புதன், 15 மே, 2013

மறைந்துபோன சுவடுகள் : கீழுர் பாளையக்காரர்களின் கொடியும் போர்வாளும்



எந்த ஒரு நாட்டிற்க்கும் இன்றும் அன்றும் அடையாளமாக விளங்கியது/விளங்குவது அவர்களின் கொடிதான். அக்கொடியை வடிவமைப்பதில் மிக கவனமாக இருந்திருப்பார்கள்/இருப்பார்கள். ஒரு நாட்டின் கொடியின் விளக்கத்தை வைத்தே அந்நாட்டின் தன்மையையும் வளமையையும் அளவிடலாம்.

நான் இங்கே தெரிவிக்கப்போவது கீழுர் பாளையக்கார அரசின் கொடியைப்பற்றிதான். அக்காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் தங்கள் நாட்டின் கொடியை பெரும்பாலும் கிடைமட்டமான முக்கோண வடிவத்திலேயே அமைத்திருந்தனர். அதற்க்கான காரணம் எனக்கு தெரியாது. கீழுர் பாளையக்காரர்களின் கொடியும் அத்தகைய கிடைமட்ட முக்கோண வடிவிலான கொடிதான்.

கீழுர் பாளையக்காரர்களின் கொடியானது காவி வண்ணத்தில் கிடைமட்ட முக்கோண வடிவத்தில் நீண்டு காணப்படும். கொடியின் மையத்தில் வெள்ளை நிற பசு ஒன்று முன்னோக்கி நின்றவாறு காட்சி தரும். இதுதான் அக்கொடி. நானே வரைந்தது.



18ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தற்போது பாச்சாரபாளையம் என்று அழக்கப்படும் பகுதிக்கு வந்து பாளையம் அமைத்து வடகுத்து ஜமீனிடமிருந்து 8 கிராமங்களை சூழ்ச்சியால் கைப்பற்றி புகழ்பெற்ற பாளையக்காரராக விளங்கிய “ஆன தாண்டவ ராய பாச்சாள நயினார்” அவர்களின் போர்வாள்தான் இது.



கிட்டதட்ட 400 ஆண்டுகள் பழமையான இப்போர்வாள் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதுதான் வருத்தத்திற்குரிய சேதியாக இருக்கிறது.

இவ்வாளினைப் போலவே அளவில் இதை விட சற்று குறைவான இரண்டு போர்வாளும் ஒரு குத்து வாளும் இருக்கிறது. ஆனால், அது வேறொருவரிடம் இருக்கிறது. அதனால் அதனைப் பெறுவதில் ஒரு சிறு சிக்கல்.

பல பேரின் உயிர் குடித்த போர்வாள், சரியான பராமரிப்பு இல்லையென்றாலும் கூர் மங்காமலேயே இருக்கிறது.

இப்போர்வாளினை ஒத்த வார்த்தெடுக்கப்பட்ட போர்வாளினை கீழுர் பாளையக்காரர்களின் உறவு முறை ஜமீங்களான அரியலூர், வட கால் போன்ற ஜமீங்களிலும் காணலாம்.

6 கருத்துகள்:

  1. அருமையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. அருமையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்!
    இந்த குடும்பத்தை சேர்ந்த யாரேனும் இன்றும் உங்கள் ஊரில் உள்ளார்களா.அவர்களை தொடர்புகொள்ள முடியுமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி.

      நிறைய பேர் இருக்கிறார்கள். உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அல்லது கைப்பேசி எண்ணை தாருங்கள்.

      நீக்கு