தருமபுரி கலவரத்தில் பா.ம.க-வை உள்ளிழுத்து அதன் நற்ப்பெயரை கெடுத்து
அதில் வெற்றியும் பெற்றுவிட்டது திராவிட சூழ்ச்சி. தருமபுரி கலவரம் நடந்தது நவம்பர்
2012. அடுத்த சில நாட்களில் கடலூர் மாவட்டம் பாச்சாரபாளையம் கிராமத்தில் ஒரு
கலவரம். இதற்கும் பா.ம.க தான் காரணம், இது வன்னிய சாதி வெறி என புனையப்பட்டது. இது
பற்றிய எனது பதிவு இதோ : பாச்சாரபாளையம் :
வன்னிய சாதி வெறி..!!??
இச்சம்பவங்களை தொடர்ந்து பா.ம.க ஏற்கனவே அறிவித்தபடி மதுக்கடைகளுக்கு
பூட்டுபோடும் போராட்டத்தை நடத்தியது. இப்போராட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்ப்பை
பெற்றது. இதில் ஊடகங்களாலும், திராவிடத்தாலும் பெரிதாக எந்த திரிபுவேலையும் செய்ய
முடியவில்லை.
தருமபுரி கலவரமும் மக்கள் மத்தியில் கிட்டதட்ட மறைந்துவிட்டது. ஆனாலும் சிலர் மட்டும் பா.ம.க-வை சம்பந்தப்படுத்தி தொடர்ச்சியாக கட்டுரைகளை
வெளியிட்டு வந்தனர். இதற்கு தக்க பதிலடிகளை ஓரளவுக்கு இணையத்திலிருக்கும் பா.ம.க
வினர் செய்துவந்தனர்.
இந்நிலையில் பா.ம.க சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றிற்க்கு
பாட்டாளி மக்கள் கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அது மக்கள் நலன் பயக்கும்
அதிரடி தீர்ப்பாகவும் இருந்தது. அத்தீர்ப்பின் படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504
மதுக்கடைகளும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500க்கும் மேற்ப்பட்ட மதுக்கடைகளும் மார்ச்
31, 2013க்குள் தமிழக அரசு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இச்செயலால் மனக்கசப்பு இருந்தாலும் பா.ம.க வை பராட்ட வேண்டிய
கட்டாயத்திற்க்கு தள்ளப்பட்டனர் பலர். மக்கள் மத்தியில் பா.ம.க-விற்கு செல்வாக்கு
உயர்ந்தது.
மதுக்கடைகளுக்கு பூட்டு போட்ட போராட்டத்தாலும், மதுக்கடைகளுக்கு எதிரான
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வளர்ச்சியை பெற்றது
பா.ம.க. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ததால் அ.தி.மு.க மீது
மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்ப்பட்டதை மறுக்க முடியாது.
பா.ம.க-வின் அடுத்தடுத்த மக்கள் நல செயல்களால் அதன் மீது பூசப்பட்ட
கரைகள் ஓரளவுக்கு துடைக்கப்பட்டிருந்தது. பா.ம.க வின் இத்தகைய மக்கள் நல
செயல்களால் அ.தி.மு.க-விற்க்கு நிச்சயம் எரிச்சல் ஏற்பட்டிருக்கும். ஏனென்றால்
இச்செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டது அ.தி.மு.க.
அதுமட்டுமில்லாது, முக்குலத்தோர் மற்றும் கொங்கு கவுண்டர்களுக்கான சாதிய அமைப்புகள் மருத்துவர் இராமதாசுக்கு ஆதரவு தெரிவிப்பதால் [அனைத்து சமுதாய பேரியக்கம்], இம்மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்றிருந்த அ.தி.மு.க விற்க்கு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம்.
அதுமட்டுமில்லாது, முக்குலத்தோர் மற்றும் கொங்கு கவுண்டர்களுக்கான சாதிய அமைப்புகள் மருத்துவர் இராமதாசுக்கு ஆதரவு தெரிவிப்பதால் [அனைத்து சமுதாய பேரியக்கம்], இம்மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்றிருந்த அ.தி.மு.க விற்க்கு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம்.
இதனை தொடர்ந்து மரக்காணம் கலவரம்: வன்னியர் சங்க மாநாட்டிற்க்கு
வந்தவர்கள் மரக்காணம் என்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இருவர் கொலை
செய்யப்பட்டனர். இச்சம்பவம் ஊமையாய் இருந்த பல பா.ம.க ஆதரவு இளைஞர்களை பேச
வைத்தது. இச்சம்பவம் நடுநிலை வியாதி பிடித்தவர்களை அடையாளம் காட்டியது. குறிப்பாக அரசியல் கட்சியினர் யாரும் இறந்தவர்களுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது .
