வியாழன், 21 ஜூன், 2012

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - 1992-1997

முதலாம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.கோவிந்தசாமி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

இரண்டாம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.கோவிந்தசாமி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

மூன்றாம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.சுந்தரமூர்த்தி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

நான்காம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.சுந்தரமூர்த்தி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

ஐந்தாம் வகுப்பு :
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலை அறிவியல் : திரு.சுந்தரமூர்த்தி
[ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழுர்]

ஆறாம் வகுப்பு :
தமிழ் : திரு.தேவராஜ்
ஆங்கிலம், கணிதம் : திரு.சிவபெருமாள்
அறிவியல் :திரு. C .முருகவேல் (CM)
சமூக அறிவியல் : திரு.வேல்முருகன்
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

ஏழாம் வகுப்பு :
தமிழ் : திரு.தேவராஜ், திரு.ராஜமோகன்
ஆங்கிலம், கணிதம் :திரு.T.ராமசாமி
அறிவியல் :திரு.C .முருகவேல் (CM)
சமூக அறிவியல் : திரு.இரமேஷ்[Not Permanent . From English medium ]
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

எட்டாம் வகுப்பு :
தமிழ் : திரு.இளஞ்செழியன்
ஆங்கிலம், கணிதம் :  திரு.K . கார்த்திகேயன் [KK ]
அறிவியல் : திரு.தேவநாதன்
சமூக அறிவியல் : திருமதி.ஜனாபாய்
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

ஒன்பதாம் வகுப்பு :
தமிழ் :திரு.இளஞ்செழியன்
ஆங்கிலம், கணிதம் : திரு.ரெங்கா ரெட்டி
அறிவியல் :திருமதி.மாலா
சமூக அறிவியல் :  திரு.ஆழ்வார் 
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

பத்தாம் வகுப்பு :
தமிழ் :திரு. இளஞ்செழியன்
ஆங்கிலம், கணிதம் : திரு. ரெங்கா ரெட்டி
அறிவியல் :திரு. நவ ஜோதி
சமூக அறிவியல் :  திரு.ஆழ்வார் 
[ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

பதினொன்றாம் வகுப்பு :
தமிழ்  :திரு.தர்மராஜன்
ஆங்கிலம்: --, திரு.குணசேகரன்
கணிதம் : திரு.U.தெய்வசிகாமணி (UD)
இயற்பியல் : திரு.செல்வராஜ்
வேதியியல் : திரு.T.தமிழ்செல்வன் (TT)
உயிரியல் :-
          தாவரவியல் : திரு.மணிவண்ணன்
          விலங்கியல் :திரு.தனசேகரன்
[அரசு மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

பன்னிரண்டாம் வகுப்பு :
தமிழ்  :திரு.தர்மராஜன்
ஆங்கிலம்: திரு.குணசேகரன்
கணிதம் : திரு.U.தெய்வசிகாமணி (UD)
இயற்பியல் : திரு.செல்வராஜ்
வேதியியல் : திரு.T.தமிழ்செல்வன் (TT)
உயிரியல் :-
          தாவரவியல் :திரு.மணிவண்ணன்
          விலங்கியல் : திரு.தனசேகரன்
[அரசு மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி.]

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை :
           "ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கீழூர்" இது தாங்க நான் ஒன்னாவதுலேர்ந்து அஞ்சாவது வரைக்கும் படிச்ச என்னோட பள்ளிக்கூடம்.

