புதன், 10 ஜூலை, 2013

சூழ்ச்சியில் பா.ம.க – பாகம் 1


எப்பொழுது பா.ம.க தனித்து தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்ததோ அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது பா.ம.க விற்க்கு எதிரான அரசியல் வலைப்பின்னல். பா.ம.க வின் இந்த அறிவிப்பால் மிகப்பெரிய பாதிப்பை அடையபோவது இந்த திராவிட கட்சிகள்தான். குறிப்பாக அ.தி.மு.க-வை விட தி.மு.க-விற்குதான் அதிகப்படியான பாதிப்பு.

எப்படி..!!?

வட மாவட்டங்களில் தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் அ.தி.மு.க-வை விட அதிகம். அதனால் பா.ம.க தனித்து போட்டியிட்டால் தி.மு.க-விற்கு பெருத்த சேதாரம் ஏற்படும். அதே சமயம் அ.தி.மு.க-விற்கும் பாதிப்பு இல்லாமல் இல்லை. நிச்சயம் அ.தி.மு.க-வையும் பாதிக்கும்.

ஏற்கனவே தே.மு.தி.க-வை கையாலாகாத கட்சியாக மாற்றியாகிவிட்டது. இந்நிலையில், பா.ம.க தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால் அ.தி.மு.க-வை பாதித்த தே.மு.தி.க-வில் இணைந்த வாக்குகள் தே.மு.தி.க-விலிருந்து பா.ம.க-விற்க்கு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும், இளைஞர்களை அதிகம் கொண்ட கட்சியாக இருப்பதுவும், இளைஞர்களை அதிகமாக அரசியலில் ஈடுபடுத்துவதுமான கட்சியாக இருப்பதுவும் பா.ம.க மட்டுமே. அதற்க்கு காரணம் இன்றைய அரசியல் கட்சிகளில் இளம் தலைவர்களை அதிகம் கொண்ட கட்சியாக பா.ம.க மட்டும்தான் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், இன்றைய இளைஞர்கள் தமிழ், தமிழர் சார்ந்த நிகழ்வுகளில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இங்கு ஒரு தமிழனை முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் ஒரே கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே இருக்கிறது. ஏனைய கட்சிகள் மறந்தும்கூட ஒரு தமிழனை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தமாட்டார்கள். ஆதலால், பா.ம.க-விற்கு வாக்குகள் வெகுவாக அதிகரிக்கும்.

மேலும், அக்காலத்தில் பேசியதைப்போல தமிழில் நயமாக பேசியோ, திரைப்பட கவர்ச்சியாலேயோ இக்கால இளைஞர்களை கவர முடியாது. ஏனென்றால், இக்கால இளைஞர்களுக்கு சரியாக தமிழும் தெரியாது, இவர்களின் நயமான பேச்சும் புரியாது. கூடவே அதிகமான வெளிநாட்டு திரைப்படங்களையும் பார்க்கின்றனர். அதனால, சினிமா கவர்ச்சியும் எடுபடாது.

கூடங்குளம் அணு உலையை அம்மக்களுக்கு ஆதரவாக முழுமையாக எதிர்த்தது பாட்டாளி மக்கள் கட்சி. இத்திராவிட கட்சிகளோ மக்களை முட்டாளாக்க நினைத்து தோல்வியை சந்தித்தது.

அதேசமயம் ஈழ உறவுகள் பிரச்சனையில் இத்திராவிட கட்சிகளின் கள்ளத்தனம் தெளிவாக மக்களுக்கு புரிய ஆரம்பித்தது. இங்கு பா.ம.க வின் செயல்பாடுகள் அதிக வரவேற்ப்பை பெற்றன. தி.மு.க டெசோ நாடகத்தால் மக்கள் எரிச்சலடையும் சமயத்தில் மருத்துவர் இராமதாசால் நிறுவப்பட்ட “பசுமை தாயகம்” அமைப்பின் மூலமாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான அழுத்தத்தை கொடுத்து வந்தது பா.ம.க. இத்தகைய செய்திகள் ஊடகங்களில் பெரிதாக ஒளிபரப்ப்படாவிட்டாலும், உண்மை அறிந்த இளைஞர்களால் சமூக ஊடகங்கள் வழியாக செய்திகள் பரப்பப்பட்டது. இது பா.ம.க மீதான நன்மதிப்பை மேலும் உயர்த்தியது.

இப்படியாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்கு அதிகமாகும் வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது.

இங்குதான் திராவிட கட்சிகளின் குள்ள நரித்தனம் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. ஒரு வழியாக தே.மு.தி.க மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து ஒழிந்தாகிவிட்டது. இனி பா.ம.க மட்டும்தான். பா.ம.க வை எப்படி ஒழிப்பது..!!?

திராவிட சூழ்ச்சிக்கு வேலை வந்தது. வேறு வழியெ இல்லை. பா.ம.க-வின் மீதான நற்பெயரை கெடுத்தே ஆக வேண்டும். அது மட்டுமே ஒரே வழி என சூழ்ச்சியை விரித்தன இந்த திராவிட கட்சிகள். பா.ம.க மீதான சாதி வெறி கரையை தூசுதட்டியது.
இவர்களின் சூழ்ச்சிக்கு நல்வாய்ப்பாக அமைந்தது தருமபுரி கலவரம்.

ஒரு பரையர் சாதியை சார்ந்த இளைஞன் வன்னியர் சாதியை சார்ந்த பெண்ணை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறான். அப்பெண்ணின் தந்தை அவ்விளைஞனிடமிருந்து தன் பெண்ணை பிரித்து தன்னுடன் அழைத்துவர முனைகிறார். அதில் தோல்வியடைந்து தற்க்கொலை செய்துகொள்வதென முடிவெடுத்து உயிரை மாய்த்துகொள்கிறார். இதன் தொடர்ச்சியாக இறந்தவரின் உறவினர்களும், மற்றும் பிற சாதியினரும் சேர்ந்து கலவரம் செய்கின்றனர் மூன்று தலித் கிராமங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன.

இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு கிராமத்தை அடைகிறது. அடக்கம் செய்ய யாரும் இல்லை அனைவரும் சிறைச்சாலைகளில் கைதிகளாக. இறந்தவர் தே.மு.தி.க கட்சியை சார்ந்தவர். அக்கட்சியை சார்ந்தவர்கள் ஒருவரும் அப்பக்கம் எட்டிகூட பார்க்கவில்லை.[தே.மு.தி.க நண்பர்களே, உங்கள் கட்சி பிரமுகர் செய்தது சரியோ, தவறோ அவரது உயிரிழப்புக்கு ஆறுதலாக பேச கூட உங்கள் கட்சி இல்லை. நாளைக்கு உங்களுக்கும் இதே நிலைமைதான்.]

இங்குதான் பா.ம.க உள்வருகிறது இறந்தவருக்கு இறுதி சடங்கு செய்வதற்காக. ஏன் பா.ம.க வரனும்..!!? தக்காளி, நீங்க யாரும் வர மாட்டீங்க பா.ம.க-வும் வரகூடாதுனா என்னயா உங்க ஞாயம்..!!?. ஒரு வன்னியன் பாதிக்கப்பட்டால் நீங்க யாரும் கேக்க மாட்டீங்க, ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயம் உறுதுணையாக நிற்க்கும்.

இங்குதான் இத்திராவிட நரிகளின்[தி.மு.க] சூழ்ச்சி களமிறங்குகிறது. ஏன்..!!?

[இக்கலவரம் நடந்த அந்த சமயத்தில் அனைவரது பார்வையும் ஐ.நா சபை கூட்டம் மற்றும் இலண்டன் உலக தமிழர் மாநாட்டின் மீதுதான் இருந்தது. இங்கு பா.ம.க வின் பங்களிப்பு குறிப்பிடதக்கது. பா.ம.க வின் பங்களிப்பு இணையத்தின் வழியாக பரவி பா.ம.க அனைத்து தரப்பினராலும் பாராட்டு பெறுகிறது. பா.ம.க வின் இச்செயலால் தி.மு.க வின் டெசோ நாடகம் பெருத்த அடியை சந்திக்கிறது.]

