புதன், 23 மார்ச், 2016

என்ன செய்யலாம் விசிக.!? தேர்தல் களம் - 2016

மக்கள் நல கூட்டணியில் தேமுதிக-வை இணைத்து 124 தொகுதிகளை அக்கட்சிக்கு வழங்கியதன் மூலம் மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை மீதமுள்ள 110 தொகுதிகளை மட்டுமே பங்கிட்டுக்கொள்ளமுடியும்.

இத்தகைய நிலையில் அதிகபட்சமாக விசிக-விற்கு 27 லிருந்து 29 தொகுதிகள் வரைமட்டுமே கிடைக்க சாத்தியமிருக்கிறது.! அதிலும் 29 என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.! சரி குறைந்தபட்சம் சில தொகுதிகளாவது வெல்ல முடியுமா என்றால், அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.!

இந்நிலையில் நான் விசிக-வின் தலைமைப் பொறுப்பில் இருந்தால், எனது முடிவு தி.மு.க-விடம் கூட்டணி வைப்பதாகதான் இருக்கும். இந்நேரம் நான் தி.மு.க-விடம் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பேன்.

தேமுதிக கூட்டணியில் இருந்து 27 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோற்ப்பதற்க்கு, திமுக-விற்கு நெருக்கடி கொடுத்து 30 தொகுதிகளை பெற்று சில தொகுதிகளில் வெற்றி பெற முயற்சிக்கலாம்.! தற்சமயம் தி.மு.க இருக்கும் நிலையில் 30 தொகுதிகளை விசிக எளிதில் பெற்றுவிடலாம்.

பா.ம.க-வுடன் கூட்டணி வைக்கலாமே! என்றால், அது பொருந்தா கூட்டணியாகத்தான் அமையும். பா.ம.க-வினர் எப்படி பார்த்தாலும் விசிக-விற்க்கு வாக்களிக்க மாட்டார்கள். (தனிப்பட்ட முறையில் எனக்கும் அதில் விருப்பமில்லை.!)

சரி.,

சீமானோடு கூட்டணி பேசலாம் என்றால், அவர் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். அதுமட்டுமல்லாது சீமானோடு இணைந்து போட்டியிடுவதற்கு அவர்கள் தேமுதிக கூட்டணியிலேயே போட்டியிடலாம்.! கள நிலவரம் அப்படி.!

அடுத்து, திமுக தமிழின துரோகி என்றால், அதே அளவு துரோகமும், நய வஞ்சகமும் கொண்டவர்களில் சளைத்தவரில்லை இந்த வைக்கோவும் கம்யூனிஸ்ட்டுகளும்.! கருணாநிதி எந்த அளவிற்கு நஞ்சோ அதே அளவுதான் வைகோவும்.!

கூட்டணி மாறுவதை குறித்து தவறாக பேசுவார்கள் எனவும் எண்ண முடியாது.! இந்த அளவுகோலெல்லாம் பா.ம.க-விற்க்கு மட்டும்தான். இல்லையென்றால், இந்நேரம் தே.மு.தி.க ஊடக விமர்சனத்தால் கிழித்தெறியப்பட்டிருக்கும்.

அரசியலில் அதிகாரமும் செல்வாக்கும் மிக முக்கியமானது அதை எப்படியேனும் அடைந்துவிட வேண்டும்., என்றால்தான் நம் பேச்சு எடுபடும்.

என் கணிப்பின்படி வி.சி.க இன்றைய நிலையில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதே சிறந்த தேர்வாக இருக்கும்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக