திங்கள், 26 நவம்பர், 2012

பதிவர்களை மிரட்டுகிறேன்..!!!???

அனைவருக்கும் வணக்கம்.

என் பதிவுகளை படிக்க வரும் படிப்பாளிகளுக்கும், பதிவர்களுக்கும் ஒரு மிரட்டல் வேண்டுகோள்.

இதுவரைக்கும் மொத்தமா 20 பதிவுகளை நான் இங்க பகிர்ந்திருக்கிறேன்.
இது 21வது பதிவு. ஒவ்வொரு பதிவுக்கும் சராசரி பார்வையாளர்களின் எண்ணிக்கை 300.

பத்து பேருக்கு ஒருவர் வீதம்-னு பாத்தாலும் ஒவ்வொரு பதிவுக்கும் 30 பின்னூட்டமாவது வந்திருக்கணும். ஆனால் என்னுடைய பதிலுரையையும் சேர்த்தும் கூட 10 பின்னூட்டங்களை கூட தாண்டவில்லை.

அதன் பொருட்டே இந்த பதிவு.


இங்கு பதிவுகளை படித்துவிட்டு கருத்து இடாமல் செல்வோருக்கு தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு எற்படுமாறு கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோவிலில் சீட்டு எழுதி கட்டி, சேத்தியாதோப்பு மந்திரவாதியின் மூலம் வைப்பு சூனியம் வைக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். 


---------------------
கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோவில் :

இந்த கோவில் பண்ருட்டி- வடலூருக்கு இடையிலான சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது மக்கள் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற புகழ்மிக்க கோவில் ஆகும்.

இக்கோயில் புகழ் பெற காரணம். "குடியை தடுக்கும் கொஞ்சிக்குப்பம் ஐய்யனார்" எனும் கூற்றே ஆகும்.

ஆம், ஒருவர் ஒருமுறை இனி நான் குடிக்கவே மாட்டேன் என இக்கோயிலில் சத்தியம் செய்து சீட்டு எழுதி கட்டிவிட்டு வந்துவிட்டால், அவருக்கு குடிக்கும் எண்ணமே வராதாம். ஒருவேளை அவர் தனது சத்தியத்தை மீறி குடித்துவிட்டால், அவருடைய கை கால்களை இழுத்துவிடுமாம் [அதாவது பக்கவாதம் வந்தவரை போல் ஆகிவிடுவாராம்]. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த கடவுள் கொஞ்சிக்குப்பம் ஐய்யனார்.

எங்க சுற்று வட்டாரத்துல, பக்கத்து வீட்டுக்காரன் கூட சண்டை, இல்லனா எவனாவது எதையாவது திருடிட்டான் அப்டினா, கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோவிலுக்கு போயிட்டு சீட்டு எழுதி கட்டிட்டு வந்துடுவாங்க. ஐய்யனார் சம்பந்தப்பட்டவங்கள ஏதாவது ஒரு வழியில தண்டிச்சுடுவார்.

அவ்வளவு சீக்கிரத்துல யாரும் போய் சீட்டு எழுதி கட்ட மாட்டாங்க. ஏன்னா, சீட்டு எழுதி கட்டிட்டா கண்டிப்பா சம்பந்தப்பட்டவங்களுக்கு கேட்டது நடக்கும் என்பது நம்பிக்கை. எப்பொழுது அளவு கடந்த ஆத்திரமும் கோவமும் வருகிறதோ, அப்போதுதான் இந்த சீட்டு எழுதி கட்ற முடிவுக்கே வருவாங்க.

சேத்தியாத்தோப்பு மந்திரவாதி :

இவரப் பத்தின தகவல்கள் எதுவும் இங்க குடுக்கப்பட முடியாது.

-------------------

அட, என்ன எழுதறதுன்னு தெரியலையா..!? ஒரு சிரிப்பு பூச்சி[:-)] இடுங்க. பதிவு ரொம்ப கொடுமையா இருக்கா..!!? ஒரு அழற பூச்சி[:-(] இடுங்க.
ஏதாவது ஒரு வகையில உங்களோட வருகையை பதிவு செய்யணுமா இல்லையா..!!?
எல்லோரும் மனசுல ஒரு விசயத்தை நல்லா ஏத்திக்கோங்க, கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோயில் மற்றும் சேத்தியாத்தோப்பு மந்திரவாதி.

சரி.. இந்த ஆத்திகவாதிகளும், வாயளவுல நாத்திகம் பேசறவங்களும் இனிமே அவங்களோட வருகையை பதிவு செய்வாங்கன்னு நம்பலாம்.

ஆனால், உண்மையாவே நாத்திகனா இருக்கறவங்களுக்குதான் என்ன செய்றதுன்னு தெரியல. எப்படியோ, எதுவா இருந்தாலும் நாத்திகர்கள் கொஞ்சம் நல்லா யோசிச்சு உங்க வருகையை இங்க பதிவு செய்யுங்க..

நான் மறுபடியும் சொல்றன்


இங்கு பதிவுகளை படித்துவிட்டு கருத்து இடாமல் செல்வோருக்கு தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு எற்படுமாறு கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோவிலில் சீட்டு எழுதி கட்டி, சேத்தியாதோப்பு மந்திரவாதியின் மூலம் வைப்பு சூனியம் வைக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். 


