புதன், 20 நவம்பர், 2013

பெயர் தெரியா மரமும் புதையலும் -- தீபம் - மோலாண்டிக்குப்பம்(அழகப்ப சமுத்திரம்)


வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கார்த்திகை தீபத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதலாமென்றிருந்தேன், கால சூழல் எழுத முடியாமல் போயிற்று. இருப்பினும் இந்த தீபத் திருநாளையொட்டி நடந்த ஒரு வரலாற்று நிகழ்வை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன். இந்தப் பதிவை அதிக தகவல்களுடன் எழுதலாமென நினைத்திருந்தேன் அதுவும் முடியாமல் போயிற்று.

சரி, இனி பதிவிற்க்கு போகலாம்.

திருவண்ணாமலை தீபம் – மோலாண்டிகுப்பம் (அழகப்ப சமுத்திரம்)

மோலாண்டிக்குப்பம் எனும் அழகப்ப சமுத்திரம் எங்கள் ஊருக்கு(கீழூர்) அருகிலுள்ள மற்றொரு கிராமம். பல ஆண்டுகளுக்கு முன்பு அவ்வூரிலிருந்த ஒரு குடும்பத்தார் அண்ணாமலையார் தீபம் காண திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர். அவ்வீட்டில் கர்ப்பிணி ஒருவர் இருந்தார். அவரை அழைத்து செல்ல முடியாது என்பதால் அவரை வீட்டிலிலேயே விட்டுவிட்டு புறப்பட தயாராயினர். ஆனால் அவருக்கோ தீபம் காண அளவில்லாத ஆசை.

வீட்டார் அனைவரும் தீபம் காண திருவண்ணாமலைக்கு புறப்பட்டுவிட்டனர். வீட்டிலிருந்த அப்பெண்மணிக்கு ஒரு யோசனை வந்தது எப்படியாவது தான் தீபத்தை கண்டேயாவது என முடிவெடுத்தார். அதற்காக ஒரு குன்றினை ஏற்படுத்தி அதன் மீது நின்று தீபத்தை காண்பதென முடிவெடுத்து அதன்படி ஆட்களை அமர்த்தி குன்றினை அமைக்கலானார்.

தீபமேற்றும் நாளுக்கு முன்னதாக குன்று அமைக்கப்பட வேண்டுமென்று வேலை படு வேகமாக நடந்தது. நினைத்தபடியே வேலையும் முடிந்தது. அக்குன்றின் மீது ஏறி நின்று அவர் தீபத்தை கண்டு களித்து அண்ணாமலையாரின் அருள் பெற்றார்.

குன்று அமைப்பதற்க்காக வெட்டப்பட்ட இடம் இன்று ஒரு குளமாக காட்சியளிக்கிறது. நான் அவ்வூருக்கு செல்லமுடியாத காரணத்தால் மேலதிக தகவல்களை பெற முடியவில்லை என்பது சற்று வருத்தமாகவே இருக்கிறது.

பெயர் தெரியா மரமும் 7 உரிகளும் :

அதே ஊரில் இருப்பதுதான் இந்த பெயர் தெரியா மரம். இம்மரத்தின் அடிவாரத்தில் ஒரு சிறு கோவில் உள்ளது. எங்க பெரிய ஆயா(எங்க ஆயாவிற்க்கு அக்கா) எப்பவுமே அந்த கோயிலிலேயேதான் இருப்பாங்களாம். மிகவும் தைரியசாலி. எந்நேரமானாலும் எங்க ஊருக்கு முந்திரி காடுகளின் வழியே நடந்தே வந்துவிடுவார். ஒரு முறைகூட இவரை “முனி” சுத்தலில் விட்டதில்லை. சுருக்கு பையில் எப்போதும் விபூதி இருக்கும். சிறந்த இறை நேசர். எனக்கு அவங்கள ரொம்ப புடிக்கும். அவர் இறந்த்தை கூட அவர்கள் அண்ணன் தம்பி சண்டையால் எங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிட்டனர். அவர் எனக்கு சொன்னதுதான் இந்த பெயர் தெரியா மரத்தின் கதை.

