என்ன கொடும சரவணன் இதெல்லாம்...
பால் தாக்கரே செத்துபோய்ட்டாரு..
சரி இப்ப அதுக்கென்ன..!?
அவர் செத்ததுக்கு ஒண்ணுமில்ல..
பால் தாக்கரே செத்துபோய்ட்டாரு..
சரி இப்ப அதுக்கென்ன..!?
அவர் செத்ததுக்கு ஒண்ணுமில்ல..
அவர் செத்ததுக்காக ஏன்டா இப்படி பந்த் பண்றீங்கன்னு ஒரு பொண்ணு தெரியாம முகநூல்ல சொல்லிட்டா..
நம்ம மகாராஷ்டிரா காவல்துறை என்ன பன்னுச்சுனா நாங்க தமிழ்நாட்டு காவல்துறையை விட பெரிய ஆளுன்னு காமிக்கறதுக்காக, யாரோ புகார் கொடுத்தாங்கன்னு அந்த பொண்ண கைது பண்ணிட்டாங்க.
இதுல ஒரு பெரிய நகைச்சுவை இருக்கு. அது என்னன்னா, அந்த பொண்ணோட கருத்துக்கு விருப்பம் தெரிவித்த காரணத்திற்க்காக மற்றொருவரையும் கைது செய்துள்ளனர்.
வர வர என்ன சொல்லணும் என்ன சொல்ல கூடாதுனே தெரியல..
எனக்கு வேற ஈவு சாவு தெரியாது... நான் மாட்டும் ஏடா கூடமா எதாவது சொல்லி என்னைக்கு வாங்கி கட்டிக்கப்போறேனு தெரியல.
ஏற்கனவே,
சின்மயி வழக்கு
கார்த்திக் சிதம்பரம் வழக்கு-னு
படு பயங்கரமா பிரச்சனைகள் போய்கிட்டு இருக்கு. இதுல புதுசா இது வேற...
என்னமோ கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்-னு ஒன்னு சொன்னாங்க, அதெல்லாம் எனக்கு கனவு மாதிரியே இருக்கு.
***************
[வண்டு முருகன் பாணியில் படிக்கவும்]
நான் மேற்சொன்ன வழக்குகளிலிருந்து நான் தற்சமயம் இருக்கும் வலைப்பதிவர்கள் உலகில் போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவதால்,
நான் மேற்சொன்ன கருத்துகளுக்காக இங்கேயே இப்போதே இந்த பதிவிலேயே மன்னிப்பு கேட்டு நமது காவல்துறையால் பாதுகாப்பான உலகம் என அறிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு உலகத்தில் இணைகிறேன் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்காக என்னை பயந்தாங்கோலி என்றோ பச்சோந்தி என்றோ யாரும் எண்ணி விட வேண்டாம்.
இருக்குற இடத்திலிருந்தே, எழுதிய பதிவிலேயே மன்னிப்பு கேட்கும் துணிவும் தைரியமும் இந்த இணைய உலகத்திலேயே என் ஒருவனுக்கு மட்டும்தான் இருக்கிறது என சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
ஒரு கற்பனை. இந்த ஆளை எவனாவது சுட்டு செத்திருந்தான்னா மும்பை என்ன ஆகியிருக்கும்?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஐயா,
நீக்கு---------------------
ம்கும்.. வியாதி வந்து செத்ததுக்கே அங்க யாரையும் ஒழுங்கா தூங்க விடலயாம். இதுல எவனாவது சுட்டிருந்தான், அவ்ளோதான்..!! இரயில் எரிப்பு, கடை உடைப்பு, காவல் நிலையம் இடிப்புன்னு எக்கச்சக்கமா நடக்கும். தமிழ்நாட்டுல துப்பாக்கி-2, பம்பாய்-2 னு படம் எடுப்பாங்க..
எனக்கு இதுவரைக்கும் புரியாத விஷயம் ஏங்க இந்திய அரசாங்கம் கூட இந்தாளு இப்படி பயப்பட்டிருக்கு.
பதிலளிநீக்குசிவசேனா தலைவர் பால் தக்கரே இறுதி ஊர்வலத்தின் போது அவர் மீது இந்திய தேசியக்கொடி போர்த்த பட்டிருந்தது. ஒருமுறை கூட தேர்தலில் நிற்காத இந்த போரையே பார்காத அரசருக்கு எதற்கு அரசு மரியாதை?
பதிலளிநீக்குநாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரர்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்திர்காக பாடுபட்ட அரசியல் தலைவர்களுக்கும் மட்டும் கிடைக்கும் கவுரவம் இந்த இறுதி மரியாதை...ஆனால் பால் தக்கரே போன்றகொலைகாரர்களுக்கு ஏன் இந்த மரியாதை..
இவர் என்ன...
1.ஜனாதிபதியா..
2.முதலமைச்சரா..
3.நாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரரா..
4.சமூக வளர்ச்சிகாக போராடியவரா..
உண்மையை சொல்ல போனால்..மேலே குறிப்பிட்டுல்ல அனைத்திற்கும் எதிரானவர்..அவர் செய்த சாதனைகள் என்ன தெரியுமா?
1.1999-ல் தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் நிற்க்கவும் ஓட்டுப்போட தடை செய்யப்பட்ட ஒரே அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர்..
2.1992 -ல் நடந்த மிகப்பெரிய கலவரத்தின் சூத்திரதாரி.
3.சிவசேனை என்ற பெயரில் உள்நாட்டு கலவரத்தை நடத்த கலவரப்படை உருவாக்கியவர்.
4.2002 -ல் இஸ்லாமியர்களுக்கு எதிராக தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்தவர்.
5.தென் இந்தியர்கள் மகாராஸ்டிர மாநிலத்தில் இருக்ககூடாது என்று அறிவிப்பு விட்டவர்.
6.சிவசேனை படையை கொண்டு வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்.
இந்திய நாட்டில் இஸ்லாமியர்கலும் கிறிஸ்தவர்களும் புற்று நோய் போன்றவர்கள் அவர்களை அழிக்கும் வரை ஓயகூடது என்று கூரியவர்.இந்திய தேசியக்கொடியின் மூன்று வண்ணங்களில் காவிவண்ணத்தை மட்டும் திணிக்க முயன்ர அவருக்கு தேசியக்கொடி மரியாதை தேவையா?
நாட்டில் பிரிவினையை கொண்டுவந்து நாட்டின் அமைதியை குலைத்து,பலரின் உயிரை பறித்த இவருக்கு ஏன் தேசிய மரியாதை?
தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்த இவர் தீவிரவாதி இல்லையா?
மனித உருவத்தில் பலரின் ரத்தத்தை குடித்த இவரும், நாட்டு மக்களுக்காக எல்லையில் உயிர் விட்ட மாபெரும் வீரர்களும் சமமா?
Source: facebook comments
தங்கள் வருகைக்கு நன்றி..
நீக்குநீங்க வேற என்னென்னவோ சொல்றீங்க.. பாத்து சூதானமா இருங்க BOSS