திங்கள், 31 டிசம்பர், 2012

ஆங்கிலேயர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!


ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டுள்ள உலகத்தோர் அனைவருக்கும், ஒரு தமிழ் இளையோனின் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எம்மினத்தாருக்கு மரபு கோளாறு இருக்கிறது..! அதனால் தான் தமிழ்ப் புத்தாண்டு சித்திரைக்கும் தைக்கும் தள்ளாடி நிற்க்கிறது.

எங்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு தெரியாது, ஆனால் ஆங்கில புத்தாண்டை ஆரவாரமாய் கொண்டாடுவோம்.

மதம் மாறிய எங்களுக்கு பொங்கல் ஒரு இந்து பண்டிகையே..!

எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்று இருக்கின்றது. மறந்தும்கூட எங்களைப் போல இருந்துவிடாதீர்.

ஆண்டு முழுமையும் அமைதியும் இனிமையும் உண்டாக என் மனமார்ந்த வாழ்துக்கள்.

நன்றி : கூகிள் [படம்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக