வியாழன், 4 ஜூலை, 2013

நான் விரும்பும் நாலு பேரு - ஊடகவியளாலர்கள், பத்திரிக்கையாளர்கள்...


இந்த பதிவு எனக்கு பிடித்த சில ஊடகவியலாளர்களைப் பற்றியது. இவர்கள் சின்னத்திரையில் செய்தி தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்கள். பொதுவாக இவர்களை நான் அதிகம் காணுவது நேர்காணல் நிகழ்ச்சிகளில்தான்.

சரி, இனி அந்த ஊடகவியலாளர்கள் யார்..? அவர்கள் எந்தெந்த தொலைக்காட்சிகளில் பணிபுரிகிறார்கள் என பார்ப்போம்..


1. திரு.கண்ணன்


       இவருடைய பெயர் எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும். பாலிமர் தொலைக்காட்சியில் “மக்களுக்காக” எனும் நேர்காணல் நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்குகிறார். நேர்காணலின் போது எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய மலர்ந்த முகத்துடன் காட்சியளிப்பார். மிக சிக்கலான கேள்விகளை சாமர்த்தியமாக சரியான தருணங்களில் கேட்பார். இந்த.. கிடுக்குப்பிடி-னு கேள்விப்பட்டிருக்கீங்களா...!!? அந்தமாதிரியான கேள்விகளை வெகு சாமர்த்தியமாக கேட்பார்.

ஒரு சில தலைவர்களிடம் சில கேள்விகளை கேட்கும்போது அவர்கள் கோவப்பட நேரிடும். அதுமாதிரியான கேள்விகளை மிக இலாவகமாக கையாள வேண்டும். அம்மாதிரியான கேள்விகளை கேட்பதில் இவர் சிறப்பாகவே செயல்படுகிறார்.

2. திரு.ஜென்ராம்

       இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “அக்னிப் பரீட்சை” எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதுவும் ஒரு நேர்காணல் நிகழ்ச்சிதான். இவரிடமும் முகத்தில் ஒரு முதிர்ச்சி தெரியும். பார்த்த உடனேயே தெரிந்துவிடும் அரசியல் தலைவர்களிடத்தில் கேள்வி கேட்பதில் நிச்சயம் அனுபவம் மிக்கவராகதான் இருப்பார் என்று. முதலாமானவரைப் போலவே இவரும் மிகவும் சாமர்த்தியசாலி என்பதை கேள்விகளை கேட்கும்போதும், சில சமயங்களில் தலைவர்கள் கேட்கும் எதிர் கேள்விகளுக்கு சரியான தக்கதொரு பதிலை சமயோகிதப் புத்தியுடன் சொல்வதிலேயே தெரிந்துகொள்ளலாம்.

எனக்கு தெரிந்து இவரை நிகழ்ச்சியின்போது சிரித்தமுகத்துடன் பார்த்த்தே இல்லை. ஆனாலும் கேள்விகளை மிக நேர்த்தியாக கேட்பார்.

3.திரு.ரங்கராஜ் பாண்டே :

       இவர் தந்தி தொலைக்காட்சி நிருபர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் எனக்கு பிடித்தது “கேள்விக்கென்ன பதில்” மற்றும் “ஆயுத எழுத்து” ஆகிய நிகழ்ச்சிகள்தான். இவரைப் பார்த்த உடனேயே சொல்லிவிடலாம் இவருக்கு அதிகப்படியான முன் அனுபவம் கிடையாது என்று.

தமிழ் ஊடகங்களில் ஒரு துடிப்பான இளம் ஊடகவியளார்.

இவர் “கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சியில் தனி நபர்களை பேட்டி காணும்போதும், “ஆயுத எழுத்து” நிகழ்ச்சியில் அழக்கப்பட்டுள்ள பிரமுகர்களிடம் கேள்விகளை தொடுக்கும் போதும் தன் நிலை உணர்ந்த ஒரு தெளிவான நிலையில் இவர் இருப்பதை காண இயலும். நிச்சயமாக இவர் பேட்டி காணும் அனைவரும் மிகப் பெரிய அனுபவசாலிகள்தான். அப்படிப்பட்டவர்களிடம் கேள்விகளை கேட்பதற்க்கு ஒரு பக்குவம் வேண்டும். அந்த பக்குவம் இவருக்கு இருக்கிறது. இருப்பினும் இவர் தாண்ட வேண்டிய கட்டங்கள் மிக அதிகமாக இருப்பதாகவே நினைக்கிறேன்.

4.ஹரிஹரன் :

       இவரும் தந்தி தொலைக்காட்சி நிருபர்தான். இவரும் “ஆயுத எழுத்து” நிகழ்ச்சியில் தோன்றுபவர். துடிப்புமிக்க அடுத்த இளம் ஊடகவியலார். இன்முகத்துடன் துடிப்புடன் இருக்கும் இவரது பேச்சுகள். அதிகம் அனுபவம் இல்லை என்பதை கண்டவுடன் உணர முடியும், இளைஞர் என்பதால். இருப்பினும் சாமர்த்தியமாக செயல்படுவார். எதிர் கேள்விகளை கையாள்வதில் இவரும் சிறப்பாகவே செயல்படுகிறார். இளம் ஊடகவியலாளர் என்பதால் ஏற வேண்டிய படிகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன.


இவ்வூடகவியலாளர்கள் அனைவரும் மேன்மேலும் பல சிறப்புகளைப் பெற்று தங்கள் வாழ்வில் பல சாதனைகளை புரிந்து என்றும் இன்புற்று வாழ எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.
இவர்கள் அனைவரைவிடவும் நான் வயதில் இளையவன், இருப்பினும் வாழ்த்த வயது ஒரு தடையல்ல; மனம் இருந்தால் போதும் என்பதால் எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.

மேலும் இவர்களுடைய பெயர்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை, இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை. தெரிந்தவர் எவரேனும் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

6 கருத்துகள்:

 1. என்ன கொடும சரவணன் இதெல்லாம்... இவ்ளோ பேரு வந்துருக்கீங்க உங்க ஒருத்தருக்கு கூடவா இவங்கள்ல யாரு பேரும் தெரியல..!!???
  :(

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. வெகு நாட்களுக்கு பிறகு இன்றுதான் பதில் கிடைத்திருக்கிறது..
   தங்கள் வருகைக்கும், கருத்திற்க்கும் மிக்க நன்றி..

   நீக்கு