாம மருத்துவரோட மரியாதைதான் கொறைஞ்சு போகும். இது புரியாம நெறைய பேரு இராமதாசை குறை சொல்றாங்க. பாவங்க அவரு, அவரால இங்க ஒன்னும் செய்ய முடியாது.

12 கருத்துகள்:

 1. ராமதாசிடம் உள்ள பிரச்சனையே இதுதான். அம்பேத்கருக்கு நிறைய சிலை வைக்க சொல்லி இவரிடம் யார் கேட்டுகொண்டது. மதுரையில் இருந்த திருமாவை வடமாவட்ட ஆதிதிராவிடர்களுக்கு அருமுகப்படுத்த இவர் யார். ஆக, இன்றைய ஆதிதிராவிடர்களின் தீவிர வன்னியர் எதிர்ப்புக்கு காரணமே இவர்தான் என்று ஏன் சொல்ல கூடாது. வன்னியர்களின் பெருன்பான்மை ஆதரவு இவருக்கு கிடைத்தவுடன் தன்னை ஈ.வெ.ரா, அண்ணா, கருணாநிதி இன்னும் உள்ள எல்லா தலைவர்களும் கலந்த ஒரு தலைவராக நினைத்துக்கொண்டதின் விளைவே இது. எப்போதும் யாரையாவது துதி பாடியே பழக்கப்பட்ட வன்னியர்கள் இவரையும் கடவுள் போல எண்ணி பேசுவதும், எழுதுவதும் இதற்கு ஒரு காரணம். இப்படி பேசுபவர்கள் பெரும்பாலும் அவரால் ஆதாயம் அடைந்தவர்களே. தனி ஒரு மனிதனால் எப்படி எப்போதும் சரியாகவே சிந்திக்க முடியும். அவர் இந்த ஜாதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று நான் சொல்ல வரல. தனி ஒரு மனிதன் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு ஒரு சமுதாயமே விலை தர வேண்டியுள்ளது ஏன்.
  2000 வன்னிய பெண்களை வன்காதல் செய்து ஆதிதிராவிடர்கள் கைவிட்டதாக கணக்கு சொல்லும் மாவீரன் இவர்கள் எல்லாம் பாதிக்கப்படும் வரை என்ன செய்துகொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட பெண்களில் பா.மா.க பொறுப்பாளர் குடும்பத்து பெண் யாராவது இருந்திருந்தால் ஒருவேளை எதாவது செய்திருப்பார். இவர் விசுவாசம் வன்னியர்களிடம் இல்லாமல் தனி ஒரு குடும்பத்திடம் இருப்பதே காரணம். வன்னியர்கள் பா.மா.க வின் வாக்களிக்கும் இயந்திரம் மட்டும் தானா?

  பதிலளிநீக்கு
 2. @Kovai Neram : Its pleasure to your visit here.
  i too don't like to post like this. but no one gave the right information about this issue and they accused with partial. as well as by my knowledge, i am the only one in the bloggers world from that area. so that it forced me to do this.
  and i strongly believe that the politics defines our life style. so surely, i hope that i will post the political articles but not based on caste.

  பதிலளிநீக்கு
 3. இன்று பல்வேறு கட்சிகளை சேர்ந்த வன்னியர்கள் தர்மபுரி பிரச்சினையில் கைது செய்ய பட்ட பொது, நம்மை எந்த அரசியல் கட்சியும் கண்டு கொள்ள வில்லை.. நமக்கு இருக்கிற ஒரே நாதி அய்யா மட்டுமே.. அடித்தாலும் அவரே.. அணைத்தாலும் அவரே..

  பதிலளிநீக்கு
 4. அன்பு, நீங்கள் நான் எழுப்பியிருக்கும் எந்த பிரச்சனைக்கும் நேரடியாக பதில் கூறாமல் நழுவிவிட்டீர்களே ஏன்?

  பதிலளிநீக்கு
 5. அன்பு, நீங்கள் நான் எழுப்பியிருக்கும் எந்த பிரச்சனைக்கும் நேரடியாக பதில் கூறாமல் நழுவிவிட்டீர்களே ஏன்?

