எனதருமைத்
தமிழ்ப் பெருங்குடி மக்களே.!
இதோ
தேர்தல் களம் (மே 16, 2016).!
நம்
கையில் இருக்கும் ஒரே ஆயுதம்
"வாக்கு”.
நம்
உரிமைகளை மீட்டிட,
நம்
வாழ்வாதாரம் காத்திட,
நம்
அரசியலை கைப்பற்றிட நமக்கு
ஒரு அற்புதமான வாய்ப்பு
கிடைத்திருக்கிறது.!
அத்தைகைய
வாய்ப்பை நாம் சரியாக
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அரசியல்
நமக்கு தொடர்பில்லாதது என்று
அலட்சியமாய் இருந்துவிடாதீர்கள்
மக்களே!
நம்
தமிழ் நாடும்,
மக்களும்
நலமும் வளமும் பெற்று இன்புற்று
வாழ நமக்கு கிடைத்திருக்கும்
மிகச்சிறந்த வாய்ப்பு இஃது.
நம்
சுய விருப்பு,
வெறுப்பு,
பொதுப்புத்தியை
சற்று ஓரம் தள்ளி வைத்துவிட்டு
சிந்தியுங்கள் மக்களே.!
50 ஆண்டுகாலமாக
திராவிடத்திடம் அறிந்தும்
அறியாமலும் அடிமைப்பட்டு
கிடந்த/கிடக்கும்
நாம்,
எதை
தின்றால் பித்தம் தெளியும்
என்றே இருக்கிறோம்.
வீண்
காழ்ப்புகொண்டு நமக்கான
வாய்ப்பை நாமே தட்டிவிடப்
போகிறோமா.!
அல்லது
கெட்டியாக பிடித்துக்கொள்ளப்
போகிறோமா.!
சிந்தியுங்கள்.!
திராவிடம்
அத்தனை தகிடுதித்தங்களையும்
செய்யும்;
ஏமந்துவிடாதீர்.!
நம்மை
சீரழித்த திராவிடம் மீண்டும்
எழாமல் தடுக்க வேண்டியது
நமது கடமை.
தமிழர்
அரசியலை கைக்கொள்ள நமக்கு
ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தலைமைப்
பண்பு,
ஆளுமைத்
திறன்,
மேலாண்மைத்
திறன்,
தொழில்நுட்ப
அறிவுகொண்ட ஒரு தமிழனை
தேர்ந்தெடுக்க வேண்டியது
நம் தலையாய கடமையாகும்.
இப்போது
நாம் தேர்ந்தெடுக்கப் போகும்
நபர்தான் அடுத்த ஐந்து
ஆண்டுகளுக்கு நம் தலையெழுத்தை
எழுதப்போகிறவர்.
திராவிடனுக்கும்,
ஆத்திரக்காரனுக்கும்,
அவசரக்காரனுக்கும்
வாக்களித்து நம்மை நாமே
படுகுழியில் தள்ளிக்கொள்ள
வேண்டாம் மக்களே.!
சிந்திப்போம்
செயல்படுவோம்.!
திராவிட
வலையிலிருந்து விடுபட,
வேண்டும்
ஒரு மாற்றம்!.
முன்னேற்றம்
காண,
வேண்டும்
ஒரு மாற்றம்!.
திராவிடம்
தவிர்த்த எவருக்கு வேண்டுமானாலும்
வாக்களியுங்கள்.!
நீங்கள்
விரும்பும் நபர் திராவித்துடன்
கூட்டனியில் இருக்கிறாரா.!?
அவர்/
கட்சி
தனக்கான சின்னத்துடன் உங்கள்
தொகுதியில் நின்றால் அவருக்கு
மட்டும் வாக்களியுங்கள்.
திராவிட
சின்னத்தில் மறந்தும்
வாக்களித்து விடாதீர்.
திராவிட
நேசம்,
தமிழின
நாசம்.!
எவருக்கு
வாக்களிக்கலாம்,
நமக்கான
அந்த நல்ல வாய்ப்பு யார்?
என
என்னை கேட்பீர்களேயானால்,
இதோ
எனது பதில்:
ஆக்கமும்,
நல்
அறிவும்,
தெளிவும்
கொண்ட மிகச்சிறந்த தலைமையாம்,
தமிழின
விடியலுக்கான மிகச்சிறந்த
தேர்வாம்,
உலக
அரங்கில் தமிழனை தலை நிமிரச்செய்த
ஆளுமைகளில் ஒருவராம் மருத்துவர்
அன்புமணி இராமதாசு.
படித்தவர்,
பண்பாளர்,
தொழில்நுட்ப
அறிவாளர்,
பொருளாதாரம்
பயின்றவர் திராவிடத்திற்கு
மாற்றாக திராவிடத்தை எதிர்த்து
தமிழகத்தை முன்னேற்றப்
பாதையில் கொண்டுசெல்ல நமக்கு
கிடைத்திருக்கும் மிகச்சிறந்த
வாய்ப்பு மருத்துவர் அன்புமணி
இராமதாசு.
ஒவ்வொரு
பிரச்சினைகளிலும் வெறும்
கோளாறை மட்டும் கூறாமல்
அதற்கான தீர்வுடன் நமக்கான
சிறந்த நல் வாய்ப்பாக தமிழர்
அரசியலுக்கு அன்புமணி
தெரிகிறார்.
வீண்
காழ்ப்பு கொண்டு திராவிடத்திடம்
தமிழை,
தமிழினத்தை
மீண்டும் அடகு வைக்கப்போகிறீர்களா?
அல்லது
தமிழர் அரசியலை மீட்டெடுக்கப்
போகிறீர்களா?
என்பது
உங்கள் கைகளில்...
உறங்கியது
போதும் உடனே விழி தமிழா.!
மயங்கியது
போதும் மதியை உணர் தமிழா.!
Good and true..please spread across all the key magazines, don't spend money.. type this message in all the key political articals & news feedback form..so, people will read..mainly..Dinamalar, Dinamani and Vikatan.
பதிலளிநீக்குமகிழ்ச்சி. தங்கள் வருகைக்கு நன்றி.
நீக்குதனி மரம் தோப்பாகாது.
பதிலளிநீக்குமகிழ்ச்சி. தங்கள் வருகைக்கு நன்றி.
நீக்குமூன்று கேள்விகள்
பதிலளிநீக்குதிராவிடத்தைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என கூறிவிட்டு இறுதியில் அன்புமணி ராமதாசுக்கு வாக்களிக்க கூறுவது ஏன்?
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் PCR சட்டம் ரத்து செய்யப்படுமா?
நாடகக் காதலை தடை செய்ய புது சட்டங்கள் கொண்டுவரப்படுமா?
மகிழ்ச்சி, தங்கள் வருகைக்கு நன்றி.
நீக்கு/*திராவிடத்தைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என கூறிவிட்டு இறுதியில் அன்புமணி ராமதாசுக்கு வாக்களிக்க கூறுவது ஏன்?*/
என்னளவில் சிறப்பானதொரு தலைமையை அடையாளம் காட்டுகிறேன் அவ்வளவுதான்.
/*நீங்கள் ஆட்சிக்கு வந்தால் PCR சட்டம் ரத்து செய்யப்படுமா?*/
இதை நான் சொல்ல முடியாது. PCR சட்டம் இரத்து செய்யப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் நிச்சயமாக சில திருத்தங்களை செய்வார்கள் என நினைக்கிறேன்.
/*நாடகக் காதலை தடை செய்ய புது சட்டங்கள் கொண்டுவரப்படுமா?*/
எனக்கு தெரியாது. ஆனால், நிச்சயமாக ஏதேனும் செய்வார்கள்.
குறிப்பு : நான் பா.ம.க-வின் பிரிதிநிதி கிடையாது. நல்லதொரு தலைமையை ஆதரிக்கும் சாதாரன குடிமகன்.
படித்தவர், பண்பாளர், தொழில்நுட்ப அறிவாளர்..(வெட்ககேடு...).. விஞ்ஞானம் படித்தும் இன்னும் சாதியை பிடித்து தொங்குவது அற்பர்கள் தான். சாதிக்கு எதாவது அடையாளம் உண்டா? எல்லா ரத்தமும் சாதியம் சமம் தானே..முதலில் சாதியை விட்டு வெளியே வந்து விட்டு பிற விசயங்களை பேசுங்கள்.
பதிலளிநீக்குசாதி என்றால் என்ன.?
நீக்குஇதற்கு பதில் சொல்லிவிட்டு பேசுங்கள்.
அவர்கள் சாதி பேசுவதில்லை. நீங்கள்தான் சாதி பேச்சுகிறீர்கள்.!