"கோவிந்தசாமி" எங்களோட ஒன்னாவது வாத்தியார். எங்க பக்கத்து ஊரான  பாச்சார பாளையம் தான் இவரோட ஊரு. ஒன்னாவது மற்றும் ரெண்டாவதுக்கு இவர் தான் வாத்தியார். அ,க,ங,ச... 1,2,3 ...லாம் இவர் தான் சொல்லிகொடுத்தார். எங்க பள்ளிகூடத்துல ஆங்கிலம் சொல்லிக்குடுத்து இவர் மட்டும் தான். A,B,C,D..., One, Two, Three... இது தான் எங்க பள்ளிகூடத்தோட ஆங்கிலம். எனக்கு ஒன்னாவது வாத்தியார ரொம்ப புடிக்கும், அவரு அவரோட வேலைல ரொம்ப தெளிவா இருப்பாரு. ஒரு நாள் கூட பள்ளிகூடத்துக்கு தாமதமா வந்தது இல்ல. இப்பகூட இவர எங்கயாவது பாத்தா நான் வணக்கம் சொல்லுவன். எனக்கு அவர அவ்ளோ புடிக்கும்.
           அடுத்தது "சுந்தரமூர்த்தி"  இவரு அஞ்சாவது வாத்தியார். பக்கத்துக்கு நகரம் குறிஞ்சிப்பாடிலேர்ந்து வருவாரு. மூணாவது, நாலாவது, அஞ்சாவது பசங்கள பாத்துகரதுதான் இவரோட வேல. எங்க ஊருல தமிழ் புலிகளையும், கணக்கு புலிகளையும் உருவாக்கியது இவருதான். அஞ்சாவது இறுதி வரைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் எனக்கு வந்தது இல்ல. ஐந்தாம் வகுப்பின் இறுதி காலகட்டம், சில மாதங்களில் ஐந்தாம் வகுப்பும் முடிந்துவிடும். அந்த நேரத்தில் "சுந்தரமூர்த்தி" வாத்தியார் பணிநிறைவா இல்ல பணி மாற்று இடம் பெற்று போனாரானு தெரியல, அவர் பள்ளிகூடத்துக்கு வரல.
         அவருக்கு பதிலாக தற்காலிகமாக ஒரு ஆசிரியரை நியமனம் செய்தார்கள். அவரோட பேரு "சுபாஷ்". இவரோட ஊரும் பாச்சார பாளையம் தான். அவரு வந்த நேரம் 'தேர்தல்(election time) நேரம். ஒரு நாள், மதிய வேளை பள்ளிகூடத்துல பசங்கலாம் ரொம்ப சத்தம் போட்டுகிட்டிருந்தாங்க. அன்னைக்கு அந்த சத்தம் எனக்கு சுத்தமா புடிக்கல, ரொம்ப எரிச்சலா வந்துச்சி.
           அன்னைக்கு ஒன்னாவது வாத்தியாரு வரல. அவரு விடுமுறைல இருந்தாரு."சுபாஷ்" வாத்தியாரு மட்டும்தான் வந்தாரு, அவரும் பள்ளிகூடத்துல இல்ல, தேர்தல் பத்தி பேச எங்கயோ வெளிய போய்ட்டாரு.
            பசங்க போடுற சத்தம் புடிக்காம, "என்னடா பள்ளிகூடத்த கவனிக்காம  தேர்தல் பத்தி பேச போய்ட்டாரு" னு எனக்கு நானே சொன்னன், இத பக்கதுல கூட யாருக்கிட்டயும் சொல்லல. அந்த மனுஷன் வந்தாரு, வந்த கொஞ்ச நேரத்துலையே என்ன இழுத்துபோட்டு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு, அதுவரைக்கும் அப்படி ஒரு அடிய யாருகிட்டயும் வாங்கனதில்ல. ஏன்டா நம்மள இந்த அடி அடிக்கராருனு பாத்தா..!!? ஒரு அயோக்கிய பய புள்ள நான் பொலம்புன அந்த விஷயத்த அவருகிட்ட மாத்தி போட்டு விட்டுட்டான்.
           "என்னடா பள்ளிகூடத்த கவனிக்காம  தேர்தல் பத்தி பேச போய்ட்டான்" னு நான் சொன்னதா அவன் அவருகிட்ட சொல்லிட்டான். நான் அப்படி சொல்லலன்னு எவ்வளவு சொல்லியும் அவரு கேக்கல. அடி பின்னிட்டாரு.
           அன்னைக்கு தான் நான் முடிவு பண்ணினன்.சாகறதுக்குள்ள என்னைக்காவது ஒரு நாள் அவரு மண்டைல கல்லால அடிச்சிடனும்னு. ஆனா இன்னைக்கு வரைக்கும் இன்னும் அடிக்கல. அன்னைலேர்ந்து அவருக்கு வாத்தியார்ன்ற மரியாதைய நான் குடுக்கறதே இல்ல.
            இப்ப இவரு இருக்காரா இல்லையானு கூட எனக்கு தெரியாது. ஆனா இன்னும் என் கோவம் அடங்கல...
            "செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கறது எவ்ளோ கஷ்டம்னு அத அனுபவிக்கரவனுக்குதான் தெரியும்."

