வியாழன், 22 ஆகஸ்ட், 2013

இணையத்தில் ஏன் எழுத வேண்டும்..!!?

ஏதேச்சையாகதான் கவனித்தேன் இது என்னுடைய 50வது பதிவு என்று. கடந்த மூன்று ஆண்டு காலத்தில் என்னால் எழுத முடிந்தது இந்த 50 பதிவுகள் மட்டுமே. எப்படியோ, எனது பதிவுகளை படித்து எனக்கும், என் எழுத்துக்களுக்கும் மதிப்பளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்களிடமிருந்து தொடர்ச்சியான ஆதரவையும் விரும்புகிறேன்.

இணையத்தில் ஏன் எழுத வேண்டும்..!!?

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்தோடு/நோக்கத்தோடு இங்கே வலைப்பதிவில் எழுத ஆரம்பித்திருப்போம். சிலர் பொழுதுபோக்காகவும், சிலர் கொள்கைக்காகவும் என பல காரணிகளுக்காக எழுத தொடங்கியிருப்போம். சிலருக்கு காலப்போக்கில் எழுதுவது அலுத்து எழுதுவதை நிறுத்தியிமிருக்கலாம்.

ஆனால், இங்க நமக்கு தேவையானது இது எதுவுமே இல்லை. நமக்கு தேவையானது ஒன்னே ஒன்னுதான். அது எழுதனும்ங்கறதுதான். என்ன எழுதனும்னெல்லாம் யோசிக்கவே தேவை இல்லீங்க. எதுவானாலும் எழுதுங்க.

இங்கே(தமிழில்) பல சேதிகள் ஆவனப்படுத்தப்படாமல் கிடக்கின்றன. இணையத்துல ஏதாவது ஒரு ஆங்கில சொல்லை ‘Google’ தேடல் பொறியில் தேடிப்பாருங்க. அவ்வார்த்தைக்கு தொடர்புடைய, அவ்வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும் பக்கம் என பல இணைப்புகளை தரும். அதே சமயம் தமிழில் நான் சில வார்த்தைகளை தருகிறேன் அவற்றையும் தேடிப்பாருங்க. எந்த அளவிற்க்கு தொடர்புடைய இணைப்புகள் கிடைக்கும்னு பாருங்க. பல தமிழ் வார்த்தைகளுக்கு விளக்கங்கள் இணையத்தில் இருப்பதில்லை.

உதாரணமாக : பொறுச்சி மரம், பூன காசல் செடி, காசாம் மரம், கொஞ்சி செடி, காட்டு கனகாமரம் பூ...

இப்படியாக பல சேதிகள் ஆவனப்படுத்தப்படாமல் நம்மிடமிருந்து மறைந்துகொண்டிருக்கின்றன. பொதுத்தமிழ் வார்த்தைகளைதான் ஆவணப்படுத்த வேண்டும் என்ற அவசியல் இல்லை. வட்டார வார்த்தைகளையே பயன்படுத்துங்கள். இவை மட்டுமா..!!? நம்மையும் நம் ஊரினை சுற்றியும் பல தகவல்கள், வரலாற்று நிகழ்வுகள் கண்டுகொள்ளப்படாமல் உதாசினப்படுத்தப்பட்டு வெளிவராமல் கிடக்கின்றன.

ஆவணப்படுத்துவோம் அத்தனையும். நாம் சாதாரணமாக நினைக்கும் பல தகவல்கள் பலரால் ஆச்சரியமாக அதிசயமாக பார்க்கப்படுபவை. நம்மிடையே இருக்கும் அனைத்து தகவல்களையும் ஆவணப்படுத்துவோம். நம் மொழிக்கு வலு சேர்ப்போம்.

இங்க இன்னொரு சேதியும் இருக்கு. இணையத்தில் தமிழில் இருக்கும் கட்டுரைகளின் எண்ணிக்கை சில பத்து ஆயிரங்களாக மட்டுமே இருக்கிறது. உலகின் மிகவும் தொன்மையான மூத்த மொழியான நம் மொழி எதிர்கால இணைய உலகத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போட்டியிடவேண்டியது அவசியமாகிறது.


எங்கோ ஒரு தேசத்தில் பிறந்து இங்கே உயிர் வாழும் இந்தியில் கூட, லட்சம் கட்டுரைகளுக்கு மேல் இணையத்தில் இருக்கிறது. ஆனால் நம் தமிழ் மொழியில்..!!?? ஆகவே ஆவணப்படுத்துவோம் அனைத்தையும் இனிய தமிழில் எளிமையாக.

9 கருத்துகள்:

  1. வாழ்த்துகள்
    //ஆகவே ஆவணப்படுத்துவோம் அனைத்தையும் இனிய தமிழில் எளிமையாக.//
    நல்ல நோக்கம்.

    பதிலளிநீக்கு
  2. தாம் அறிந்த தகவல்களை விக்கிபீடியாவில்கூட[தமிழ்] சம்பந்தப்பட்ட பிரிவுகளில் சேர்க்கலாம். வாரத்தில் ஓரிரு மணி நேரங்கள்[அதற்கும் குறைவாகக்கூட] ஒதுக்கினால் போதும்.

    தமிழை வளர்ப்பதில் நம்மாலான பங்கைச் செலுத்தலாம்.

    இப்பதிவு தங்களின் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்துகிறது.

    மகிழ்ச்சி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. தாம் அறிந்த தகவல்களை விக்கிபீடியாவில்கூட[தமிழ்] சம்பந்தப்பட்ட பிரிவுகளில் சேர்க்கலாம். வாரத்தில் ஓரிரு மணி நேரங்கள்[அதற்கும் குறைவாகக்கூட] ஒதுக்கினால் போதும்.

    தமிழை வளர்ப்பதில் நம்மாலான பங்கைச் செலுத்தலாம்.

    இப்பதிவு தங்களின் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்துகிறது.

    மகிழ்ச்சி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு