திங்கள், 3 செப்டம்பர், 2012

நமக்கு சூடு சொரணை இருக்கா..?

உலகின் முதல் மொழிக்கு சொந்தக்காரன்..
உலகின் முதல் முன்னேறிய நாகரிகத்திற்கு சொந்தக்காரன்..
உலகின் சிறந்த பண்பாட்டிற்கு சொந்தக்காரன்..
உலகத்திலேயே தன்மானத்தைப்பற்றி நான் அறிய அதிகமாக பேசுபவன்...

என, இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்களாகிய நமக்கு உண்மையிலேயே சூடு சொரணை இருக்கா..?

ஒருவேளை, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு மட்டும்தான் சூடு சொரணை இருக்குமோ..!!?

அனேகமா, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் தமிழ்நாட்டில் வாழும் நமக்கு சத்தியமா சூடு சொரணை கிடையாது..!!

கி.பி 2009 ல பக்கத்து நாட்டுல சண்டை நடந்துச்சு... நம்ம நாட்டுல இல்ல... அங்க யாரோ தமிழர்கள்ன்னு ஒரு இனம் இருக்காமே..!!??? அந்த இனத்துல இருக்கறவங்க நெறையா பேர அந்த நாட்டு சிங்கள இன ராணுவம் பச்ச குழந்தைகள்னு கூட பாக்காம சுட்டு கொன்னுச்சாம்.

அதுக்காக அந்த இனத்தை சேர்ந்த வெளிநாட்டுல வாழற மக்கள் பயங்கரமா போராட்டம்லாம் நடத்தினாங்களாம்... அந்த சிங்கள இன தலைவர் எந்த நாட்டுக்குப் போனாலும், அங்க இருக்குற அந்த இன மக்கள் அந்த நாட்டோட நல்லரசிடம் அனுமதி பெற்று பயங்கரமா போராட்டம் நடத்தி, நீதிமன்றத்துல வழக்கெல்லாம் போட்டு அந்த ஆள அந்த நாட்டுக்கெல்லாம் வர விடாம பன்னுனாங்களாம்.

அப்படியே, மீறி அந்த நாட்டுக்கு வந்தாலும், போராட்டத்தை வலுபடுத்தி அந்த ஆளு வந்த காரியத்தை நடத்த விடாம தொரத்தி அனுப்பிடுவாங்களாம்.

அந்தமாதிரிதான் ஒருதடவ, அந்த சிங்கள தலைவரு இங்கிலாந்து நாட்டுல இருக்குற இலண்டன் மாநகருக்கு போனாராம். அங்க என்னடானா பயங்கர போராட்டமாம். அவர் போய் இறங்குன விமான நிலையம் முழுக்க ஒரே போராட்டக்காரர்களாம். என்ன பண்றதுனே தெரியலாம் இங்கிலாந்து காவல்துறையினருக்கு, கடைசியா ஒரு வழியா அந்த விமான நிலையத்தோட பின் வாசல் வழியா யாருக்கும் தெரியாம பயங்கர பாதுகாப்போட கூட்டிட்டு போனாங்களாம். இதுவரைக்கும் அந்த நாட்டுல இப்புடி ஒரு சம்பவம் நடந்ததே இல்லையாம். எந்த தலைவரையும் இப்படி பின் வாசல் வழியா கூட்டிட்டு போனதே இல்லையாம்.

அதே சமயம் அவர் வந்த காரியத்தையும் நடத்த விடாம போராட்டக்காரர்கள் தொரத்தி அனுப்பிட்டாங்களாம்.

நம்ம பக்கத்து நாட்டுல சண்ட நடக்கும்போது சுத்தமாவே நம்ம நாட்டு ஊடகங்கள் கண்டுக்கவே இல்லையாம். ஏன்னா..! நம்ம நாட்டுல ஊரடங்கு உத்தரவு மாதிரி ஏதோ ஒரு சட்டம் போட்டு அங்க நடக்குற சண்டைய இங்க காட்ட கூடாது எழுத கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம். ஆனா ஏதோ ஒரு தொலைகாட்சி மட்டும் நீதிமன்றத்தோட அனுமதி பெற்று அங்க நடக்குற கொடுமைகளை நம்ம நாட்டுல ஒளிபரப்பு பண்ணினாங்களாம். அதையும் நம்ம நாட்டு காவல்துறை மிரட்டி தடை பண்ணிடாங்கனு கேள்விப்பட்டன்.
அதே மாதிரி அந்த தலைவரு திருப்பி அனுப்பப்பட்டத நம்ம ஊருல ஒரு வார பத்திரிகை " போர்க் குற்றவாளிகள் இராஜ மரியாதையுடன் வந்து செல்ல இலண்டன் என்ன தமிழ்நாடா " னு தலைப்பு போட்டு கிண்டலடிச்சாங்களாம்.

