பழைய நினைவுகள் :- பள்ளிக்கூடம் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - 1992-1997
ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப் பள்ளி :
ஐந்தாம் வகுப்பு முடிஞ்சிடுச்சு... ஆறாவது சேர்க்கணும். எந்த பள்ளிகூடத்துல சேர்க்கணும்னு ஏற்கனவே வீட்ல முடிவு பண்ணியிருந்தாங்க. ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப்பள்ளி(S.K.V Hr. Sec. School). எங்க சுற்றுவட்டாரதுல தமிழ் வழி கல்விகூடங்களில் சிறந்த பள்ளி இதுதான். தமிழ் வழி என்பதால் அரசு பள்ளி என நினைத்துவிட வேண்டாம். இது தனியார் பள்ளிக்கூடம் ஆனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் மட்டும் அரசாங்கம் வழங்கும். பள்ளிக்கட்டணம் ஆண்டிற்கு ஒருமுறை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது ரூ.240 கட்டியதை போல ஞாபகம். எங்க ஊருலேர்ந்து குறுக்கு வழியாக வந்தா 5 கி.மீட்டர்ல பள்ளிகூடத்துக்கு வந்துடலாம். பேருந்து தடத்தின் வழியா வந்தா 7 கி.மீட்டர்.
ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப்பள்ளியில சேரருதுனா சாதாரண விஷயம் இல்ல.ஏன்னா அப்பவே நீங்க எத்தினாவது வகுப்புல சேருறதா இருந்தாலும் அவங்க ஒரு நுழைவுத் தேர்வு வப்பாங்க அதுல தேர்ச்சி பெறனும்.இடம் கேட்டு வரும் எல்லா பசங்களையும் சேர்த்துக்கொள்ள சொல்லி மனிதசங்கிலி போராட்டம்லாம் நடந்துச்சி.
அடுத்து நுழைவுத்தேர்வு. நுழைவுத்தேர்வில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக உன் பெயர் என்ன?, உன் அப்பா பெயர் என்ன?, உன்னோட ஊரு எது? என ஒரு 20 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. ஒருசில மக்கு பசங்க மாதிரி இல்லாம எனக்கு ரொம்ப நல்லாவே தமிழ் எழுத படிக்க தெரியும். அதனால தமிழில் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்குமே பதில் எழுதிட்டன். ஆனால் ஆங்கிலத்தில கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தட்டு தடுமாறி பதில் எழுதினன்.
எனக்கு ஆங்கில அறிவு அந்த சமயத்தில் ஒன்னும் பெருசா இல்ல. என் பேரு, எங்க அப்பா பேரு, எங்க அம்மா பேரு, எங்க ஊரு பேருலாம்,"My Name is..., My Father Name is..., My Mother Name is..., My Native is..." னு போட்டு எழுதுவன் அவ்ளோதான். "One, Two, Three" மூணு வரைக்கும் பாக்காம எழுதுவன், பத்து வரைக்கும் சொல்லுவன். "A,B,C,D..." முழுசா தெரியும். எனக்கு தெரிஞ்ச ஆங்கிலம் அவ்ளோதான்.
நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: அந்த பள்ளிகூடத்துல எங்க சொந்தகாரர் ஒருத்தர் ஆசிரியரா பணியாற்றிக்கிட்டிருந்தாரு. அவரு கிட்ட எங்க அப்பா என்னோட தேர்ச்சிக்காக சிபாரிசு செய்ய சொல்லி கேட்டிருந்தார். அவர் தான் தேர்வு முடிவ எங்ககிட்ட சொன்னார். பையன் ஏற்கனவே முதல் வகுப்புல தேர்ச்சி பெற்றுவிட்டான் அவனுக்கெல்லாம் சிபாரிசு தேவை இல்லைங்க என்று எங்க அப்பாகிட்ட அவரு சொன்னாரு.
நுழைவுத்தேர்வின் தேர்ச்சியை தொடர்ந்து, ச.கு.வேலாயுதனார் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன்.
இனி...
ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவு :(VI-D)
ஆறாம் வகுப்பு 'ஈ' பிரிவில் எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களின் பட்டியல் பாட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு [VI-D](1997-1998) | ||||||||||||||||||||||||||
பள்ளிக்கூடம் : | ச.கு.வேலாயுதனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி. | |||||||||||||||||||||||||
வ.எண் | பாடம் | ஆசிரியர் | ||||||||||||||||||||||||
|
|
|
||||||||||||||||||||||||
* : வகுப்பாசிரியர், ---?--- : பெயர் நினைவில் இல்லை. |
ஆறாம் வகுப்பின் முதல் நாள், எங்களை வேதியியல் ஆய்வக கட்டிடத்தின் மாடியில் உள்ள ஒரு வகுப்பில் உக்கார வச்சு, இனிமே இதுதான் உங்களுக்கான வகுப்புனு சொன்னாங்க. ஒரு ஒரு மாசம் அங்க இருந்திருப்போம்.. ஒரு மாசம் கூட இருக்காது. அதுக்கு அப்புறம், வேதியியல் ஆய்வகத்தோட முன்னாடி இருக்கிற வேப்பமரமும், ஆய்வகத்திற்கு பின்னாடி இருக்குற தறி வகுப்போட முன்னாடி இருக்கிற வேப்பமரமும்தான் ஆறாவது 'ஈ' பிரிவு வகுப்பா இருந்துச்சி.
