அட போங்கப்பா இன்னும் எத்தன பேருதான் இந்த மாதிரி சாக போறீங்க... உங்களுக்கு புரியலையா என்ன..!? இந்த அரசாங்கங்கள் எப்போதுமே ஏழைகளின் நடுத்தர வர்க்கத்தின் தேவைகளை எண்ணங்களை போராட்டங்களை புரிந்துகொள்ளாது. அதிலும் தமிழன் என்றால் மத்திய அரசாங்கம் இம்மியளவும் செவி சாய்க்காது.
இவ்வரசாங்கங்கள் நம் கோரிக்கைகளை கேட்பதற்கே நாம் பணக்கார வர்க்கத்தினராக, பெரிய பெரிய தொழிலதிபர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இப்போது நிலவுவதாகவே எனக்கு தோன்றுகிறது.
இராஜபக்சே நிச்சயம் வரத்தான் போகிறான், அவனுக்கு இந்த மத்திய அரசாங்கம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ப்பு அளிக்கத்தான் போகிறது. நம்மால் என்ன செய்ய முடியும். நாம் தமிழன் என்கிற ஒரு போர்வையில் பிரிவுகளின்றி சேரும் வரை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
நாம் பிரிந்து கிடக்கிறோம் நண்பர்களே, நம்மிடம் ஒற்றுமை இல்லை. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், இனத்தின் பெயரால், கட்சிகளின் பெயரால் நாம் பிரிந்து கிடக்கிறோம். நாம் ஒன்றிணைவதற்கு தலைவர்களை எதிர்பார்க்காதீர். அவர்கள் தங்களை முன்னிலைப் படுத்திக்கொள்ள ஒருசில பிரிவுகளை ஏற்ப்படுத்த முயற்ச்சிப்பர்.
இசுலாமிய நண்பர்களே என்னிடம் கோபித்துக்கொள்ள வேண்டாம். இசுலாமியர்களில் பாதிக்கு பாதி பேர் தங்களை தமிழினத்தை சேர்ந்தவர்கள் என்பதை ஏனோ ஏற்க மறுக்கிறார்கள். தாங்கள் தமிழர்கள், தங்களது இனம் தமிழினம், தங்களது மொழி தமிழ் மொழி என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர் என்னிடம் சொன்ன ஒரு விடயம். அவர் தமிழகத்தில் வசிக்கும் இசுலாமியர்களை இரு வகையாக பிரித்து சொன்னார். முதல் வகை. ஈரான் வழி வந்த இசுலாமியர்கள். இவர்களிடம் நாட்டுப்பற்றை விட, இனப் பற்றை விட, மொழிப்பற்றை விட மதப் பற்றுதான் மேலோங்கி இருக்கும். இரண்டாவது வகை, பாகிஸ்தான் வழி இசுலாமியர்கள். இவர்களிடம் இனப்பற்றும் நாட்டுப் பற்றும் மேலோங்கி இருக்கும். என சொன்னார். இது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது.
ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் தலைவர் மேதகு பிரபாகரனை, தன் நாடு, அயல் நாடு என எங்கும் வெடிகுண்டு வைத்து அப்பாவி பொது மக்களை கொன்ற ஒசாமா பின்லேடனோடு ஒப்பிட்ட போதுதான் மனசுக்கு உறுத்தலாக இருந்தது ஈரான் வழி இசுலாமியர்களை எண்ணி.
ஆண்டு 2010 வாக்கில் இணையத்தில் நான் படித்த ஒரு விடயம். இலங்கையில் ஊடகங்கள் ஒரு இசுலாமிய பெரியவரிடம் கேட்ட கேள்வியும் அதற்க்கான பதிலையும் இங்கே பகிர்கிறேன்.
கேள்வி : நீங்கள் ஒரு இசுலாமியரா இருந்துகொண்டு விடுதலை புலிகளை ஆதரிக்கிறீர்களே ஏன்?
பதில் : நான் இசுலாமியன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. என் மதம் இசுலாம்தான். நான் நினைத்தால் நாளை ஒரு கிறிஸ்துவனாகவோ ஒரு இந்துவாகவோ மாறி என் மதத்தை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், நான் தமிழன். என் இனம் தமிழினம். நான் இறந்தாலும் என் இனம் தமிழினம் என்பது மாறாது என்றார்.
எனக்கு மதம் தான் முக்கியம் என்று என்னும் அனைத்து மதத்தினரும் தெரிந்துகொள்ளுங்கள். நம் இனம் தமிழ் என்று. நாம் தமிழர்கள் என்று. என்னைப் பொருத்தமட்டில் தமிழனுக்கு மதம் என்ற ஒன்று கிடையாது. என் மதம்,மொழி, இனம் எல்லாமே தமிழ் தான்.
அதே மாதிரி வேற்று மொழி பேசும் தமிழர்கள்[பார்ப்பனர்கள் தவிர்த்து]. தமிழ்நாட்டிற்கு வந்து தலைமுறைகளை கடந்தாலும் தங்களின் தாய் மொழியை விட்டு கொடுக்காதவர்கள். ஆனாலும் உங்களுக்கான அடையாளம் தமிழ், தமிழர் என்பதுதான். தாய் தமிழகத்தை விட்டு நீங்கள் எங்கு சென்றாலும் தமிழராகத்தான் அடையாளம் காணப்படுவீர்கள். நீங்கள் தமிழராக மாறிவிட்டீர்கள் என்பதை மறக்க வேண்டாம். [அனைவரையும் சொல்வதாக என்ன வேண்டாம்].
தமிழராய் ஒன்றிணைய எண்ணம் வளர்ப்போம்...
குறிப்பு : நான் தவறுகள் செய்திருப்பின் என்னை திருத்த வேண்டுகிறேன்.