இப்படி எந்த நாட்டுக்கும் ஒழுங்கா போக முடியாத அந்த தலைவரு, ஒரு இடத்துக்கு மட்டும் ராஜ மரியாதையோட போயிட்டு வருவாராம். அது எந்த இடம்னா, உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்திய துணைக் கண்டம். இப்ப கூட அந்த தலைவரு அந்த துணைகண்டத்துல இருக்குற ஒரு நாட்டுல பௌத்த கல்வி மையம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்ட வரப்போறாராம். அத நம்ம நாட்டுல யாரோ ரெண்டு பேரு தனித்தனியா கூட்டத்தை கூட்டி எதிர்க்கப் போறதாவும் போராட்டம் நடத்த போறதாவும் கேள்விப்பட்டன். உள்ளூரு அரசியலுக்கு நான் ஒரு ஆள நம்பிகிட்டு இருக்கன். நெறைய திட்டம்லாம் வச்சிருக்காருபா.. அவரு ஏதாவது சொல்லுவாரானு பாக்கறான், ஏதும் சேதி கெடைக்கல. அப்பறம் அந்த இனத்துக்கு தலைவருன்னு நம்ம நாட்டுல ஒருத்தரு சொல்லிக்கிட்டு இருப்பாராமில்ல. அவரு அந்த சிங்கள தலைவரு வர்றதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிராராமா..,  ஆனா போராட்டம்லாம் நடத்த மாட்டாராம்.

இதுல எனக்கு என்னன்னா, நம்ம நாடும் அந்த துணைக்கண்டத்தை சேர்ந்தது-னு  சொல்றாங்கப்பா... நான் கெடையவே கெடையாதுன்னு சொல்லிட்டன். அட அத கூட ஏத்துக்கலாம்பா.. நாமளும் அந்த இனம் தான் அப்டின்னு சொல்றாங்க..
நான் செம கடுப்பாயிட்டான். நீங்களே சொல்லுங்க இத நான் எப்புடி ஒத்துக்கறது. அவங்களாம் போராட்டம் பண்றாங்க, அந்த தலைவர எதிர்க்கறாங்க. அவங்களுக்கு சொந்தமில்லாத நாட்டுக்குள்ளேயே நுழையவிடாம தடுக்கறாங்க.

நாமளும் அவங்களும் ஒரே இனமா இருந்திருந்தா, அந்த தலைவரு இலண்டன் போறதுக்கு கொஞ்ச நாளுக்கு முன்னாடி நம்ம பக்கத்துல இருக்குற ஆந்திரா நாட்டோட திருப்பதி கோவிலுக்கு வந்துட்டு போனமாதிரிலாம் கேள்விப்பட்டன்.
அதுவுமில்லாம அந்த சிங்கள நாட்டு ராணுவத்துக்கு நம்ம நாட்டுல வச்சி பயிற்ச்சிலாம் குடுத்தாங்களாம். இதெல்லாம் நடந்திருக்குமா..!!?

அதனால நான் என்ன சொல்றேன்னா, நாமளும் அவங்களும் ஒரே இனம் கிடையாது. அதுமட்டுமில்லாம அவங்களுக்கு சூடு, சொரணை, மானம், ஈனம், தன்மானம் அப்டின்னு நெறையவே இருக்கு நமெக்கெல்லாம் அது கெடையாது.
நாமளும் அவங்க இனம்னா நமக்கும் சூடு சொரணை இருக்கனுமில்ல..!!?

சரி நான் சொல்றத விடுங்க, நீங்களே சொல்லுங்க... நமக்கு சூடு சொரணை இருக்கா...!!!?????

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அய்யா, தங்களின் வரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. பெரும்பாலான தமிழர்கள் தன் குடும்பம் குட்டிகள் மட்டும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் போதும். மற்றவர்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்றுதான் இருக்கிறார்கள். இருக்கிறோம். பரந்த மனப்பான்மையும் சமூக அக்கறையும் தொலைத்து எவ்வளவோ நாள் ஆயிற்று. போராட்ட குணம் மங்கிப்போனதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது ஒன்று தொலைக்காட்சி. இரண்டாவது பயம். போராட்டம் என்று போனால் ஏதாவது வழக்குகளில் சிக்கி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடுமோ என்ற பயம். தனக்கு என்று வரும்போதுதான் தமிழனுக்கு வீரம் வரும். பக்கத்து குடிசைதானே எரிகிறது... நம்ம மானாட மயிலாட பாக்கலாம்.....

    பதிலளிநீக்கு