இந்த சமயத்தில், இவ்வாய்ப்பை பயன்படுத்திய தி.மு.க உண்மை அறியும் குழு என்ற ஒரு குழுவை தருமபுரி கலவர பகுதிக்கு அனுப்புகிறது. அக்குழு ஏற்கனவே முடிவு செய்த தகவலைதான் வெளியிடப்போகிறது. இருப்பினும் வெளி உலகிற்க்கு தாங்கள் கலவர பகுதியை பார்வையிட்டு விசாரணை செய்ததாக காண்பிக்க குடிசைகள் எரிக்கப்பட்ட பகுதியை பார்வையிடுகிறது. சிலரிடம் விசாரணையை மேற்க்கொள்கிறது. ஒரு பக்க விசாரணை முடிகிறது. இப்போது அடுத்த பக்கத்தை விசாரிக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் தவிர்க்கிறது அக்குழு. அத்துடன் தங்களது விசாரணையை முடித்துக்கொண்டு அறிக்கையை வெளியிடுகிறது. பா.ம.க தான் முழுக்க முழுக்க இக்கலவரத்திற்க்கு காரணம் என்று. இத்தனைக்கும் கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் அ.தி.மு.க-வினர் 16 பேர், தி.மு.க-வினர் 14 பேர், ம.தி.மு.க-வினர் 8 பேர், பா.ம.க-வினர் 10 பேர் மற்றும் தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சியினர் என அனைத்து கட்சியினரும் உள்ளடக்கம். ஆனாலும் பா.ம.க வினர்தான் கலவரத்திற்க்கு காரணம் என அக்குழு அறிவிக்கிறது.

திராவிட மற்றும் பார்ப்பன ஊடகங்களால் இச்செய்தி பிரதான செய்தியாக பரப்பப்படுகிறது. அனைவரது மத்தியிலும் பா.ம.க சாதி வெறி கட்சியாக திணிக்கப்படுகிறது. பா.ம.க வின் அனைத்து நற்ச்செயல்களும் இங்கு மறைக்கப்படுகிறது. மேலும் இக்கலவரத்தில் கைது செய்யப்பட்ட பிற கட்சியினரைப் பற்றிய தகவல்களை மூடி மறைக்கின்றன இந்த வீணாபோன ஊடகங்கள்.

இதன் அடுத்தகட்டமாக, கொங்கு கவுண்டர்கள், தேவர்கள், நாயுடுகள், மற்றும் பல சாதிய அமைப்புகள் இணைந்து மருத்துவர் இராமதாசிடம் ஒரு கோரிக்கையை வைக்கின்றன. அக்கோரிக்கையை ஏற்று “அனைத்து சமுதாய பேரியக்கம்” என்ற ஒரு அமைப்பை தொடங்குகிறார் மருத்துவர் இராமதாசு.

அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கூட்டம் போட்டு சில தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர். அத்தீர்மானங்களில் மிக முக்கியமானது வங்கொடுமை தடுப்பு [PCR ACT] சட்டத்தில் திருத்தம் கொண்டுவருதல். பிற சாதியினர் அனைவரும் PCR சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என முழங்கியபோது திருத்தம் மட்டும் போதும் என கேட்டவர் மருத்துவர் இராமதாசு மட்டும்தான். இங்கு ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என பாடுபட்டவரே அச்சட்டத்தில் திருத்தம் வேண்டும் என போராடுவதுதான் வருத்தத்துக்குறிய சேதி. அவரை அந்நிலைக்கு தள்ளியது சில தலித் அமைப்புகள்தான். உதாரணமாக வழக்குறைஞர் இரஜினிகாந்த் மேட்டுப்பாளையத்தில் பேசிய பேச்சுகள். காணொளி ஆதாரம் Youtube-ல் இருக்கிறது.

மருத்துவர் இராமதாசு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பேசுகிறார், PCR சட்டத்தில் திருத்தம் கோருகிறார் என கூப்பாடுபோட்ட ஊடகங்கள் அவர் ஏன் அப்படி பேசுகிறார். அப்படி என்ன ஞாயம் அவரிடத்தில் இருப்பதாக நினைக்கிறார் என்பதை அறிய முற்படவில்லை. பின்புலத்தில் திராவிட சூழ்ச்சி.

இச்சூழ்ச்சியின் பலனாக பா.ம.க வும், மருத்துவர் இராமதாசும் செய்த அனைத்து நற்ச்செயல்களும் மறைக்கப்பட்டு இவ்விணையதள போராளிகளால் சாதி வெறி கட்சியாகவும், சாதி வெறியராகவும் வசைபாடபட்டது.