இக்கலவரம் திராவிட கட்சிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை
ஏற்படுத்தியிருக்கும். இங்கு செயல்படும் சூழ்ச்சி ஆரிய திராவிட சூழ்ச்சி
[அ.தி.மு.க].
வன்னியர் சங்க மாநாட்டின் ஒரு வாரத்திற்க்கு முன்பாக காவல்
நிலையத்தில் பா.ம.க வினால் ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதாவது, மரக்காணம்
பகுதியானது ஏற்கனவே கலவரம் நடந்த பகுதி. ஆகவே, மாநாட்டுக்கு வருபவர்கள்
பாதுகாப்புடன் வந்து செல்ல மரக்காணம் பகுதியில் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்
என கோரிக்கை வைக்கப்பட்டது. இது பா.ம.க வினரால் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட
நடவடிக்கை.
அதே சமயம் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் தலைவர் பொங்கலூர் இரா
மணிகண்டன் அவர்கள் தனது முகநூலில் ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது, சித்திரை முழுநிலவு
பெருவிழாவிற்கு செல்லும் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க வினர் எச்சரிக்கையாக
இருக்கவும். கலவரம் செய்ய சிலர் திட்டமிட்டிருப்பதாக நம்பிக்கைக்குறிய தகவல்கள்
கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
அண்ணன் மணிகண்டன் அவர்கள் தெரிவித்ததைப்போலவே கலவரமும் நடக்கிறது.
இருவர் கொல்லப்படுகின்றனர். இங்கு திராவிட சூழ்ச்சி வெகு சுறுசுறுப்பாக
செயல்படுகிறது. வழக்கம்போல கலவரத்திற்க்கு காரணம் பா.ம.க வினர் என பரப்பப்படும்
செய்தி.
இங்குதான் இது திராவிட சூழ்ச்சியாக இருக்கும் என எனக்கு சந்தேகத்தை
ஏற்படுத்தியது. ஏனெனில் மரக்காணம் பகுதியில் காவலுக்கு நிறுத்தப்பட்ட காவலர்களின்
எண்ணிக்கை இரண்டு. அவ்விடத்தில் ஒரு 10 காவலர்களை நிறுத்தியிருந்தால், அப்படி ஒரு
கலவரம் நடப்பதற்க்கான வாய்ப்பே இருந்திருக்காது. ஆனால், நிறுத்தப்படவில்லை.. ஏன்?
அதுதான் திராவிட சூழ்ச்சி.
எது எப்படியோ.. மரக்காணத்தில் பாதுகாப்பு வேண்டும் என கேட்ட பா.ம.க
தான் கலவரத்திற்க்கு காரணம் என திராவிட, பார்ப்பன ஊடகங்கள் மீண்டும் களம்
இறங்கியது ஆரிய திராவிட சூழ்ச்சியோடு. மீண்டும் சாதி வெறி கரை பா.ம.க மீது தெளிக்கப்பகிறது.
மீண்டும் பா.ம.க செய்த, செய்துவரும் நற்செயல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு சேர்
வாரி பூசப்படுகிறது.
இச்சம்பவத்தில் இறந்தவர்கள் குறித்து நடுநிலை வியாதி பிடித்தவர்களின்
கருத்து “அவர்கள் சாதி வெறியர்கள் தானே அதனால சாகலாம் தப்பில்லை” என்பதாக
இருக்கிறது. இந்நடுநிலையாளர்கள் பற்றிய எனது பதிவு இதோ : மரக்காணம் கலவரம் :
நீங்களா நடுநிலைவாதிகள்..!! இல்லை, நடுநிலைவியாதிகள்..
இச்சம்பவம் குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, இறந்தவர்களை
விபத்தில் இறந்ததாக அறிவிக்கிறார். அடுத்த இரண்டாவது நாள் இது கொலைதான் என்கிறது
உடற்க்கூறு ஆய்வறிக்கை தகவல். தவறான ஒரு தகவலை சட்டசபையில் பதிவு செய்த முதல்வர் ஜெயலலிதா
உண்மையை அறிந்தபின் சட்டசபையில் அதை மீள் பதிவு செய்யவில்லை.
முதல்வரின் இச்செயல்தால் இச்சம்பவம் திராவிட சூழ்ச்சிதான் என்பதை
எனக்கு உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து மருத்துவர் இராமதாசு மரக்காணம் கலவரத்திற்கு நீதிவிசாரணை
வேண்டி விழுப்புரத்தில் அமைதி வழி போராட்டம் ஒன்றினை நடத்த திட்டமிடுகிறார். அதற்காக
காவல்துறையிடம் அனுமதி கோரப்படுகிறது. இதற்கு வேறு தேதியில் அனுமதி அளித்த காவல்துறை
பின்பு போராட்டம் நடைபெறுவதற்க்கு முதல் நாள் அவ்வனுமதியை இரத்து செய்கிறது.
