ஒரு தலைவலிக்கு எத்தனை தீர்வுகள்...!!!?? முழுவதும் படிச்சுபாத்து உங்களுக்கு அந்த தீர்வு சரியா இருக்கும்னு தெரிஞ்சிக்கோங்க..
M மிளகுடன் வெல்லம்
சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி ,தலை பாரம் குணமாகும் .
M மிளகை அரைத்து அதனை
தலையில் பற்று போட்டால் தலை வலி குணமாகும் .
M மிளகை சுட்டு அதன்
புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.
M தேன் தவிர எலுமிச்சை, புதினா, போன்ற
பொருட்களும் தலைவலிக்கு நிவாரணம் தரும் மருந்தாக செயல்படுகின்றன.
M எலுமிச்சையும், தேனும் கலந்து தண்ணீர் சேர்த்து
ஜூஸ் சாப்பிடுவது தலைவலிக்கு சிறந்த மருந்தாக அமையும்.
M எலுமிச்சையை பிழிந்து
தலையில் பற்று போட்டால் தலைவலி சிறிதுநேரத்தில் குணமடையும்.
M புதினா சிறந்த இயற்கை
மருந்தாக செயல்படுகிறது. புதினா இலையை டீ போட்டு குடித்தால் தலைவலிக்கு நிவாரணம்
கிடைக்கும்.
M நொச்சி இலையைக்
கசக்கித் தலையை வைத்துக் கட்டினால் தலைபாரம், கழுத்து
நரம்புக் கசிவு போகும்.
M தலைவலி இருப்பவர்கள் சூடான 1 கப் காபியில் அரை
எலுமிச்சைப் பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால்
பிறகு தலைவலியே வராது.
M தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில்
காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன
அகலும்.
M ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை
அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால்
குணமாகும்.
M தலைவலி, மூக்கடைப்பு நீங்க: நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு
எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து
அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.
M தலைப்பாரம் குறைய:
நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம்
குறையும்.
M ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி
வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.
M தலைபாரம், நீரேற்றம் நீங்க: இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி
தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.
M கடுமையான தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு
2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால்
தலைவலி குணமாகும்.
குறிப்பு : இத்தீர்வுகள் அனைத்தும் நான் இணையத்தில் படித்தவை.. இன்னும் எந்த தீர்வையும் முயற்ச்சி செய்யவில்லை.
.
.