இச்சம்பவம் பற்றி மருத்துவர் அன்புமணி சொன்ன ஒரு கருத்து : It’s an isolated incident. அதாவது இது ஒரு தனிப்பட்ட சம்பவம்.

தேவையில்லாமல் இச்சம்பவத்தில் அரசியலை நுழைத்து அசிங்கப்படுத்தியுள்ளன சில அரசியல் கட்சிகள். இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் விரைவில்...


சூழ்ச்சியில் பா.ம.க – பாகம் 3

27 கருத்துகள்:

 1. நன்றி

  சொல்லியிருப்பது அனைத்தும் உண்மை.
  மிக முக்கியமான நேரத்தில் வந்துள்ள முக்கியமான கட்டுரை.

  மருத்துவர் இராமதாசு மற்ற அரசியல்வாதிகளைப்போல அன்போடு ஆரத்தழுவுவதுபோல முதுகிலே கத்தியை இறக்குபவர் அல்லர், அடுக்கு மொழியிலே அழகுத்தமிழிலே நயமாக பேசும் அரசியல்வாதியல்ல, கேமராவின் முன்னால் மட்டுமல்லாமல் எல்லாரிடத்திலும் எல்லா இடத்திலும் நடிக்கும் மனிதர்களுக்கிடையில் மனதிற்கு பட்டதை நேரடியாக சொல்லும் குணம் படைத்தவர், ஆதரித்தால் பலமாக ஆதரிப்பதும் எதிர்த்தால் பலமாக எதிர்ப்பதும் இவரது இயல்பு, நாளை இவரோடு கூட்டணி வைத்தால் என்ன செய்வது, இவரை ஆதரித்தால் என்ன செய்வது என எண்ணி பசப்பு மொழிகள் பேசி கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாக செயல்படுபவர் அல்ல, இவருடைய பேச்சும்,செயல்களும் அதிரடியாக இருக்கும், இதுதான் இவருடைய மிகப்பெரிய பலம், மிகப்பெரிய பலவீனமும்

  பதிலளிநீக்கு
 2. Always you are saying Ayya Raamadaas..ayya...raamadaas...do you know the history of PMK ? how its grow up for a party ? Before blame others, first we have to correct our mistake. DO you know Mr. PalaniBaBa....? who is he ?. he is the key maker and create the PMK party and when he was killed...nobody from PMK specially who you are calling...ayyaa. or his family nobody visit and to see him. why...can you tell me the truth answer.? PMK it was all the people party and now only only few people which you are calling "vanniyar". Original vanniyar willnot come under Raamadas. because he is a selfish person. not only for him and his family too. how many member are working under PMK for a long time...still working but benefit all belongs to raamadaas family only. is this correct ? i am waiting for your reply. and my id azifairalways@gmail.com...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னோட இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை நீங்கள் கேட்டிருப்பதாகவே எண்ணுகிறேன். இருப்பினும், நான் அறிந்த அளவில் உங்களுடைய கேள்விகளுக்கு பதில் உரைக்கிறேன்.
   //*Always you are saying Ayya Raamadaas..ayya...raamadaas... *//
   இதுல உங்களுக்கு என்ன கஷ்டம்..!!?
   //* do you know the history of PMK ? how its grow up for a party ? *//
   போதுமான அளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்கேன்.
   //* Before blame others, first we have to correct our mistake. *//
   சம்பந்தமே இல்லாம குறை கூறி குற்றம் சுமத்தும் போது அதற்க்கான தக்க பதிலடி கொடுக்கதானே வேண்டும்.
   //* DO you know Mr. PalaniBaBa....? who is he ?. he is the key maker and create the PMK party and when he was killed...nobody from PMK specially who you are calling...ayyaa. or his family nobody visit and to see him. why...can you tell me the truth answer.? *//
   பா.ம.க வின் தொடக்க வரலாற்றை பற்றிய பேச்சுகளின் போது பழனி பாபா வைப் பற்றி அறிந்தவர்கள் பேச கேட்டிருக்கிறேன். சில தகவல்கள் இணையதளங்களில் படித்து தெரிந்திருக்கிறேன்.
   http://melapalayamvoice.blogspot.in/ இந்த வலைப்பூவில் பாபாவின் இறுதி சடங்கில் மருத்துவர் பேசியதாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பக்கத்துக்கு போய் பாத்துட்டு அவங்ககிட்டயே விளக்கத்தையும் தெரிஞ்சுக்கோங்க..
   //* PMK it was all the people party *//
   இன்னைக்கும் பா.ம.க அனைத்து மக்களுக்கான கட்சிதான்.
   //* and now only only few people which you are calling "vanniyar". *//
   அப்படினா.. தொடக்கத்தில் வன்னியர் யாருமே பா.ம.க வில் இல்லைனு சொல்றீங்களா..!!? நகைப்பாக இருக்கிறது.
   //*Original vanniyar willnot come under Raamadas.*//
   உண்மையான வன்னியர்கள் யாருனு சொன்னீங்கனா நல்லாயிருக்கும்.
   //* because he is a selfish person. not only for him and his family too. how many member are working under PMK for a long time...still working but benefit all belongs to raamadaas family only.**/
   அப்படினா பா.ம.க வின் மிக முக்கிய பொறுப்புகளும், அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டவர்களும் பா.ம.க வில் சமீபத்தில் சேர்ந்தவர்களா..!!? மருத்துவரின் உறவு முறையினரா..!!??
   //** is this correct ? i am waiting for your reply. and my id azifairalways@gmail.com... **//
   உங்கள் கேள்விகளுக்கான பதில் கொடுக்கப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன்.