இருப்பினும், தடையை மீறி போராட்டம் நடத்தப்படுகிறது. இது வழமையாக
எல்லா அரசியல் கட்சிகளும் செய்யும் ஒரு நிகழ்வு. மருத்துவர் கைது செய்யப்படுகிறார்.
[இப்போராட்டம் நடந்தது, மருத்துவர் கைது செய்யப்பட்டது ஏப்ரல் 30, 2013.
மருத்துவர் கைது செய்யப்படுவதற்க்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது ஏப்ரல் 28,
2013. அன்று மருத்துவர் இராமதாசு அத்திக்கடவு-அவினாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை
நிறைவேற்றக்கோரி போராட்டம்(வாகன பேரணி) தொடங்கி வைக்க கோவைக்கு வருகிறார். நாம்
அனைவரும் அறிந்த ஒரு சேதி, கோவை மண்டலம் தி.மு.க வை விட அ.தி.மு.க விற்க்கு அதிக
செல்வாக்கு நிறைந்த பகுதி. எந்த கட்சியும் தனக்கு செல்வாக்கான பகுதிகளில் தனது
கட்சிக்கு பாதிப்பு ஏற்படுவதை விரும்பாது. மருத்துவரின் இதுபோன்ற செயல்கள்
அப்பகுதிகளில் பலத்த வரவேற்ப்பை பெறுகிறது]
பொதுவாக இம்மாதிரி தடையை மீறி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து
மாலையில் விடுவிப்பதுதான் வழக்கம். இங்குதான் திராவிடத்தின் அடுத்த சூழ்ச்சி களம்
இறங்குகிறது.
மருத்துவர் இராமதாசு கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் தடுப்பு காவலில்
வைக்கப்படுகிறார். மருத்துவர் இராமதாசு மாதிரியான தலைவர்கள் கைது செய்யப்படும்போது
அவர்களுக்கு செல்வாக்கு மிகுந்த பகுதிகளில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்
மிக மிக அதிகம் என்பது அரசியலின் அரிச்சுவட்டை அறிந்த அனைவருக்கும் தெரியும்.
மருத்துவரை கைது செய்து சிறைலடைக்க முடிவெடுத்த பின்பு வட மாவட்ட
ஆட்சியர்களுக்கு அறிவிக்கை அனுப்பி பதட்டம் ஏற்பட கூடிய பகுதிகளுக்கு தகுந்த
பாதுகாப்பு அளிக்க ஏற்ப்பாடு செய்திருக்க வேண்டும் அல்லவா..!!? ஆனால், எனக்கு
தெரிந்த வரைக்கு அப்படி எந்த பாதுகாப்பும் அளிக்கபடவில்லை. ஏன்..!!??
அதுதான் சூழ்ச்சி. இராமதாசு கைது செய்யப்படுவதால் கலவரம் ஏற்படும்.
கலவரத்தில் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும், பொது மக்களுக்கு இன்னல் விளையும்
அதனால் பா.ம.க-வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்.
அப்படிதான் நடந்தது. சூழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டதட்ட 500க்கும்
மேற்ப்பட்ட பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், 10 அரசு மற்றும் தனியார்
பேருந்துகள் எரிக்கப்பட்டதாகவும், 6 அரசு மதுபான கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும்
சேதாரங்கள் கணக்கு காட்டப்பட்டன ஊடகங்களில். ஆனால், மருத்துவர் கைது செய்யப்பட்டு
சிறையிலடைக்கப்பட வேண்டிய காரணம் என்ன என்பதை கேட்க மறுத்தன இவ்வீணாப்போன ஊடகங்கள்.
வழக்குகள் சுழற்சி முறையில் தொடுக்கப்பட்டன. பரிதாபத்துக்குறிய நிலையில் பாட்டாளி
மக்கள் கட்சி.
வன்முறையாளர்கள் பா.ம.க வினர் என கூப்பாடு போட்டனர் இணைய போராளிகள்.
அரசு தரப்பில் இருக்கும் அத்தனை தவறுகளையும் மறைத்து குற்றம் சுமத்தினர் பாட்டாளி
மக்கள் கட்சியினரை.
சூது கவ்வியது.. சூழ்ச்சி வென்றது.. சூழ்ச்சிகளின் தொடர்ச்சி அடுத்த
பாகத்தில் விரைவில்...
குறிப்பு : பதிவுக்கு சம்பந்தம் இல்லாத எந்த கேள்வியையும் தயவு செஞ்சு கேக்காதீங்க. என்னுடைய பதிவுகளில் குற்றமிருப்பின் தாராளமாக விவாதிக்கலாம்.
குறிப்பு : பதிவுக்கு சம்பந்தம் இல்லாத எந்த கேள்வியையும் தயவு செஞ்சு கேக்காதீங்க. என்னுடைய பதிவுகளில் குற்றமிருப்பின் தாராளமாக விவாதிக்கலாம்.
சூழ்ச்சியில் பா.ம.க – பாகம் 3