புதன், 23 மார்ச், 2016

என்ன செய்யலாம் விசிக.!? தேர்தல் களம் - 2016

மக்கள் நல கூட்டணியில் தேமுதிக-வை இணைத்து 124 தொகுதிகளை அக்கட்சிக்கு வழங்கியதன் மூலம் மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை மீதமுள்ள 110 தொகுதிகளை மட்டுமே பங்கிட்டுக்கொள்ளமுடியும்.

இத்தகைய நிலையில் அதிகபட்சமாக விசிக-விற்கு 27 லிருந்து 29 தொகுதிகள் வரைமட்டுமே கிடைக்க சாத்தியமிருக்கிறது.! அதிலும் 29 என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.! சரி குறைந்தபட்சம் சில தொகுதிகளாவது வெல்ல முடியுமா என்றால், அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.!

இந்நிலையில் நான் விசிக-வின் தலைமைப் பொறுப்பில் இருந்தால், எனது முடிவு தி.மு.க-விடம் கூட்டணி வைப்பதாகதான் இருக்கும். இந்நேரம் நான் தி.மு.க-விடம் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பேன்.

தேமுதிக கூட்டணியில் இருந்து 27 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோற்ப்பதற்க்கு, திமுக-விற்கு நெருக்கடி கொடுத்து 30 தொகுதிகளை பெற்று சில தொகுதிகளில் வெற்றி பெற முயற்சிக்கலாம்.! தற்சமயம் தி.மு.க இருக்கும் நிலையில் 30 தொகுதிகளை விசிக எளிதில் பெற்றுவிடலாம்.

பா.ம.க-வுடன் கூட்டணி வைக்கலாமே! என்றால், அது பொருந்தா கூட்டணியாகத்தான் அமையும். பா.ம.க-வினர் எப்படி பார்த்தாலும் விசிக-விற்க்கு வாக்களிக்க மாட்டார்கள். (தனிப்பட்ட முறையில் எனக்கும் அதில் விருப்பமில்லை.!)

சரி.,

சீமானோடு கூட்டணி பேசலாம் என்றால், அவர் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். அதுமட்டுமல்லாது சீமானோடு இணைந்து போட்டியிடுவதற்கு அவர்கள் தேமுதிக கூட்டணியிலேயே போட்டியிடலாம்.! கள நிலவரம் அப்படி.!

அடுத்து, திமுக தமிழின துரோகி என்றால், அதே அளவு துரோகமும், நய வஞ்சகமும் கொண்டவர்களில் சளைத்தவரில்லை இந்த வைக்கோவும் கம்யூனிஸ்ட்டுகளும்.! கருணாநிதி எந்த அளவிற்கு நஞ்சோ அதே அளவுதான் வைகோவும்.!

கூட்டணி மாறுவதை குறித்து தவறாக பேசுவார்கள் எனவும் எண்ண முடியாது.! இந்த அளவுகோலெல்லாம் பா.ம.க-விற்க்கு மட்டும்தான். இல்லையென்றால், இந்நேரம் தே.மு.தி.க ஊடக விமர்சனத்தால் கிழித்தெறியப்பட்டிருக்கும்.

அரசியலில் அதிகாரமும் செல்வாக்கும் மிக முக்கியமானது அதை எப்படியேனும் அடைந்துவிட வேண்டும்., என்றால்தான் நம் பேச்சு எடுபடும்.

என் கணிப்பின்படி வி.சி.க இன்றைய நிலையில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதே சிறந்த தேர்வாக இருக்கும்.!

வெள்ளி, 4 மார்ச், 2016

யாருக்கு வாக்களிக்க வேண்டும்.?

எனதருமைத் தமிழ்ப் பெருங்குடி மக்களே.!

இதோ தேர்தல் களம் (மே 16, 2016).! நம் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் "வாக்கு”

நம் உரிமைகளை மீட்டிட, நம் வாழ்வாதாரம் காத்திட, நம் அரசியலை கைப்பற்றிட நமக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.! அத்தைகைய வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசியல் நமக்கு தொடர்பில்லாதது என்று அலட்சியமாய் இருந்துவிடாதீர்கள் மக்களே

நம் தமிழ் நாடும், மக்களும் நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ நமக்கு கிடைத்திருக்கும் மிகச்சிறந்த வாய்ப்பு இஃது. நம் சுய விருப்பு, வெறுப்பு, பொதுப்புத்தியை சற்று ஓரம் தள்ளி வைத்துவிட்டு சிந்தியுங்கள் மக்களே.! 50 ஆண்டுகாலமாக திராவிடத்திடம் அறிந்தும் அறியாமலும் அடிமைப்பட்டு கிடந்த/கிடக்கும் நாம், எதை தின்றால் பித்தம் தெளியும் என்றே இருக்கிறோம்.