  பதிலளிநீக்கு
 6. காமராஜ், ஆக வன்னியர்களின் ஒரே நாதி ஐயா தான். அப்படி என்றால் ஐயா ஒருநாள் இறந்து போனால் வன்னியர்கள் நாதியற்று போவார்களா? பிரபாகரன் என்னும் அகம்பாவி குடும்பத்தோடு தானும் அழிந்து அவன் பேச்சை கேட்ட ஒரே காரணத்துக்காக ஒரு இனமே அழிந்து எஞ்சியுள்ளவர்கள் கம்பி வெளி பின்னால் வாழ்விழந்து கற்பிழந்து நிற்கிறார்களே, அதுபோல் நாங்களும் ஆவோமா?

  பதிலளிநீக்கு
 7. @ Kalai J : நழுவலாம் இல்லீங்க.. கைப்பேசியிலிருந்து பதிலலிக்க வேண்டிய நிலை மேலும் ஆங்கிலத்தில் பதில் சொல்ல விருப்பமில்லை அதனால்தான். இப்போது கணிணி கிடைத்துவிட்டது.

  தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் எழுச்சிக்கு திருமாவளவனின் பங்கு மிக பெரியது மேலும் முக்கியமானது. அப்படிப்பட்ட திருமாவளவனை இராமதாசு அறிமுகப்படுத்தியதற்க்காக அவரை தழ்த்தப்பட்டவர்களும் தமிழர்களின் முன்னேற்றத்தை விரும்புபவர்களும் பாராட்டியே ஆக வேண்டும்.

  தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருப்பது வன்னியர் எதிர்ப்பு இல்லீங்க. ஆதிக்க சாதி வெறுப்பு. சாதியின் பெயரால் ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள் மீதான வெறுப்பு. வட தமிழகத்தில் வன்னியர் அதிகமாக இருப்பதால் வன்னியர் எதிர்ப்புனு சொல்றாங்க அவ்ளோதான்.

  //** தனி ஒரு மனிதன் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு ஒரு சமுதாயமே விலை தர வேண்டியுள்ளது ஏன். **//
  மருத்துவர் இராமதாசு வன்னியர் சார்ந்து எடுத்த தவறான முடிவு ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்தவும்.

  //** 2000 வன்னிய பெண்களை வன்காதல் செய்து ஆதிதிராவிடர்கள் கைவிட்டதாக கணக்கு சொல்லும் மாவீரன் இவர்கள் எல்லாம் பாதிக்கப்படும் வரை என்ன செய்துகொண்டிருந்தார். **//
  இந்த கேள்வியே சரி இல்லீங்க.. நம்ம வீட்டு புள்ளைங்க காதலிக்குற கதையே எதாவது நடந்தாதான் நமக்கே தெரிய வரும்.இல்ல, யாராவது எங்கேயாவது பாத்துட்டு உன் பொண்ன ஒரு பையனோட அங்க பாத்தேன். உன் பையன ஒரு பொண்னோட இங்க பாத்தேனு சொன்னாதான் தெரியும். குருவுக்கு எப்படி தெரியும்.

  இப்ப அடிக்கடி நடக்குற சம்பவங்கள கேள்விப்பட்டு, காதலில் ஏமாத்த நினைக்கிறவர்களை அடிப்பேன், வெட்டுவேனு மிரட்டுகிறார் அவ்வளவுதான். மேலும் அவர் வன்னியர் சங்க தலைவராகவும், ச.ம.உ வாகவும் இருப்பதால் அவரது குரல் கொஞ்சம் எடுபடும்.

  பதிலளிநீக்கு
 8. அப்பன் ,பாட்டன் ,முப்பாட்டன் காலத்துல இவனுங்க கஷ்ட பட்டார்கள் என்று சால்ஜாப்பு சொல்லி, அரசாங்கம் கொடுக்கும் எல்லா சலுகைகளையும் அட்டைகளாக உறிஞ்சி கொண்டு,கொழுத்து ,இப்பொழுது ஊரையே சாப்பிட எத்தனிக்கும் கயவர்கள் இவர்கள் .இவர்களிடம் இருந்து மற்ற சமூகங்கள் எப்படி தங்களை கத்து கொள்ளபோகிரர்கள் என்பது மிக பெரிய கேள்வி !!!!!

  பதிலளிநீக்கு