அடுத்து...

பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் [1997-1998] (ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவு)

செவ்வாய், 5 ஜூன், 2012

என்னய்யா நடக்குது இங்க..?

இன்னைக்கு நான் இணையத்தில் நக்கீரனில் படித்த ஒரு விடயம் எரியுற தீயில எண்ணெய் விடற மாதிரி இருந்துச்சுங்க.. இதோ அந்த செய்தி..

//***
ராஜ்யசபா எம்.பி. சச்சினுக்கு கிடைக்கும் சலுகைகள்
[http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=76919]
ராஜ்ய சபா எம்.பி.,யாக புதிய இன்னிங்சை துவக்கியுள்ள சச்சினுக்கு, கிடைக்கும் முக்கிய சலுகைகள்.

* மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பளம். .* சம்பளம் தவிர, மாத படி ரூ. 40 ஆயிரம் கிடைக்கும். இதில், ரூ. 15 ஆயிரம் பத்திரிகை செலவுக்கும், மீதத் தொகை இவரது செயலர் செலவுக்கு தரப்படும்.

* பார்லிமென்ட் நடக்கும் நாட்களில், போக்குவரத்து படி தினமும் ரூ. 2000.* 3 தொலைபேசி இணைப்புகள் இலவசம்.* ஆண்டுக்கு 34 முறை மனைவியுடன் இலவச விமான பயணம் செல்லலாம். * இவரது மனைவி, டில்லியில் இருக்கும் சச்சினை பார்க்க ஆண்டுக்கு 8 முறை இலவசமாக விமான பயணம் செய்து கொள்ளலாம்.

 * இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும், எங்கு சென்று சென்றாலும் ரயிலில் குளிர்சாதன, முதல் வகுப்பில் இலவச பயணத்துக்கு அனுமதி உண்டு.

 * ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் மின்சாரம், 4000 கி.லி., குடிநீர் இலவசம்.* ரூ. 500 செலுத்தி, சச்சின் மனைவி, குழந்தைகளுக்கு அனைத்துவிதமான மருத்துவ உதவியும் பெற்றுக் கொள்ளலாம்.* ஓய்வுக்குப் பின் மாதம் ரூ. 20 ஆயிரம் "பென்ஷன் வழங்கப்படும்.
***// 

சாதாரணமாகவே கோடிகளில் புரளும் ஒருவனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெயரால் இத்தனை சலுகைகள் தேவையா..?

லட்சக்கணக்கான குடும்பங்கள் ஒருவேளை உணவாவது ஒழுங்காக கிடைக்காதா என ஏங்கிகொண்டிருக்கும் நம்ம நாட்டுல உலக கோடீசுவரர்களில் ஒருவராக திகழும் சச்சின் போன்றவர்களுக்கு எதற்க்காக இவ்வளவு சலுகைகள்..?

இவர்கள் அவர்களது துறைகளில் புரிந்த மகத்தான சாதனைகளை போற்றித்தான் இந்த பதவி வழங்கப்படுகிறது என்றாலும், இவர்களைப்போன்றோர்களுக்கான சலுகைகள் மிக மிக அதிகமாகவே படுகிறது...

ஏற்கனவே பணத்தில் கொழித்துகொண்டிருக்கும் இவர்களுக்கு மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் எதுக்காக குடுக்கணும்... 

கௌரவ "டாக்டர்" பட்டம் மாதிரி இந்த பதவியை கொடுத்திருக்கலாமே... 

லட்சங்களிலும் கோடிகளிலும் புரண்டுகொண்டிருக்கும் இவர்களுக்கு அடிமட்ட ஏழைகளின் வலிகளும் வேதனைகளும் எப்படி புரியும்..? நாதியற்று இருக்கும் நடுத்தர வர்க்கங்களைப்பற்றி இவர்களால் சிந்திக்க முடியுமா..?