அது ஒரு பெரிய மரம். அம்மரத்தின் காய்கள் முருங்கைக்காயை போல இருக்குமாம். எத்தனையோ வெளி நாட்டு அறிஞர்களெல்லாம் வந்து பார்த்தும் அம்மரத்தின் பெயரை சொல்ல முடியவில்லையாம்.

அம்மரத்தில் ஏழு உரிகள் இருக்கிறதாம் அம்மரத்தின் பெயரை சொன்னவுடன் அவைகள் கண்களுக்கு புலனாகுமாம். எவர் ஒருவர் அம்மரத்தின் பெயரை சரியாக கூறுகின்றாரோ அவருக்கே அம்மரத்தில் இருக்கும் புதையல்(உரிகள்) சொந்தமாகும் என்பதுதான் அங்கு நிலவி வரும் கூற்று. இதுவரை எவரும் அம்மரத்தின் பெயரை சொன்னதாக எனக்கு எந்த தகவலும் இல்லை.

குறிப்பு : இப்பதிவில் இடம்பெற்றிருக்கும் தகவல்களைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருந்தால் அல்லது நான் ஏதேனும் தவறான தகவலை தெரிவித்திருந்தால் அன்புகூர்ந்து தெரியபடுத்தவும்.


14 கருத்துகள்:

  1. வியப்பான தகவல்...

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வியப்பான சுவையான தகவல்கள். ஊர்களில் இத்தகைய கதைகள் பல புழங்குவது இயல்பு. பெயர் தெரியா அம் மரத்தை காண அவா!!! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி.

      சரியான ஓய்வு கிடைக்காததால் அவ்வூர் பக்கம் செல்ல முடியவில்லை. நிச்சயம் அவ்வூர் பக்கம் செல்லும்போது புகைப்படமெடுத்துவந்து பதிவிடுகிறேன்.

      நீக்கு
  3. அம்மரம் வாளரங்கா மரம் எனப்படும். முருங்கைக்காய் போல் நீண்டு உருளை வடிவில் காய் இருக்கும். உள்ளே வட்ட வடிவாக விதை இருக்கும். சரியா?

    பதிலளிநீக்கு
  4. அம்மரம் வாளரங்கா மரம் எனப்படும். முருங்கைக்காய் போல் நீண்டு உருளை வடிவில் காய் இருக்கும். உள்ளே வட்ட வடிவாக விதை இருக்கும். சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி.

      பெயர் தெரியாததால் அம்மரம் "பெயர் தெரியா மரம்" என்றே அழைக்கப்படுகிறது. "வாளரங்கா மரமாக" இருப்பதற்க்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

      நிச்சயம் இப்பதிவின் தொடர்ச்சியாக ஒரு விரிவான அலசலாக ஒரு பதிவை எழுதுவேன். அப்போது மரத்தின் நிழற்படத்துடன் கூடிய அனைத்து தகவல்களையும் தருகிறேன்.

      நீக்கு
  5. வாளரங்கய் என்பது கொடி இனத்தைச்சேர்ந்த்து.காய்கள் தட்டையாகவும் நீண்டும் இருக்கும்.தம்பி கூறியதை போல மரம் அல்ல.

    பதிலளிநீக்கு
  6. தம்பி ரவிசாய் சொன்னது போல அம்மரம் வாளரங்காய் மரம் அல்ல.வாளரங்காய்
    என்பது கொடிய்னத்தைச் சேர்ந்தது.நான் சிறுவனாக இருந்த போது எங்கள் தோட்டத்தில் வாளரங்காய் கொடி இருந்தது. அதன் காய்கள் பட்டையாகவும் நீண்டும்
    இருக்கும்.முற்றிய விதைகளை சாம்பாரில் போட்டு உண்ணலாம்.

    பதிலளிநீக்கு
  7. என் தாத்தாவும் கூறினார் வாளரங்கா கொடி என்று.அவர் அதை தோட்டத்தில் நிறைய போட்டதாக கூறினார்

    பதிலளிநீக்கு
  8. வாளரங்காய் கொடிதான்....தம்பட்டையவரை....ஈசல்கொட்டை....கோழியவரை என பலபேர் இதற்குண்டு.....வாளரங்குறிச்சி என்று இக்கொடியின் பெயரில் ஊர் இருப்பதை கண்டுபிடித்தேன்....

    பதிலளிநீக்கு