இதுவரை கோயம்பத்தூருக்கு வந்து பழகாதவங்க நல்லா தெரிஞ்சுக்குங்க, நீங்க ஒரு நல்ல விடயத்தை தவற விடுகிறீர்கள்.
தமிழ்நாட்டிலேயே மரியாதை தெரிஞ்ச மாவட்டம்-னா அது "கொஞ்சும் தமிழ்" பேசும் கோவை மாவட்டம் தான்.
முன்ன பின்ன அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட இயல்பாகவே கொஞ்சலாக பேசுவது எவரையும் ஒரு நொடி சிலிர்க்க வைக்கும். இது கோவையின் தனிச் சிறப்பு.
"என்றா தங்கம்", "என்ன தங்கம் வேணும்" னு கேக்கும்போதே மனசுக்குள்ள ஒரு பூரிப்பு வரும்.
வெளி ஊருலேர்ந்து வந்து இங்க தங்கி இருக்கறவங்களுக்கு, அவங்க தன்னோட ஊருல இருந்தா என்ன மாதிரியான உணர்வு இருக்குமோ அந்த உணர்வு இங்க கெடைக்கறதுக்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
ரொம்ப எளிதில் நாம யாருகிட்ட வேணும்னாலும் பழகிடலாம். பழக ஆரம்பித்துவிட்டால் நம் நெருங்கிய உறவினர்கள் போலவே பழகுவார்கள். அன்பை அடுத்தவர்களுக்கு வாரி இறைப்பதில் கோவைக்குதான் முதலிடம்.
அடுத்தவங்ககிட்ட மரியாதையா பேசணும்னு நெனச்சிகிட்டு பேசாம இயல்பாவே மரியாதையோட பேசறத பாக்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாதான் இருக்கும்.
யாருக்காவது மரியாதையா பேசி பழக கத்துக்கனும்னா..!! ஒரு ஒரு வருடம் கோவையில் தங்கி இருங்க போதும்.
என்னடா இது..!! அப்டினா கோயம்பத்தூர்ல மரியாதைகொறைவா யாருமே பேச மாட்டாங்களான்னு கேட்டீங்கனா..!!? உங்களுக்கு ஒரு எளிமையான வழியை சொல்றன்.. யாரையாவது உங்களுக்கு தெரிஞ்ச வழிமுறையில வம்புக்கு இழுத்தீங்கனா போதும்.
தமிழ்நாட்டுல கோவம் வந்துச்சுனா எல்லா தமிழனும் ஒரே மாதிரிதான்..!!
சரி, நம்ம கதைக்கு வருவோம்..!!
ஒரு வாரத்துக்கு முன்னாடி எங்க சித்தப்பா இங்க கோவைக்கு வந்திருந்தார். ஒரு நாள் இரவு ஒரு உணவகத்துக்கு சாப்பிட போனோம்.
எங்க ஊரு பக்கம்லாம் வா,நீ போ ங்கறதே மரியாதையான வார்த்தைதான். உதாரணமா, இங்க வாங்க-னு சொல்றதுக்கு 'இங்க வா' இல்லனா 'இங்க வாயேன்' னு தான் சொல்லுவோம். வயசு வித்தியாசம்லாம் இல்ல எல்லாருக்கும் ஒரே மாதிரிதான்.
எங்க சித்தப்பா அந்த உணவக பணியாளரிடம் பேசிய வார்த்தைகள் தான் என்னை பயமுறுத்தியது. அந்த பணியாளர், என்னய்யா மரியாத இல்லாம பேசுறன்னு சண்டைக்கு வந்துடுவாரோனு உள்ளுக்குள்ள பக்கு பக்கு னு இருந்துச்சு. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கல..
குறிப்பு : யாராவது ஏதாவது சொல்லிட்டுப் போங்கப்பா.. கடுப்பா வருது..!! :-)
//யாராவது ஏதாவது சொல்லிட்டுப் போங்கப்பா.. கடுப்பா வருது..!! :-)//
பதிலளிநீக்குஇந்த கடுப்பு எனக்கு 6 வருடத்துக்கு முன்னால் புதிய பதிவரா இருந்தப்ப வந்தது. இப்ப பலகிடுச்சு பாஷ்!
நன்றிங்கோ!
thanks to your visit boss.
நீக்குi have an idea.. i tried to implement it today. but, error occurred. from monday onwards, most probably no one can leave my page without entering comments..
happy weekend.
[reply using mobile. that's why in-convenient english]
மிகுதி வருமா?
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி..
நீக்குவிரைவில் எதிர்பாருங்கள்...
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு