வர வர நம்ம ஆளுங்களுக்கு எத அச்சிடறது, எத அச்சிடக்கூடாதுனே தெரியறதில்லனு நெனைக்கிறேன்.
நேத்து சாயங்காலம் மாலை மலர் செய்திதாளில் ஒரு சேதி படிச்சேன். படிச்சிட்டு எனக்கு என்ன செய்யறதுனே தெரியல. ஒரு நிமிசம் கை காலெல்லாம் வெலவெலத்து போச்சு..
ஒரு வேளை இவங்களுக்கு சேதி எதுவும் கெடக்கலியோ..!!? இப்படியே போச்சுனா வருங்காலத்துல "குவாட்டர்" கோவிந்தன் மூத்திர சந்தில் ஒன்னுக்கு போனார்னு முதல் பக்கத்துல படத்தோட செய்தி வெளியிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல..
அட சேதி ஒன்னுமில்லீங்க.. நேத்து சட்ட சபையில விஜயகாந்த்தும், ஸ்டாலினும் வணக்கம் தெரிவிச்சிகிட்டாங்கலாம்.
இத ஒரு முக்கிய சேதினு கொஞ்சம் அடர் பின்புலத்தில் சேதி வெளியிடுறாங்க.
ஒரு வேளை இந்த பத்திரிக்கையை படிக்கிறவங்களெல்லாம் மாக்கானுங்கனு நெனச்சிருப்பாங்களோ..!!?
இரண்டு பிரபலங்கள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்திக்கும்போது புன்னகை செய்வதோ, வணக்கம் தெரிவிப்பதோ மிக இயல்பான விடயங்களில் ஒன்று.
இது என்னமோ ரொம்ப முக்கியமான் சேதி மாதிரி வெளியிட்டிருக்காங்க செய்தித்தாள் படிக்கிறவன் வேலையில்லாத வெட்டிப்பயனு நெனச்சி..
எனக்கு தெரிஞ்ச வரைக்கும், நம்ம நாட்டுல(தமிழ் நாடு) நமக்காக குரல் கொடுக்க ஒரு பத்திரிக்கையும் இல்ல. இந்த மாதிரி வீணா போன வெட்டி சேதி போடுறதுக்கும், நம்மளோட மூளையை மழுங்கடிப்பதற்க்கும்தாம் நிறைய செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.
கொடும கொடுமனு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடும கோவனத்த அவுத்து போட்டுட்டு டிங்கி டிங்கி ஆடுச்சாம்.. அந்த கதையா இருக்கு நம்ம ஊடகங்களின் செயல்பாடுகள்...
நல்ல பதிவு!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
நீக்குCORRECT BROTHER...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
நீக்குஅன்பு!
பதிலளிநீக்குதாங்கள் கூறுவது மிகச் சரி. ஆனால் உங்கள் பதிவுக்கு நீங்கள் இட்ட தலைப்புச் சரியா?, பொருத்தமா?
"கேடு கெட்ட பத்திரிகைகள்" எனத் தலைப்பிட்டிருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு "பரபரப்புச்" சேர்த்து, அதே செய்தியை அனுப்பியுள்ளதால் தான் நான் இங்கு வந்தேன்.
ஆகவே கூட்டம் கூட்ட நமக்குப் பரபரப்புச் செய்தி தேவைப்படுகிறது.
இவை சரியென்பது என் வாதமல்ல! நுகர்வோரே பல தவறுக்கு மறைமுகமான காரணியாக உள்ளோம்.
மற்றது, கேடு கெட்ட நம் தமிழ்நாட்டு அரசியலில், எதிர்கட்சிகள் முகமன் கூறுவதே! செய்தியாக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு, இக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடிமகன், நாகரீகம் மிக்கவன் என மார்தட்டுவோர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
வாங்க.. வாங்க.. வந்து மனசுல பட்டத சொன்னதுக்கு ரொம்ப நன்றி..
நீக்குஅலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் போது அவசர அவசரமா எழுதின பதிவு. வேற தலைப்பு எதுவும் தோனல.. தலைப்புல கவர்ச்சியை அதிகரிக்கதான் "பரபரப்பு"வை சேர்த்தேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. மத்தபடி இது இந்த பதிவுக்கு பொருத்தமான தலைப்பு இல்லை.. தவறுக்கு பொறுத்தருளுங்கள்..
வயித்தெரிச்சல்! முக்காவாசி செய்திகள் இப்படி யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாத செய்தி தான்.. இது.. இல்லையேல்.. 'அழகிகள் கைது!'
பதிலளிநீக்குஎவனுக்கு வேணும் இதெல்லாம்? சும்மா பக்கத்தை ரொப்பும் உத்தி!
வாங்க bandhu.. இங்க உங்க கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
நீக்குபயந்து போயி :)
பதிலளிநீக்குவாருங்கள் Anonymous, நீங்க மளையாளியா..!!?
நீக்குஅச்சம் வேண்டாம்..
:-) :-) :)