செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மரக்காணம் கலவரம் : நீங்களா நடுநிலைவாதிகள்..!! இல்லை, நடுநிலைவியாதிகள்..


எப்பா..!!! முடியலடா சாமி..!!! சம்பவம் நடந்து 4 நாளு முடிஞ்சிடிச்சு.. இந்த நடுநிலைவாதிகளை நினைக்கும்போது ஆத்திரமா வருது..!!? நீங்களாம் என்ன மனுசங்க..!!? தாழ்த்தப்பட்டவர்களுக்காக மட்டுமே குரல்கொடுப்பதுதான் நடுநிலைவாதமா..!!? எனக்கு தெரியலிங்க..

கலவரத்துல 2 உயிர் கொலைசெய்து பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் ஒரு நடுநிலைவாதிகூட மருந்துக்குகூட ஒரு சின்ன அனுதாபம்கூட தெரிவிக்கல.. ஆனால், பதிலுக்கு மருத்துவர் இராமதாசையும், குருவையும் திட்டி இவங்கதான் கலவரம் செய்ய சொன்னதாகவும் கலவரத்தை இவங்கதான் நடத்தினதாகவும் சொல்லி பயங்கரமா ஆக்ரோஷமா எழுதரீங்க..

சரிங்க, மருத்துவர் இராமதாசு சொல்லிதான் கலவரம் நடந்துச்சுனே வச்சிக்குவோம். ரெண்டு உயிர் போச்சே அவங்கள வன்னிய சாதிக்காரனேவா அடிச்சிகொன்னுட்டான்..!!? இந்த கொலைகளுக்கு ஒரு சின்ன எதிர்ப்பு தெரிவிக்க முடிஞ்சுதா உங்களால..!!? அப்புறம் என்னயா நீங்களாம் நடுநிலைவாதிகள். நீங்களாம் நடுநிலைவாதிகள் இல்ல நடுநிலைவியாதிகள்.

ஒருவேளை இந்த கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிச்சா உங்களுக்கு சாதிமுத்திரை குத்தப்படும்னு பயப்படுரீங்களா..!!? அப்படி பயப்படுறீங்கனா, தயவு செஞ்சு உங்கள சீர்திருத்தவாதிகளாகவும், பொதுநலவாதிகளாகவும் காட்டிகொள்ளாதீர்.


இந்த பையனோட முகத்த நல்லா பாருங்கயா.. சின்ன பையங்க.. பாக்கும்போதே மனசு பதபதைக்குது. இவனபோய் கொன்னுடீங்களேடா.. மனசு கேக்கலைங்க ஆத்திரமா வருது.

நடுநிலையாளர்களே இறந்துபோன இருவரின் குடும்பத்திற்க்கும் என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்..!!?

சாதியம் வேண்டாம் என ஒதுங்கியிருப்பவர்களையும், இன்றைய நடுநிலையாளர்களின் மௌனம் சாதியை நோக்கி நகர்த்தவே செய்கிறது. நீங்கள் நடுநிலையாளர்கள் இல்லை நடுநிலை வேடதாரிகள்.

இன்றைக்கு சாதியின் பின்னால் இருக்கும் இளைஞர்களை காரி உமிழ்கிறீர்களே, அவர்கள் உங்களால் சாதியை நோக்கி உந்தப்பட்டவர்கள் என்பது உங்களுக்கு தெரியலயா..!!?. உங்களின் ஒருபக்க நடுநிலையால் தங்களுக்கும் தங்களின் எதிர்காலத்திற்க்கும் பாதுகாப்பு இல்லை என்பதால் சாதியை நோக்கி நகர்ந்தவர்கள்.

சாதியம் வலுப்பெறுவதற்க்கு காரணம் ஒரு பக்கசார்பு நடுநிலையாளர்களே தவிற, சாதிய தலைவர்கள் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமாவளவனின் பெயரை கேட்டாலே அருவருப்பாக இருக்கும் எனக்கு. ஆனால், நாட்கள் நகர, நகர திருமாவளவனின் எழுச்சியும் அதனால் தமிழகத்தில் ஏற்ப்பட்ட புரட்சியையும் படித்து தெரிந்து திருமாவளவனின் மீது பெரும் நன்மதிப்பு இருந்தது எனக்கு. எனக்கு பிடித்த அரசியல் தலைவர்களில் திருமாவளவனும் ஒருவராக இருந்தார். ஆனால் இன்று.. எதையும் சொல்லுவதற்க்கில்லை.

இந்த நடுநிலையாளர்கள்கிட்ட எனக்கு ஒரு கேள்வி, மருத்துவர் இராமதாசு எதாவது செஞ்சா மட்டும் ஏன் உங்களுக்கு தப்பா தெரியுது..? என் நண்பர் ஒருவர் எங்கிட்ட ஒரு கேள்வி கேட்டார், “ஏங்க இராமதாசு எதாவது செஞ்சா மட்டும் எல்லாரும் இப்படி திட்றாங்க”-னு. எனக்கு என்ன சொல்றதுனு தெரியல. ஏன்னா, எங்கிட்டயும் அந்த கேள்வி இருக்கு பதில் இல்லாம...

12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு நன்றி..
   இவர்களை உண்மையானவர்கள் என நம்பியதற்க்கான உண்மையிலேயே என்னை வருத்தப்பட வைத்துவிட்டார்கள்..

   நீக்கு
 2. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கு நன்றி..

   என்ன சொல்லி என்ன புண்ணியம்.. முற்ப்போக்குவாதி, நடுநிலைவாதினு இங்க யாருமே கிடையாது.. இருக்காங்கனு நெனச்சி ஏமாந்ததுதான் மிச்சம்..

   நீக்கு
 4. கொலை வெறி கும்பலுக்கு துனைபோகும் கூட்டுக்கொலையாளிகள்தான் இந்த நடுனிலை வேடதாரிகள்.

  பதிலளிநீக்கு
 5. எனக்கு வந்தா தக்காளி சட்னி! உனக்கு வந்தா இரத்தமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க கேக்கறது நகைப்பாக இருக்கிறது.. யாருக்கு வந்தாலும் இரத்தம்தான்.. உங்களது கேள்வியிலிருந்தே நீங்க நடுநிலையாளர் போர்வையில் இருப்பவர் இல்லை என தெரிகிறது..

   எனது கேள்வி மிகவும் சாதாரணமானது. கலவரத்தில் இறந்துபோன இரு உயிர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஒரு சிறு அனுதாபம்கூட தெரிவிக்காத இவர்கள் யாரை காப்பாற்ற முற்ப்போக்குவாதி எனும் போர்வையில் இருக்கிறார்கள்.

   நீக்கு
 6. உங்களது எல்லா கேள்விக்கும் இங்கே பதில் உண்டு..
  http://needjusticeinmarakkanam.blogspot.de/
  http://www.facebook.com/Need.Justice.In.Marakkanam
  http://www.youtube.com/needjusticetamilnadu

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி, முக்கனல்..

   நீக்கு