பின்னூட்ட பெட்டிக்கு மேலேயும் இந்த பத்தியை இணைத்துள்ளேன்.

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோயில் இல்லை. வார்த்தைகள் கடுமையாக தெரியும் பட்சத்தில் மன்னிக்க வேண்டுகிறேன்


நன்றி : கூகிள் [படம்]

26 கருத்துகள்:

 1. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. ஹஹஹஹஹ.... செம இன்ட்ரஸ்டிங்காக எழுதியிருக்கீங்க...! வாழ்த்துகள்... பின்னூட்டத்தை எதிர்பார்க்காமல் தொடர்ந்து எழுதுங்கள்... நிச்சயம்... பின்னூட்டங்கள் தானாகவே வரும்...!

  பதிலளிநீக்கு
 3. @தமிழ் டிஜிட்டல் சினிமா டாட் காம்,
  @Anonymous :

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 4. @தனிமரம் : தங்கள் வருகைக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 5. அதான் இன்னிக்கு 5 மணிக்கு வயித்தில போச்சா? நான் என்னமோ ஏதோன்னு பயிந்து போய்ட்டேன்.

  பதிலளிநீக்கு
 6. @பழனி.கந்தசாமி : வருகைக்கு நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 7. நானும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் தான். அதனால் என்னை கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் ஒன்றும் செய்யமாட்டார் என நினைக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 8. இதை படித்துவிட்டு உதாசினம் செய்வோருக்கு ஏற்ப்படும் தொந்தரவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல//

  ஜயனார் கிட்ட என்ன ஒன்னும் செய்ய வேண்டாமுன்னு சொல்லுங்க ... பதிவு நன்று

  பதிலளிநீக்கு
 9. @ Anonymous :
  தங்கள் வருகைக்கு நன்றி.
  பயமா இருக்கனுமில்ல..!! :-)

  ==========

  @ வே.நடனசபாபதி :
  வருகைக்கு நன்றி ஐயா,
  உங்க வருகையை நீங்கள் பதிவு செய்துவிட்டீர்கள். இனி உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது.

  :-) :-)

  ===========
  @ thottarayawamy :
  தங்கள் வருகைக்கு நன்றி.
  வருகையை பதிவு செய்துவிட்ட பிறகு எதற்கு கவலை..
  ஐய்யனார் நம்ம தோழர்தான் பேசிக்கலாம்..!!! :-) :-)

  பதிலளிநீக்கு
 10. மிக அருமையான பதிவு
  வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
  உங்கள் வரவை விரும்புகிறது.
  http://www.dinapathivu.com/
  தினபதிவு திரட்டி

  பதிலளிநீக்கு
 11. Hello! Anbu en permission ellama en peyera use pannitinga? Ungala nan summa vita matten? Eppo poren meendum varuven by iyanar Senthilrao-doha qatar

  பதிலளிநீக்கு
 12. :-):-D;-):-(:-P;-(:-|:-:-/:-O:-*:-x:->B-)%-):-@;-> navarasa nayagan

  பதிலளிநீக்கு
 13. :-):-D;-):-(:-P;-(:-|:-:-/:-O:-*:-x:->B-)%-):-@;-> navarasa nayagan

  பதிலளிநீக்கு
 14. @ தினபதிவு :
  வருகைக்கு நன்றி.
  தினப்பதிவுடன் இணைந்துவிட்டேன்..

  @ Anonymous - iyanar Senthilrao-doha qatar
  தங்கள் வருகைக்கு நன்றி.
  உங்களுடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

  @ Anonymous -
  தங்கள் வருகைக்கு நன்றி.

  @ Anonymous - navarasa nayagan
  வருகைக்கு நன்றி.
  என்னங்க இது எல்லா பூச்சியையும் இறக்குமதி பண்ணிட்டீங்க..!! :-)

  பதிலளிநீக்கு
 15. Hello! Anbu neengathane comment varalanu kavalaipatinga? Pothuma? Senthil rao, navarasa nayagan, anonymasHello! Anbu neengathane comment varalanu kavalaipatinga? Pothuma? Senthil rao, navarasa nayagan, anonymas, ALL IS WELL B-)VIJAY FANSB-)

  பதிலளிநீக்கு
 16. @ ஹாரி.R :
  வருகைக்கு நன்றி

  @ Anonymous :
  உங்ககிட்டேர்ந்து இன்னும் நெறைய எதிர்பாக்குறன் ..!! ஒவ்வொரு பதிவிற்க்கும்.ஆனால் Anonymous பெயரில் இல்ல.

  @ Anonymous :
  கொஞ்சம் அலுவலக பணி அதிகமாகிடுச்சி, அதனாலதான்..! விரைவில் அடுத்த பதிவு.

  பதிலளிநீக்கு
 17. அன்பு,
  என்னையும் comment போட வச்சிடீங்க.
  அருமை.

  பதிலளிநீக்கு
 18. @ Alien A : வாங்க.. வாங்க.. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி..

  பதிலளிநீக்கு