   நீக்கு
 3. மிக அருமையான பதிவு ..நன்றி உண்மை வன்னியன் என்றும் பாமக வில் தான் இருப்பான்

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிவு தோழரே உண்மை வன்னியன் என்றும் பாமக வில் தான் இருப்பான்

  பதிலளிநீக்கு
 5. You are very fraud, when I gave thumps down in vote, and show the results as 1, after seeing this one later later, no result against voting.

  I AM SURE, POSTING THIS MESSAGE ABSOLUTELY WRONG, THAT IS THE REASONS YOU ARE NOT ALLOWING ANYONE. YOU WILL NOT STAND IN SITE FOREVER

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யய்ய..!! என்னயா சுத்த வெவரம்கெட்ட மனுசனா இருக்க..
   அது www.graddit.com என்ற இனையதளம் வெளியிடும் ஒரு உபகரணம். நான் என் வலைப்பூவை படிப்பவர்கள் எனது பதிவை மதிப்பீடு செய்வதற்க்காக இங்கு இணைத்திருக்கிறேன். உங்களோட வலையமைவுல எதாவது கோளாரா இருக்கலாம். என்னால அந்த உபகரணத்துல எதையும் செய்ய முடியாது.

   சந்தேகம்னா பின்வரும் இந்த இணைப்பை போய்ட்டு பாத்துக்கோங்க..
   http://www.graddit.com/eng/ratings-widget

   அனேகமா எனக்கு விழுந்திருக்குற 4 குறை மதிப்பீடும் உங்களோடதாதான் இருக்கும்னு நெனைக்கிறேன். இது எல்லாத்துக்கும் முன்னாடி நீ யாருனு அடையாள படுத்து.. நான் ஒன்னும் உன்ன கடிச்சு தின்னுடமாட்டேன்..

   நீக்கு
 6. I have a question. Ramadoss told that "If anyone come from my family into politics, you people can slap in front of the public". What happened to that?

  Can you please answer me for this?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.. முடியலடா சாமி..!! ஏன்னா இந்த கேள்விக்கான பதிலை பல எடத்துல படிச்சு படிச்சு அலுத்துடிச்சி.. போதாகொறைக்கு பல பேருகிட்ட இத பத்தி பேசி சோர்ந்துட்டேன்.. இப்ப நீங்களும் அதே கேள்வி..

   இதுல கொடுமையான சேதி என்னனா..!! இந்த கேள்விக்கும் எனது பதிவுக்கும் சம்பந்தமே இல்ல.. இத விட முக்கியமானது நான் பா.ம.க-வில் அடிப்படை உறுப்பினராக கூட இல்ல.. பா.ம.க வை ஆதரிக்குற சாதாரண பொதுமக்கள்ல நானும் ஒருத்தன்..

   இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச அளவுல மேலோட்டமாவும், விரிவான தகவல்களுக்கு சில இணைப்புகளையும் கொடுக்குறேன்.