இங்க தான் வருகைப் பதிவு அழைப்பின் போது "வணக்கம் அண்ணா" என்று சொல்லிகொண்டிருந்த எனக்கு " Present Sir " என சொல்ல வேண்டும் என கற்றுக்கொடுத்தார்கள்.
மறக்க முடியாத சம்பவங்கள் :
சம்பவம் 1:
ஒரு நாள் எங்கள் வகுப்பாசிரியர் ஆங்கில பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ஒரு குறிப்பிட்ட வரியை படிக்கும்போது, அவ்வரியை அடிக்கோடிட சொன்னார். அதாவது, "நான் இப்ப படிக்கிற வரியை Underline பண்ணுங்க" அப்டின்னு சொன்னார். எனக்கு என்ன சொல்றாருன்னு ஒன்னும் புரியல. அப்பலாம் நம்ம ஆங்கில அறிவுதான் அதிபயங்கரமாச்சே..! பேந்த பேந்த அவர் மூஞ்சியையே பார்த்தன். அடுத்த சில வினாடிகளில் என் முதுகுல மர அளவுகோலால் "சளார்"னு ஒரு அடி. "Underline பண்ண சொன்னா என்னடா பண்ணிகிட்டிருக்க"னு திட்டு வேற. அவசர அவசரமா பக்கத்துல இருந்தவன பார்த்தன். அவன் "U" வை கவுத்திபோட்ட மாதிரி தொடர்ச்சியா ஒரு வரியோட அடியில கோடு போட்டான். ஓ...! "Underline" னா இப்டி அடியில வளைச்சி வளைச்சி கோடு போடறதுபோல அப்டின்னு நெனச்சன். ஆனால் அந்த வகுப்புலேயே "Underline" னா அடிக்கோடிடுதல் அப்டின்னு தெரிஞ்சுகிட்டன்.
சம்பவம் 2:
இது அறிவியல் பாட வேளை, எங்களை அமைதியாக படிக்கும்படி உத்தரவிட்டிருந்தார் அறிவியல் ஆசிரியர் C.முருகவேல். நாமலாம் என்னைக்கி வகுப்புல படிச்சிருக்கோம். என் பக்கத்துல கதிரவன்-னு ஒரு பையன் உக்காந்திருந்தான். நானும் அவனும் பேசிக்கிட்டிருந்தோம். ஒரு சமயத்துல எத பத்தி பேசிக்கிட்டிருந்தோம்னு தெரியல பேச்சு வாக்குல 1.மோளம் அடிச்சுக்கிட்டு வருவாங்க. 2. பொங்கல், தீபாவளி சமயத்துல காசு கேப்பாங்க. அப்டின்னு ஒரு ரெண்டு விடயத்த சொல்லிட்டன். அந்த பய புள்ள இந்த விடயத்த வாத்தியார் கிட்ட என்னனு சொல்லுச்சி எப்புடி சொல்லிச்சுன்னு தெரியல. அடுத்த ஒரு ரெண்டு நிமிடத்துல என்ன கூப்பிட்டு வச்சி ஒரு அஞ்சு நிமிடம், இந்த அஞ்சு நிமிடத்தில் மூணு நிமிடம் அடினா ரெண்டு நிமிடம் உதை. அஞ்சு நிமிடத்துல எவ்வளவு அடி அடிக்க முடியுமோ அவ்வளவு அடி அடிச்சிட்டாரு. ரெண்டாவது முறையா பயங்கரமாக அடி வாங்குரன். அன்னிலேர்ந்து நான் அந்த பையன்கிட்ட பேசறதே விட்டுடன்.
[1999 ம் ஆண்டு நான் ]
1999 லையே இப்டி இருக்கறனா..! 1997 ல எப்டி இருந்திருப்பன். ஒரு பாவமும் அறியாத கள்ளங்கபடமற்ற இந்த பிஞ்சு முகத்த பாத்தாதுக்கப்பறமும் அடிச்சாரு. இருந்தாலும் எனக்கு அவரு மேல கோவம் இல்ல. நான் ஏதோ தப்பு பண்ணிட்டதா ஒரு உணர்வு. என் கோவம் அந்த பையன் மேல தான். என்ன இப்படி போட்டுகுடுத்து அடி வாங்கி குடுத்துட்டானேனு.
இதுதவிர வரைபட கையேடு (Graph Note) எடுத்து வராம தறி ஆசிரியரிடம் அடி வாங்கியது, ஓவிய கையேடு (Drawing Note) கொண்டு வராம ஓவிய ஆசிரியரிடம் அடி வாங்கியது என நெறைய இருக்கு. ஆனால் மேற்சொன்ன ரெண்டு சம்பவங்கள்தான் என்னை வெகுவாக பாதித்தது.