வியாழன், 17 ஜனவரி, 2013

நாசமாய்போகட்டும் தமிழ்நாடு அரசு..!!


பின்ன என்னங்க எதுவும் ஒரு அளவுக்குதான். ஒவ்வொரு வருசமும் புதுசு புதுசா சாராயக் கடையை அதிகரிச்சிகிட்டே போனா என்ன அர்த்தம். அதிகாரம் கைல இருந்தா என்ன வேணும்னாலும் செய்யலாமா..!!?

மொதல்ல என்னடானா ஒரே ஒரு சாராயக்கடைதான் இருந்துச்சு இந்திரா நகர்ல(நெய்வேலி). அதுவும் சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில. இந்த நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையா வேற அறிவிச்சிருக்காங்க. அடுத்து கொஞ்ச வருசத்துல குடிகார மூதேவிங்க எண்ணிக்கை அதிகமாகி வருமானம் அதிகரிச்சதால பக்கத்துலயே இன்னொரு சாராயக்கடையை தொடங்கி இந்த வெளங்காவெட்டிகள ஊக்குவிச்சாங்க. இந்த மூதேவிகளும் குடிச்சே நாசமாபோறாங்க.

இந்திரா நகர பாத்தீங்கனா நல்லா வளர்ந்த நகர்(Town) புறம் மாதிரி இருக்கும். ஆனா, இந்த நாசமா போற அரசாங்கம் இப்ப என்ன பண்ணியிருக்குனா மூனாவதா ஒரு சாராயக்கடையை ஆரம்பிச்சிருக்காங்க. இந்த கடை இந்திரா நகர்ல இல்ல வடகுத்துல. இதுவும் அதே நெடுஞ்சாலை ஓரமாதான் இருக்கு. இந்த கடையோட பெயர் பலகைல பதிவு எண் எழுதப்படவில்லை. வாங்கும் சாராயத்திற்க்கு உரிய இரசீதும் கொடுக்கமாட்டாங்கலாம். இந்த கடையை ஆரம்பிச்சு கிட்ட தட்ட எட்டு மாசம் ஆகுதாம். மதுக்கூடம்(Bar) ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆகுதாம். இந்த எட்டு மாசமா பதிவு எண் இல்ல, இரசீதும் இல்ல.

வடகுத்து சுத்தமான கிராமம். இங்க சாரயக்கடை தேவையா..!!? ஒருவேளை குடிகாரர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்க இந்த திட்டமா..!!?. போறபோக்க பாத்தா “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”னு சொன்ன பழமொழிக்கு இணையா “சாரயக்கடை இல்லாத ஊருடன் சகவாசம் வேண்டாம்”னு தமிழக அரசு விளம்பரப்படுத்தும் போலிருக்கு.

சமீபத்துல தமிழக முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க, தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் அனைத்து சாராயக்கடைகளும் மூடப்படும்னு. ஒருவேளை தேசிய நெடுஞ்சாலையைத் தவிர மத்த நெடுஞ்சாலைகளில் அடிபட்டு செத்தா தப்பு இல்லனு நெனச்சிருப்பாங்க போலிருக்கு.

சரி அத விடுங்க, அறிவிப்பு வரவேற்க்க கூடியதுதான். ஆனால், எங்க பகுதியில இருக்குற இந்த சாராயக்கடைகளை கண்டிப்பா மூட மாட்டாங்க. ஒருவேளை அடிக்கடி போராட்டம் பன்னி தொந்தரவு கொடுத்துகிட்டே இருந்தா, கடையை வேற இடத்துக்கு மாத்துவாங்களே தவிர சுத்தமா மூடமாட்டாங்க. ஏன்னா நம்மாளுங்க வீணாபோறதுல அவ்ளோ சந்தோசம்.

குடியை வளர்க்கும் தமிழ்நாடு அரசு நாசமாய் போகட்டும்

நன்றி : கூகிள் [படம்]

10 கருத்துகள்:

 1. அன்புன்னு பேர் வச்சிட்டு இப்படி எரிஞ்சு விழுந்தா எப்படி:)

  அரசுக்கு வருமானம் தேவை.நமக்கு வன்முறைகள்,உயிர்பலிகள்,கலாச்சார சீர்குலைவு நிகழாமல் இருக்கனும். இரண்டுக்கும் தீர்வு என்ன என்று யோசிப்போமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேற என்னங்க செய்ய சொல்றீங்க.. ஆத்திரத்தையும், ஆதங்கத்தையும் எழுத்து வடிவத்துல கூட காட்டலேனா அப்புறம் எதிர்ப்பே இல்லைனு ஆகிவிடாதா..!!?

   அரசு வருமானத்துக்கு ஆயிரம் வழியை உருவாக்கலாங்க..

   வன்முறை,உயிர்பலி,பண்பாட்டு சீர்குலைவுகளுக்கு மிக முக்கிய காரணிகளில் மதுவை தவிற்க்க இயலாது. மதுவை ஒழிப்பதின் மூலமாக இவற்றை ஓரளவிற்கு கட்டுபடுத்தலாம்..

   நீக்கு
 2. sabash sariyana podu pottinka ponga. Nichayam Neenga sonnathu nadakkum. athil ellalavum santhegame kidayathu

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு நன்றி.

   எப்படியாயினும் நல்லது நடந்தால் மகிழ்ச்சி..

   நீக்கு
 3. இப்படி கிடைக்கிற வறுமானத்தில் தான் ..இலவசங்களை தரப்படுவதாக சொல்கிறார்களே...இதுபோன்ற குடிபழக்கத்தால் குடல்,ஈரல் போன்ற உறுப்புகள் பாதிப்பால் அரசாங்க மருத்துவ மனைகளில் மருத்துவம் செய்ய வந்தால் , இதற்க்குமல்லவா செலவு செய்ய வேண்டும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு நன்றி.

   நாம் சிந்தித்து வாக்களிக்காத வரை, சீரழியப்போவது நிச்சயம்.

   நீக்கு