   வேறு வழி இல்லாமல் கட்சியை காப்பாற்ற அரசியலுக்குள் இழுக்கப்பட்டவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு. இதில் மருத்துவருக்கு விருப்பம் கிடையாது. இத்தகவலை பல நேர்காணலின்போது அன்புமணியே தெரிவித்திருக்கிறார். ஆனாலும் சிலர் எவ்வளவுதான் விளக்கம் கொடுத்தாலும் வேண்டுமென்றெ மீண்டும் மீண்டும் இதே கேள்வியை கேட்டு வெறுப்படைய செய்கின்றனர்.

   http://kuzhali.blogspot.in/2005/05/3.html

   இந்த ஒரு நிரலியே போதும்னு நெனைக்கிறேன்..

   நீக்கு
 7. So nobody is there in PMK to believe for Ramadoss, thats why Anbumani came to Politics. What a qualification to enter into Politics!!!...Gr8....

  Meanwhile, why anbumani didn't resign during eelam war? Dont tell me he was not a minister at that time. He resigned Apr 2009 only.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோவ் நீ யாரு..? உன் பேரு என்ன..? உன் ஊரு எது..? மொதல்ல நீ யாருனு உன்ன அடையாள படுத்து.. பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்வியை கேக்காதனு தமிழ்லதான சொல்லியிருக்கேன்..
   ----------------
   நான் கொடுத்த இணைப்புக்கு போய் படிச்சு பாத்தியா..!!? நீ கிண்டல் பண்ணி எழுதியிருக்கறதால அதுக்கு மட்டும் பதில் சொல்றன்..
   உனக்கு ஒரு பிரச்சனை உங்கிட்ட ரெண்டு வகையான தீர்வு இருக்கு. ஒன்னு தற்காலிக தீர்வு இன்னொன்னு நிரந்தர தீர்வு. நீ எதை தேர்ந்தெடுப்ப.. மூளை இருக்குற எவனா இருந்தாலும் நிரந்தர தீர்வைதான் தேர்ந்தெடுப்பான். அந்த நிரந்தர தீர்வு அண்புமணிதான்.. அததான் பா.ம.க செஞ்சிருக்கு.. இதுக்கு பா.ம.க-வுல நம்பிக்கையான ஆளுங்க யாரும் இல்லனு அர்த்தமில்ல.. அங்க இருந்த அடுத்தகட்ட தலைவர்களில் அன்புமணி மட்டும்தான் பா.ம.க-வினர் எல்லோராலையும் ஏற்றுக்கொள்ள கூடியவராக இருந்தார்.
   ----------------
   பா.ம.க சம்பந்தமான உங்களோட எல்லா கேள்விகளுக்கு முகநூல்ல
   Pattali Makkal Katchi (PMK) Internet Wing அப்படினு ஒரு குழு இருக்கு. அங்கபோய் கேளுங்க.. கேள்விகளை ஒழுங்கா ஞாயமான முறையில கேக்கனும்.. ஏதாவது நக்கல் பண்ணிணா "டங்குவாறு" அறுத்துடுவானுங்க..

   நீக்கு
  2. I'm Prakash from Madurai. Thanks for your KIND reply. It is my mistake to visit your site and asking questions to you. Sorry for the inconvenience. Keep your "டங்குவாறு" with yourself.

   நீக்கு
  3. தங்கள் வருகைக்கும், என் பதிவினைப் பற்றிய உங்கள் கருத்திற்க்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 8. வரிக்கு வரி நல்ல காமெடி , இந்த காமெடியில் " நான் கண்ணசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? " என்று உங்கள் காடுவெட்டி அய்யாவின் டயலாக்கும் , அதை வழிமொழிந்த ரோமதாசு அய்யாவின் டயலாக்கும் வரவே இல்லைய !

  2012-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு விழா மாநாட்டில் “வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” என்று காடுவெட்டி குரு பேசியதும் வரவே இல்லையே !

