இன்னைக்கு நான் இணையத்தில் நக்கீரனில் படித்த ஒரு விடயம் எரியுற தீயில எண்ணெய் விடற மாதிரி இருந்துச்சுங்க.. இதோ அந்த செய்தி..
//***
//***
ராஜ்யசபா எம்.பி. சச்சினுக்கு கிடைக்கும் சலுகைகள்
[http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=76919]
ராஜ்ய சபா எம்.பி.,யாக புதிய இன்னிங்சை துவக்கியுள்ள சச்சினுக்கு, கிடைக்கும் முக்கிய சலுகைகள்.
*
மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பளம். .* சம்பளம் தவிர, மாத படி ரூ. 40 ஆயிரம்
கிடைக்கும். இதில், ரூ. 15 ஆயிரம் பத்திரிகை செலவுக்கும், மீதத் தொகை இவரது
செயலர் செலவுக்கு தரப்படும்.
*
பார்லிமென்ட் நடக்கும் நாட்களில், போக்குவரத்து படி தினமும் ரூ. 2000.* 3
தொலைபேசி இணைப்புகள் இலவசம்.* ஆண்டுக்கு 34 முறை மனைவியுடன் இலவச விமான
பயணம் செல்லலாம். * இவரது மனைவி, டில்லியில் இருக்கும் சச்சினை பார்க்க
ஆண்டுக்கு 8 முறை இலவசமாக விமான பயணம் செய்து கொள்ளலாம்.
*
இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும், எங்கு சென்று சென்றாலும் ரயிலில்
குளிர்சாதன, முதல் வகுப்பில் இலவச பயணத்துக்கு அனுமதி உண்டு.
*
ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் மின்சாரம், 4000 கி.லி., குடிநீர் இலவசம்.*
ரூ. 500 செலுத்தி, சச்சின் மனைவி, குழந்தைகளுக்கு அனைத்துவிதமான மருத்துவ
உதவியும் பெற்றுக் கொள்ளலாம்.* ஓய்வுக்குப் பின் மாதம் ரூ. 20 ஆயிரம்
"பென்ஷன் வழங்கப்படும்.
***//
சாதாரணமாகவே கோடிகளில் புரளும் ஒருவனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெயரால் இத்தனை சலுகைகள் தேவையா..?
லட்சக்கணக்கான குடும்பங்கள் ஒருவேளை உணவாவது ஒழுங்காக கிடைக்காதா என ஏங்கிகொண்டிருக்கும் நம்ம நாட்டுல உலக கோடீசுவரர்களில் ஒருவராக திகழும் சச்சின் போன்றவர்களுக்கு எதற்க்காக இவ்வளவு சலுகைகள்..?
இவர்கள் அவர்களது துறைகளில் புரிந்த மகத்தான சாதனைகளை போற்றித்தான் இந்த பதவி வழங்கப்படுகிறது என்றாலும், இவர்களைப்போன்றோர்களுக்கான சலுகைகள் மிக மிக அதிகமாகவே படுகிறது...
ஏற்கனவே பணத்தில் கொழித்துகொண்டிருக்கும் இவர்களுக்கு மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் எதுக்காக குடுக்கணும்...
கௌரவ "டாக்டர்" பட்டம் மாதிரி இந்த பதவியை கொடுத்திருக்கலாமே...
லட்சங்களிலும் கோடிகளிலும் புரண்டுகொண்டிருக்கும் இவர்களுக்கு அடிமட்ட ஏழைகளின் வலிகளும் வேதனைகளும் எப்படி புரியும்..? நாதியற்று இருக்கும் நடுத்தர வர்க்கங்களைப்பற்றி இவர்களால் சிந்திக்க முடியுமா..?
இப்படி பணம் இருக்கறவன் கிட்டயே மீண்டும் மீண்டும் பணம் சேர்வதை எண்ணி பார்க்கும் போது அடி வயிற்றில் புகைச்சல் சற்று இல்ல ரொம்ப அதிகமாகவே இருக்கிறது...
[நன்றி: நக்கீரன்]
Please don't insult Sachin. your article sounds as if he accepted RS seat for monetary benefits. It obviously is ridiculous to say that. Are you asking him to relinquish the salary benefit?. Most of the politicians in our country are stinking rich, rich far beyond the imaginations of a common man.Majority of the wealth is ill-gotten. Why we dont say anything about that?.
பதிலளிநீக்குதவறுகள் இருப்பின் மன்னிக்கவும்..நான் இந்த பதிவுல எந்த இடத்துலையும் 'சச்சின்'-ஐ அவ மரியாதை பண்ற மாதிரியும் எழுதல அரசு குடுக்கற சலுகைகளை பெற தான் பதவிய ஏத்துக்கிட்டாருனும் சொல்லல... கொடுக்கப்பட்ட சலுகைகளை வேண்டாம்னும் சொல்ல சொல்லல... நான் கேட்கிற கேள்விகளே வேற... ஏற்கனவே கோடீசுவரர்களாக இருக்கும் சச்சின் போன்றோர்களுக்கு எதற்க்காக இவ்வளவு சலுகைகள் குடுக்க வேணும்னு நம்ம அரசாங்கத்தையும், இன்றைய அளவில் நம் நாட்டின் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் இளைஞர்களைப் பார்த்துதான் கேக்கறன்... இந்த கோடீசுவரர்களால் எப்படி ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தின் தேவைகளை புரிந்துகொள்ள முடியும்னுதான் கேக்கறன்... இங்கு சச்சினின் பெயரை சுட்டுவதற்கு காரணம், அவர் எவ்வளவு பெரிய கோடீசுவரர் என்பது இணையத்தில் இருக்கும் அனைவருக்கும் ரொம்ப நல்லாவே தெரியும் என்ற காரணமும் வேறு யாரேனும் ஒரு அரசியல்வாதியை சுட்டிகாட்டினால், அவர் எப்பேர்பட்ட பணக்காரர் என்பதை சொல்லவேண்டுமே என்ற எண்ணமும்தான் காரணம்..
நீக்குநண்பரே, என்னை அறிவாளி என்று வஞ்ச புகழ்ச்சியால் புகழ்ந்தமைக்கு நன்றி..
பதிலளிநீக்குநான் சச்சின்-ஐ எந்த அரசியல்வாதியுடனும் ஒப்பிடவில்லை...
இந்த இடுகையில் சில கேள்விகளுடன் எனது வருத்தத்தை பதிவு செய்துள்ளேன் அவ்வளவே..
என் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்குமேயானால், என் ஆதங்கத்தின் அளவை கட்டுப்படுத்த பின்னூட்டமாக பதில் இடுங்களேன்..
தங்கள் கருத்து மிகவும் சரி.
பதிலளிநீக்குதங்கள் கருத்து மிகவும் சரியே.
பதிலளிநீக்குthangal varugaikku nandri..
நீக்குWe can try to clear our home pitch first, then we talk about others...
பதிலளிநீக்குOur politicians only in top list.........
Kindly don't misuse sachin name.
Rather than this, Great work in all other article
Please continue..........
Go Head My Friend