வீண் காழ்ப்புகொண்டு நமக்கான வாய்ப்பை நாமே தட்டிவிடப் போகிறோமா.! அல்லது கெட்டியாக பிடித்துக்கொள்ளப் போகிறோமா.! சிந்தியுங்கள்.! திராவிடம் அத்தனை தகிடுதித்தங்களையும் செய்யும்; ஏமந்துவிடாதீர்.!

நம்மை சீரழித்த திராவிடம் மீண்டும் எழாமல் தடுக்க வேண்டியது நமது கடமை. தமிழர் அரசியலை கைக்கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தலைமைப் பண்பு, ஆளுமைத் திறன், மேலாண்மைத் திறன், தொழில்நுட்ப அறிவுகொண்ட ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க வேண்டியது நம் தலையாய கடமையாகும்.

இப்போது நாம் தேர்ந்தெடுக்கப் போகும் நபர்தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம் தலையெழுத்தை எழுதப்போகிறவர். திராவிடனுக்கும், ஆத்திரக்காரனுக்கும், அவசரக்காரனுக்கும் வாக்களித்து நம்மை நாமே படுகுழியில் தள்ளிக்கொள்ள வேண்டாம் மக்களே.! சிந்திப்போம் செயல்படுவோம்.!

திராவிட வலையிலிருந்து விடுபட, வேண்டும் ஒரு மாற்றம்!. முன்னேற்றம் காண, வேண்டும் ஒரு மாற்றம்!.

திராவிடம் தவிர்த்த எவருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள்.! நீங்கள் விரும்பும் நபர் திராவித்துடன் கூட்டனியில் இருக்கிறாரா.!? அவர்/ கட்சி தனக்கான சின்னத்துடன் உங்கள் தொகுதியில் நின்றால் அவருக்கு மட்டும் வாக்களியுங்கள். திராவிட சின்னத்தில் மறந்தும் வாக்களித்து விடாதீர்.
திராவிட நேசம், தமிழின நாசம்.!

எவருக்கு வாக்களிக்கலாம், நமக்கான அந்த நல்ல வாய்ப்பு யார்? என என்னை கேட்பீர்களேயானால், இதோ எனது பதில்:
ஆக்கமும், நல் அறிவும், தெளிவும் கொண்ட மிகச்சிறந்த தலைமையாம், தமிழின விடியலுக்கான மிகச்சிறந்த தேர்வாம், உலக அரங்கில் தமிழனை தலை நிமிரச்செய்த ஆளுமைகளில் ஒருவராம் மருத்துவர் அன்புமணி இராமதாசு.

படித்தவர், பண்பாளர், தொழில்நுட்ப அறிவாளர், பொருளாதாரம் பயின்றவர் திராவிடத்திற்கு மாற்றாக திராவிடத்தை எதிர்த்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல நமக்கு கிடைத்திருக்கும் மிகச்சிறந்த வாய்ப்பு மருத்துவர் அன்புமணி இராமதாசு.

ஒவ்வொரு பிரச்சினைகளிலும் வெறும் கோளாறை மட்டும் கூறாமல் அதற்கான தீர்வுடன் நமக்கான சிறந்த நல் வாய்ப்பாக தமிழர் அரசியலுக்கு அன்புமணி தெரிகிறார்.

வீண் காழ்ப்பு கொண்டு திராவிடத்திடம் தமிழை, தமிழினத்தை மீண்டும் அடகு வைக்கப்போகிறீர்களா? அல்லது தமிழர் அரசியலை மீட்டெடுக்கப் போகிறீர்களா? என்பது உங்கள் கைகளில்...

உறங்கியது போதும் உடனே விழி தமிழா.!


மயங்கியது போதும் மதியை உணர் தமிழா.!