  இந்த லட்சணத்தில் பேஸ்புக்கில் இருந்து கொண்டு டங்குவாரை வேறு அருத்துவீங்கலாக்கும் ! சிப்பு சிப்ப வருது..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்ககிட்ட அடிப்படை பண்பே இல்லீங்க.. ஒருவரிடமுள்ள நிறைகளை தெரிவிக்கும்போதோ, பாராட்டும்போதோ தான் யார் என்பதை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக ஒருவரை தூற்றும்போதும், அவர் நிலைக்கு எதிரான கருத்தை கூறும்போதும் நிச்சயம் பொய் உரைக்காமல் நீங்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.
   ------------------
   இப்பதிவு வன்னியர் சங்க மாநாட்டைப் பற்றியது அல்ல. இது பா.ம.க-விற்கு எதிராக திராவிடத்தால் விரிக்கப்பட்டிருக்கும் சூழ்ச்சியைப் பற்றியது. தேவையில்லாத சேதிகளை சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
   ------------------
   நிச்சயமாக நீங்க தி.மு.க அல்லது தமிழனல்லாத திராவிடனாகத்தான் இருப்பீங்க.
   ------------------
   என்கிட்ட எதுக்கு வெட்டியா பேசிகிட்டு.. நான் சொல்லியிருக்கறது பா.ம.க வினரால் நடத்தப்படும் குழுக்களில் ஒரு குட்டி குழு. முடிஞ்சா அங்க போய் பேசி பாரு.. Tongue வாற அறுக்கறாங்களா இல்லையானு தெரியும்.. உங்க சிப்பு-லாம் எப்படினு அங்கபோய் பேசி பாருங்க தெரியும்..

   நீக்கு
  2. sir, please dont try to give a hype that PMK has strong base.. it is just one another party in the state thats it. we had seen several election results..! vijayakanth has more votes than PMK which is proven result in the past elections.
   PMK also had a very bad defeat in the last loksabha. people toally rejected them. !

   so neither DMK or ADMK or other dravidian parites dont have to do anything to supperss PMK. PMK is already a gone case party in the state.. it may be in the 5th or 6th place.

   நீக்கு
  3. @Rajasekar : பா.மா.க உருவாக்கப்பட்டதிலிருந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் இங்கே கொடுக்கிறேன். பா.ம.க விற்கு வலிமையான அடித்தளம் இருக்கிறதா இல்லையா என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.
   அதுவும் தி.மு.க எதிர்ப்பு அலையிலும், அவர்களுடன் கூட்டனி வைத்தும் பா.ம.க வின் வாக்கு எண்ணிக்கை சரியவில்லை..

   ஆமாம், கடந்த மக்களவை தேர்தலில் பா.ம.க படு தோல்வியை சந்தித்தது. ஆனால், அவர்களின் மீள் எழுச்சியை ஒரே ஒரு இடைத்தேர்தலிலேயே(பொன்னாகரம்) காட்டிவிட்டார்களே.. அதையும் கவனியுங்கள்..

   அப்போது இருந்த காலநிலை அல்ல, இப்போது இருப்பது.. இளைஞர் சக்தியை அதிகமாக கொண்டிருக்கிறது பா.ம.க..

   வருடம் - வாக்குகள் - வெற்றி - போட்டியிட்டது
   1991 -- 1,452,982 -- 1 -- 21
   1996 -- 1,042,333 -- 4 -- 33
   2001 -- 1,557,500 -- 18 -- 34
   2006 -- 1,863,749 -- 18 -- 38
   2011 -- 1,927,783 -- 3 -- 29

   நீக்கு
  4. even if you show all this data, there is a minimum increase in their vote increase from 91 - 2011 , even after 20 years, there base increased only to 5 Lakhs.. is that a good increase?

   more over PMK had contestted with DMK adn ADMK alliance.. ! so we are not sure of what is the acutal base and sure it will be less than these numbers..

   also do u have a party with 3 and 18 MLAs can be a strong party ? the new comer DMDK has 29 MLS..

   20 years la they didnt even reach 25 MLAs.

   நீக்கு
  5. நிச்சயமாக இது போதுமான வளர்ச்சி இல்லைதான்.. ஆனால் வளர்ச்சி இல்லை என சொல்ல முடியாது. மேலும் பா.ம.க வின் அடித்தளம் எந்த பாதிப்பும் இல்லாமல்தான் இருக்கிறது. இத்தனைக்கும் பண்ருட்டியார், பேராசிரியர் தீரன் போன்றோர் விலகிவிட்டனர் என்பதையும் கவனிக்கவேண்டும்.

   //** we are not sure of what is the acutal base **// வரும் தேர்தல்களில் தெரிந்துகொள்ளலாம். 1991,1996 -ஐ தவிர்த்து ஏனைய தேர்தல்களை பா.ம.க கூட்டனி வைத்தே சந்தித்துள்ளது. அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டே இனி பா.ம.க தலைமையில்தான் தேர்தலை சந்திக்கபோவதாக அறிவித்துள்ளது.