இப்படி பணம் இருக்கறவன் கிட்டயே மீண்டும் மீண்டும் பணம் சேர்வதை எண்ணி பார்க்கும் போது அடி வயிற்றில் புகைச்சல் சற்று இல்ல ரொம்ப அதிகமாகவே இருக்கிறது...

[நன்றி: நக்கீரன்]

வெள்ளி, 1 ஜூன், 2012

பவர் ஸ்டார் விசிறியும் கோபிநாத்தும் (உல்டா நகைச்சுவை)


வணக்கங்க...

நீயா நானாவில் பேச வருவோர்களை லோலோலோ என்று லொங்கழைக்கும், ஐயா

(ம்.. தொப்பைய நவுத்து..)

கோபிநாத் அவர்களுக்கு வணக்கம்..

சார் சொன்னாரு,

இந்தமாரி கூப்பிட்டு அவமானபடுத்துரதெல்லாம் எனக்கு புடிக்காதுனு..

அப்புறம், என்ன ____க்கு நீ அப்டி பண்ண?

ஏய்.. மூஞ்சில பூரான் உற்றுவன்.. உக்காரு உக்காரு உக்காரு... ஏய்..

டியர் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்..

ப்ளீஸ்.. சிட் டௌன்..

ஏய்.. சீ உக்காரு..

7 ஊரு ரௌடிய பாத்தவன் நானு..

செல்லம். இப்டி வாடி.. வா செல்லம் இப்டி வா.. வந்து நில்லு வா..

அங்..

கத்திரி வெயில்ல, இது என்ன சுசர்லாந்துல இருக்குற மாரி கோட்டு..? ஸ்டைலா..?
அப்படியே அறுத்து எடுத்திரன் பாரு..

ஆமா என் தலைவன் வந்து, உன் கிட்ட பதில் சொன்ன என்ன சொல்லிருக்கணும்? என்ன செல்லம் சொல்லிருக்கணும்?

ஒன்னு ஓகேனு சொல்லிருக்கணும், இல்ல மரியாதையா பேசியிருக்கனும்...

அத விட்டு..

நீ என்னமோ...

உன் அப்பன் ஊட்டு காச எடுத்து செலவுபண்ணமாதிரி அவர அசிங்க படுத்தி அனுப்சிருக்க...

நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? இல்ல அவ்ளோ பெரிய அப்பாடக்கரானு கேக்குறன்...

பத்துக்கு பத்து ரூம்ல..

ஒரே வட்டத்துல நின்னு, திரும்பி திரும்பி பேசுற உனக்கே அவ்ளோ அதுப்புனா...

பெரிய பெரிய கிரௌன்ட்ல,

ஆக்ஷ்னோட சுத்தி சுத்தி பேசற எங்க தலைவருக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்?

இல்ல எவ்ளோ அதுப்பு இருக்கும்ங்ரன்..

தோ.. இருடி ஒரு நிமிஷம் வரன்..

ஹலோ.. ஹ்ம்ம் மச்சான் மச்சான்,,..

இரு ஒரு நிமிஷம் லைன்ல இரு...

மச்சான், விஜய் டிவி கோபிநாத்த நீ எப்படி திட்டுவ?


"யாரு அந்த மங்கூஸ் மண்டையனையா?

ஹேய்ய்.. மச்சான் அவன் ஒரு லூசு டா.. நத்த, எச்ச, அல்பம், ஒரு கேடு கெட்ட பொறம்போக்கு.. உடு மச்சான்..

இப்போ அவன திட்ற மூட்லயே இல்ல..."

ஹ்ம்ம்.. சாரி மச்சான் டிஸ்டர்ப் பண்ணதுக்கு...

யார்னு தெரியுதா? பவர் ஸ்டார் விசிறி(fan)..

உன்ன அவனுக்கு திட்ற மூட்ல இல்லயாம்.. அப்டி இருந்தே இப்படி திட்றான்..

இன்னும் திட்ற மூட்ல இருந்துருந்தாணு வச்சிக்கோயேன்..

கழுவி கழுவி ஊத்திருப்பான்... தோ பாரு கோபி.. பவர் ஸ்டார் மனசுலாம் நோகாம நடந்துக்கோ..

இன்னொரு தடவ உன் மேல ரிப்போர்ட் வந்துச்சி..

ஆ.. தூ...