   //** a party with 3 and 18 MLAs can be a strong party ? **// நிச்சயமாக 3 ச.ம.உ க்களை வைத்து வலிமையான கட்சி என்று சொல்ல முடியாது. வெறும் ச.ம.உ-க்களை வைத்துக்கொண்டு நாம் பா.ம.க வலிமை இல்லாத கட்சி என்ற முடிவுக்கும் வர முடியாது. ஏனெனில், பா.ம.க இதுவரை அதிகபட்சமாக 38 தொகுதிகளில் மட்டுமே மொத்தமாக போட்டியிட்டுள்ளது.
   மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை கணக்கில் கொண்டு ஒப்பிடுவது சரியாக இருக்காது. ஏனெனில் கடந்த தேர்தல் தி.மு.க-விற்கு எதிரான பிரதிபளிப்புதான்.. வேறு வழி இல்லாததால் கிடைத்த வெற்றி..

   கடந்த முறை 38 தொகுதிகளில் போட்டியிட்டு 1,863,749 வாக்குகளை பெற்ற பா.ம.க இம்முறை 29 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு 64 ஆயிரம் வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. அதுவும் தி.மு.க-வுடன் கூட்டு வைத்து.

   நீக்கு
 9. உண்மை நிலவரத்தை அருமையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thanks Mr Anbu.. let us wait until next election to see PMKs real base,! but who knows? as usual ramadass will say some reason and join hands wiht ADMK or DMK just a week befoer election.. anything cud happen in politics.

   நீக்கு
 10. நல்ல பதிவு. பா ம க கட்சிக்கும் இணையத்தில் எழுதும் அளவுக்கு நபர்கள் இருக்கின்றனர் என அறிய மகிழ்ச்சி. திராவிடக் கட்சிகளிடம் இருந்து எவராவது தமிழகத்தைக் காப்பாற்ற மாட்டார்களா என என்போன்றோர் பதின்ம ஆண்டுகளாக எண்ணி வருவது உண்மை, பா ம க தான் அந்த வேலையைச் செய்யும் என்று தாங்கள் சொல்வது போல் தோன்றுகிறது. பா ம கவை ஆட்சியில் அமர்த்துவது ஆயிரக்கணக்கான மரங்களைக் காப்பாற்றும் என்றால் அந்த விலை கொடுத்தேனும் மரங்களைக் காப்போம். .

  பதிலளிநீக்கு
 11. நல்ல பதிவு. பா ம க கட்சிக்கும் இணையத்தில் எழுதும் அளவுக்கு நபர்கள் இருக்கின்றனர் என அறிய மகிழ்ச்சி. திராவிடக் கட்சிகளிடம் இருந்து எவராவது தமிழகத்தைக் காப்பாற்ற மாட்டார்களா என என்போன்றோர் பதின்ம ஆண்டுகளாக எண்ணி வருவது உண்மை, பா ம க தான் அந்த வேலையைச் செய்யும் என்று தாங்கள் சொல்வது போல் தோன்றுகிறது. பா ம கவை ஆட்சியில் அமர்த்துவது ஆயிரக்கணக்கான மரங்களைக் காப்பாற்றும் என்றால் அந்த விலை கொடுத்தேனும் மரங்களைக் காப்போம். .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு நன்றி..

   மருத்துவர் இராமதாசின் ஒவ்வொரு அறிக்கையையும் கவனித்தீர்களேயானால், அவர் தமிழ் நாட்டு மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தெரியும்.

   அப்புறம் இன்னொரு சேதி, இன்னைக்கு இருக்கும் பிற கட்சி முதல்வர் வேட்பாளர்களை அன்புமணியுடன் ஒப்பிட்டுபாருங்கள்..

   இன்றைய இளைஞர் சமுதாயத்துடன் ஈடுகொடுத்து உலக அறிவுடன் சிறப்பாக செயல்பட அன்புமணியை விட சிறப்பானவர் யாரும் எனக்கு புலப்படவில்லை..

   WE(Youngsters)CAN RULE.. WE ARE THE PRESENT.. WE CAN CHANGE EVERYTHING...

   நீக்கு